ஒரு மனிதன் நோயின்றி வாழ்வதே மிகப் பெரிய செல்வம் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், நோய்களும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது. எனவே நோய்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையும் மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. மருத்துவ துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முன்னேற்றங்களுடன் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அனைத்தும் நியாயமான செலவில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள மக்கள் பலர் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள இந்தியாவை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியா இப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள ஒரு பொன்னான இடமாக கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் “மருத்துவ சுற்றுலா” தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகள் பெரும்பாலும் வெளிநாட்டினரை கவர்ந்து வருகிறது. எனவே நாளுக்கு நாள் இங்கு மருத்துவ சுற்றுலா வரும் வெளிநாட்டினரின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் என்னென்ன பிரபலமான சிகிச்சைகள் உள்ளன?, அந்த சிகிச்சைகளுக்கு தேவையான பரிசோதனை முறைகள் என்னென்ன? மருத்துவ சுற்றுலாவாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன? போன்ற விஷயங்களை இந்த வலைத்தளம் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.