கீல்வாதம் – சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆர்தரைட்டிஸ் எனும் கீல்வாத பாதிப்பிற்கு ஹோமியோபதி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளின் மூலம் தீர்வு காணப்பட்டாலும், உணவுமுறையே, நிரந்தரத் தீர்வினைப் பெற முடிகிறது. பாதிப்புகளுக்கு ஏற்ற சிகிச்சைமுறையானது, அதற்கு மட்டுமே பலன் அளிப்பதாக உள்ளது. ஆனால் நாம் சரிவிகித ஊட்டச்சத்துகள் கொண்ட சீரான உணவுமுறையைப் பின்பற்றும்பட்சத்தில், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அமைய பேருதவி புரிகிறது.
கீல்வாத பாதிப்பு என்பது நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். இதற்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்வது அவசியம் ஆகும். சிகிச்சைகள் மற்றும் மருந்து முறைகளின் மூலம் வலி உணர்வு மற்றும் விறைப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டும் போதாது, உணவு உட்கொள்ளல் முறையிலும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சில வகை உணவுகள் வலி மற்றும் விறைப்பு உணர்வின் தாக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுவது போல, சில வகை உணவுகள், அதன் தாக்கங்களை அதிகரிக்கவும் செய்துவிடுகின்றன. எனவே மேற்கொள்ளும் உணவுமுறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.
மேலும் வாசிக்க : குழந்தைகளில் காணப்படும் ஹைபர்டென்சன் பாதிப்பு
கீல்வாத பாதிப்பு கொண்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவுமுறை
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, கொடிமுந்திரி எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C சத்து அதிகமாக உள்ளன. இந்த வகைப் பழங்கள், மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் வலி உணர்விற்குச் சிறந்த நிவாரணியாக விளங்கி வருகிறது.
வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் வெள்ளைப்பூண்டு மற்றும் வெங்காயத்தின் பயன்பாடு, கீல்வாத பாதிப்பு மற்றும் மூட்டு வலிப் பாதிப்பிற்குச் சிறந்த தீர்வை அளிக்கிறது.
பீன்ஸ் வகைகள்
பீன்ஸ் உணவில் அதிக அளவில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. மூட்டு வலியை அதிகரிக்க உதவும் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளுக்குச் சிறந்த மாற்றாக, பீன்ஸ் விளங்கி வருகிறது. பீன்ஸ் உணவில் ஃபோலிக் அமிலம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதாக உள்ளது.
கொட்டை உணவுகள்
சைவ உணவுப் பிரியர்களின் சிறந்த புரத உணவுகளாக, கொட்டை உணவுகள் விளங்குகின்றன. கொட்டை உணவுகளில் மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவல்ல ஆல்பா – லினோலெனிக் அமிலம் அதிகம் உள்ளன. செரிமான பாதையால் எளிதாக உறிஞ்சவல்ல, புரதங்கள் கொட்டை உணவுகளில் அதிகம் உள்ளன. இந்தப் புரதங்கள் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும்.
கிரீன் டீ
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைப் பயக்கவல்லப் பொருட்கள் கிரீன் டீயில் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, கீல்வாத பாதிப்பு கொண்டவர்களுக்கு, இது இனிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது. கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள், வீக்கம் அல்லது அழற்சி உணர்வைக் கட்டுப்படுத்துவதுடன், குருத்தெலும்பு சிதைவைக் கூடுமானவரைத் தாமதப்படுத்துகிறது.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
வெள்ளைச் சர்க்கரை
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மூட்டுப் பகுதிகளில் வலி உணர்வு மற்றும் வீக்கத்திற்கு வழிவகுப்பதால், வெள்ளைச் சர்க்கரைப் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.
பதப்படுத்தப்பட்ட / வறுத்த உணவுகள்
பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவு வகைகள் உடலின் தற்காப்பு நுட்பமான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டையே, கேள்விக்குரியதாக மாற்றி விடுகிறது. இதன்காரணமாக, மூட்டுப்பகுதிகளில் வலி உணர்வு மற்றும் கீல்வாத பாதிப்பு தீவிரம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
டிரான்ஸ் கொழுப்புகள்
இதய ஆரோக்கியத்திற்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தவல்லதாகவும், அழற்சி அல்லது வீக்க உணர்வைக் கட்டுப்படுத்த, டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவு வகைகள், வீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால், மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
குளுட்டென் (பச்சையம்)
முடக்குவாத பாதிப்பின் தீவிரத்தை, பச்சையம் நிறைந்த உணவு வகைகள் அதிகரிப்பதன் காரணமாக, இந்த உணவு வகைகளைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
கீல்வாத பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க, அதற்கேற்ற உண்வுமுறையைப் பின்பற்றி ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…