மூளையை மறுசீரமைக்கும் நினைவாற்றல் நடைமுறைகள்
மனிதர்களின் வாழ்க்கையானது குழந்தை வளர்ப்பு, பணிச்சூழல், நண்பர்கள், பொழுதுபோக்குகள், பிரச்சினைகள், அழுத்தம் என ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய அன்றாட நிகழ்வுகளால், மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது. இந்தப் பரபரப்பான, அவசரகதியிலான போட்டி உலகில், தியான பயிற்சியை மேற்கொள்வதற்கு யாருக்கு இங்கே நேரம் உள்ளது. நமது வாழ்க்கைமுறைகளில் உள்ள அழுத்தங்கள், உறக்க நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, பதட்டத்தை அதிகரித்து, நம்மை மனச்சோர்வுக்கு உட்படுத்தி விடும். இதனை, நாம் எளிய நினைவாற்றல் பயிற்சிகளின் இந்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய இயலும்.
எந்த இடத்தில் நாம் சிக்கிக் கொள்கிறோம்?
நம் மூளையின் இயல்புநிலைப் பயன்பாடானது சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது வாழ்க்கையில் நாம் அழுத்தங்களை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.
நாம் தன்னிச்சையான செயல்பாடுகளில் இருக்கும்போது என்ன நினைக்கிறோம், நமது சிந்தனைகள், நம் உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகளுடன் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதில், நாம் போதிய கவனம் செலுத்துவது இல்லை. அதற்குப்பதிலாக, நம் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதால், அது சில தருணங்களில் எரிச்சல் மற்றும் கவலை நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இது கடந்தகாலம் குறித்த சோகத்தையும், எதிர்காலம் குறித்த பயத்தையும் நம்முள் உருவாக்குகிறது.
இந்த இடத்தில் தான் மனந்தெளிநிலை எனப்படும் நினைவாற்றல் பயிற்சிகள் நமக்குப் பேருதவி புரிவதாக அமைகின்றன. நமது எண்ணங்கள், உணர்வுகள், உடல் தொடர்பான உணர்ச்சிகள், நடத்தைகள் உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்த, நினைவாற்றல் பயிற்சிகள் உதவுகின்றன. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அழுத்தங்களுக்கு நாம் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை நிர்ணயிக்க, இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன. மனந்தெளிநிலைப் பயிற்சிகளானது, மூளைக்கு ஏற்படும் பயம், பதட்ட நிலையைக் குறைத்து, நல்வாழ்வு உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.
மனந்தெளிநிலைப் பயிற்சிகளானது நமது மூளையை மறுசீரமைக்க உதவுகிறது. இது மன அழுத்தத்திற்கு நாம் எதிர்வினையாற்றும் முறையை மேம்படுத்துகிறது. கடினமான உணர்ச்சிகளையும், வலிப்பாதிப்புகளையும் நிர்வகிக்க உதவுகிறது. மேலும், மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளவும் வழிவகுக்கிறது. மூளையின் வேதியியல் பண்புகளை மேம்படுத்தும் நினைவாற்றல் பயிற்சிகள்.
நினைவாற்றல் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், காமா- அமினோபியூட்டிரிக் அமிலம் (GABA) எனும் நியூரோடிரான்ஸ்மீட்டரின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாக, ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த GABA நியூரோடிரான்ஸ்மீட்டர், மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தில் (CNS) முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இது மூளையை அமைதிநிலையில் வைத்திருக்க உதவுகிறது. டோபமைன், செரடோனின் உள்ளிட்ட ஹார்மோன்களின் நேர்மறையான உணர்ச்சிகளை அனுபவிக்கப் பேருதவி புரிகிறது.
மூளையை மறுசீரமைக்க உதவும் மனந்தெளிநிலைப் பயிற்சிகள்
பயம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மனந்தெளிநிலைப் பயிற்சிகள்
சாத்தியமான அச்சுறுத்தல் தொடர்பான உணர்ச்சித் தகவல்களை, நாம் மேற்கொள்ளும்போது, அந்தத் தகவலைச் செயலாக்கவல்ல மூளையின் முதல் அமைப்பு அமிக்டாலா ஆகும். அமிக்டாலா பகுதியானது, படங்கள் மற்றும் ஒலிகளை மதிப்பீடு செய்கிறது. அச்சுறுத்தல் உணர்வு கண்டறியப்பட்டால், அது ஹிப்போகாம்பஸ்க்கு, தகவல்களை அனுப்புகிறது. இது அச்சுறுத்தலுக்குத் தயாராக, உடலைச் செயல்படுத்துகிறது. வழக்கமான நினைவாற்றல் பயிற்சியுடன் அமிக்டாலாவின் அளவு சுருங்குகிறது. அமிக்டாலாவின் அளவு சுருங்குவதனால், அமைதி அதிகரிப்பு, பதட்டம் குறித்த சிறந்த மேலாண்மை மற்றும் நல்வாழ்வின் உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
தற்போதைய தருணத்துடன் இணைந்திருக்க, மனந்தெளிநிலைப் பயிற்சிகள் உதவுகின்றன.
