வீட்டு ரத்த மாதிரி சேகரிப்பின் நன்மைகள் அறிவோமா?
சர்வதேச அளவில் கொரோனா பெருந்தொற்றுத் தொடங்கியது முதல், ஏராளமான நோயாளிகள், சோதனை ஆய்வகங்களுக்குச் செல்வதையே முற்றிலுமாகத் தவிர்த்து விடுகின்றனர். இதற்குக் காரணம், இது பல பிரிவினருக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அடங்குவர். எனவே பல நோயறிதல் மையங்கள் மற்றும் மருத்துவப் பராமரிப்பு வழங்குநர்கள் வீட்டில் என்னென்ன மருத்துவச் சேவைகள் வழங்கப்பட [...]