வாழ்க்கையின் மன அழுத்த பாதிப்பு அதிகரிக்கும் போது, அதை எதிர்கொள்வது மிகவும் சவாலான நிகழ்வாகும். கடந்த காலம் குறித்த சோகங்களும், எதிர்காலம் குறித்த பயங்களும், நம் மனதை அலைபாய வைக்கின்றது. இதன்காரணமாக, நம்மைத் தொடர்ந்து விழிப்பு நிலையில் வைக்கிறது. பகல்நேரத்தில், நாம் விரும்பும் நபர்களுடன், நாம் முடிக்க வேண்டிய வேலையுடன் இருப்பதில் இருந்து நம்மைத் திசைதிருப்புகிறது. மூளையின் இன்சுலா மற்றும் சிங்குலேட் கார்டெக்ஸ் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் மனந்தெளிநிலை மூலம் உடல் உணர்வுகளை அறியவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும் வாசிக்க : மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?
கற்றல் மற்றும் ஞாபகச் சக்தியை எளிதாக்கும் மனந்தெளிநிலைப் பயிற்சிகள்
மூளையின் சாம்பல் நிற நினைவகப் பகுதியானது, வயது அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரப்பு குறைகிறது. இதன்காரணமாக, நினைவகச் செயல்முறைகள், உணர்ச்சிகளின் கட்டுப்பாடு மற்றும் முன்னோக்கு நிகழ்வுகளைப் பாதிக்கிறது. இதன்விளைவாக, வயதானவர்களுக்கு, ஞாபகசக்தியானது குறைகிறது. மனந்தெளிநிலைப் பயிற்சிகளானது, ஹிப்போகாம்பஸின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது மேம்பட்ட கற்றல், நினைவகம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு வழிவகுப்பதாக உதவுகிறது.
மனந்தெளிநிலைப் பயிற்சிகள், வலி மேலாண்மைக்கு உதவுகிறது
மனந்தெளிநிலைப் பயிற்சிகள், நியூரோபிளாஸ்டிசிட்டியைப் பெரிதும் மேம்படுத்துகின்றன. மூளைக் காயத்தில் இருந்து மீள்வதற்கு, மூளையின் சேதமடைந்த பகுதிகளைக் குணப்படுத்துவதற்கும், இழந்த செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நினைவாற்றல் பயிற்சிகளானது, உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் மனச்சோர்வினைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வலியைக் கட்டுப்படுத்துகிறது.
மனந்தெளிநிலைப் பயிற்சிகளைத் துவக்குவது எப்படி?
நீங்கள் உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பின், உங்களுக்கென்று பல கற்றல் விருப்ப முறைகள் உள்ளன. இது உங்கள் கவனத்தை வழிநடத்தும் அறிவுரைகளைக் கேட்பதோடு, அதனைப் பின்பற்றுவதற்கும் எளிமையானதாக அமைகின்றன.
சுத்தமான தரையில், அமைதியான மனநிலையில் அமர்ந்து, ஒருமுகத்தன்மையில் கவனத்தைச் செலுத்தி, நினைவாற்றல் குறித்த விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்கள், பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.
- வசதியாக அமர்ந்து, கண்களை முழுமையாக மூடி, உங்கள் சுவாசத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, வயிற்றின் இயக்கத்திலும் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது.
- நீங்கள் அமைதியான மனநிலையில் அமர்ந்து சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, உங்களின் எண்ணங்கள், உணர்வுகள், உடல் சார்ந்த உணர்ச்சிகள் உள்ளிட்டவை, நீல வானத்தில் கடந்து செல்லும் மேகங்களைப் போல, உங்கள் மனதைக் கடந்து செல்லும்.
- இந்த நிலைக்குப் பின் என்ன நிகழ்கிறது, நம் மனம் எங்கே செல்கிறது என்பதை அறிய ஆர்வமாகவும், வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
- நீங்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிகள் குறித்த தீர்ப்பு மற்றும் மதிப்பீட்டைச் சிறிதுநேரம் தள்ளிவைக்கவும்.
- நீங்கள் எதையும் வித்தியாசமாக எதிர்பார்க்காமல், கிடைத்த உணர்வுகளை, வித்தியாசமானதாக மாற்றாமல், இருப்பதை அப்படியே அனுபவிக்க முயற்சி செய்ய வேண்டும்.
- உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகளை இரக்கத்துடன், கருணையுடனும் கையாளுங்கள்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கையாண்டு, மூளையின் கட்டமைப்பை மறுசீரமைத்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…