போதிய உடற்பயிற்சிகள் இல்லாததால் ஏற்படும் நோய்கள்
உடற்பயிற்சியின் நன்மைகள் தெரிந்தும், மக்கள் அதை அன்றாட பழக்கமாக ஏற்க தயங்குகின்றனர்.
போதிய அளவிலான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாததால், நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் வகையிலான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை அறிமுகமானது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.அலுவலகத்திற்குச் செல்லுதல், அங்கு மாடிப்படிகளில் ஏறுதல், அங்கும் இங்கும் நடத்தல், பணி முடிந்தபின் மீண்டும் வீட்டிற்குத் திரும்புதல் உள்ளிட்ட உடல் உழைப்புகளாவது இருந்தன. இந்த உடல் செயல்பாடுகள், உடற்பயிற்சி ஆக அமையாதபோதிலும், அதற்கு ஒத்த அளவினதாகவே இருந்து வந்தன.
ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வந்ததிலிருந்து, உடல் உழைப்பு முற்றிலும் குறைந்துவிட்டது.ஓரிடத்தில் அமர்ந்தவாறே, மக்கள் நீண்ட நேரம் இருப்பதினால், அவர்களின் உணவுமுறையிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. போதிய உடல் உழைப்பு இல்லாததனால், பல்வேறு நோய்கள் அவர்களை ஆட்கொள்ளத் துவங்கிவிட்டன.
போதிய உடல் உழைப்பு இன்மையால் ஏற்படும் நோய்கள்
உடற்பருமன்
உடலுக்குப் போதிய உழைப்பு இல்லாததால், சாப்பிடும் உணவின் அளவும் வெகுவாகக் குறைகிறது. இதன்காரணமாக, நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்க, புகையிலைப் பொருட்களின் அதீதப் பயன்பாட்டால், உடற்பருமன் பாதிப்பு ஏற்படுகின்றது.
உலகச் சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டு உள்ள தரவுகளின்படி, ஆண்டிற்கு 2.8 மில்லியன் மக்கள் அதிக உடல் எடைக் காரணமாக, மரணம் அடைவதாக வெளியாகியுள்ள செய்தி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாத நிகழ்வு, உடல்நலப்பாதிப்புகளை வேண்டி விரும்பி வரவேற்கும் விதமாக அமைந்து உள்ளது.
ஆஸ்துமா
போதிய அளவிலான உடற்பயிற்சி இல்லாதது, உடலில் கொழுப்பு படியும் வீதத்தை அதிகரிக்கின்றது. இந்த அதிகப்படியான கொழுப்பானது, உதரவிதானம் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது, ஆஸ்துமா பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இந்த அதிகப்படியான கொழுப்பு, நுரையீரலின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, மூச்சுக்குழாயைச் சுருக்கமடையச் செய்து, செரிமான பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றன.
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு
குறைந்த அளவிலான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி நிகழ்வானது, உடலை, இன்சுலின் ஹார்மோனிற்கு எதிர்ப்பாக மாற்றி விடுகின்றது. இதன்காரணமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது. இது இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு வழிவகுக்கின்றது.
2017ஆம் ஆண்டின்படி, இந்தியாவில் நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 72.9 மில்லியன் என்ற அளவில் உள்ளதாக, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாததன் காரணமாக, ஏற்படும் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பை, சரிவர கவனிக்காவிட்டால், அது மரணத்திற்கு வழிவகுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகக் கொழுப்பு , அதிக ரத்த அழுத்தம் = இதய நோய் பாதிப்பு
போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களின் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இது இதயத்திற்கான ரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜன் அளவையும் குறைத்து, மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
உயர்ரத்த அழுத்த பாதிப்பும், இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த குழாய்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, இதயத்திற்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பெருமளவில் குறைத்துவிடுகின்றது.
ஆஸ்டியோபோரோசிஸ்
உடற்பயிற்சிகள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போதிய உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்புகள் மேற்கொள்ளப்படாத போது, எலும்புகள் பலவீனம் அடைகின்றன. அதிகம் வளையும் போதோ, கடினமாக இருமும் போதோ அல்லது கீழே தவறி விழும் போது, எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எலும்புகளில் இருந்து அதிகளவிலான கால்சியம் இழக்கப்படுவதால், அவை விரைவில் உடையும் அபாயமும் உள்ளது.
கீழ் முதுகுவலி
கீழ் முதுகுவலி பொதுவான பாதிப்பாகும். இது குறுகிய காலமாகவோ நீண்ட காலமாகவோ இருக்கலாம்.இந்தப் பாதிப்பிலிருந்து விடுபட, சரியான சிகிச்சை என்பது அவசியமாகிறது. இதற்குச் சரியான சிகிச்சை வழங்கப்படாவிடில், வாழ்நாள் முழுவதும், இந்தப் பிரச்சினை இருக்கக்கூடும். கடினமான உடற்பயிற்சி அல்லது அதிக எடையைத் தூக்கும் போது, கீழ்முதுகுப் பகுதியில் கடுமையான வலி உணர்வு ஏற்படும்.
புற்றுநோய்
போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இதில் மார்பகம், குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை, உணவுக்குழல், சிறுநீரகம், நுரையீரல், வயிறு ஆகிய பகுதிகளின் புற்றுநோய்கள் அடங்கும்.இந்தப் பாதிப்பில் இருந்து காக்க, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியமானது ஆகும்.
மேலும் வாசிக்க : உடல் செயல்திறனை அதிகரிக்கும் செயல்பாட்டுப் பயிற்சிகள்
பக்கவாதம்
மூளைச் செயல்பட, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் மிக முக்கியமானதாகும்.
மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த குழாய்கள் சுருங்குவதால், ரத்தத்தின் அளவு குறைகிறது. இதன்காரணமாக, பக்கவாதம் பாதிப்பு ஏற்படுகின்றது.
உடல் சுறுசுறுப்பாக இயங்க சில குறிப்புகள்
உடற்பயிற்சிப் பழக்கத்தை மெதுவாகத் துவங்கவும். நீண்ட நேரம் உடல் எவ்விதச் சலனமுமின்றி இருக்கும்பட்சத்தில், சொடக்கு எடுத்தல், ஏரோபிக் பயிற்சிகள், உடலின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதற்கேற்றவாறு உடற்பயிற்சியின் வேகத்தைச் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம், சிறிய அளவிலான உடல் உழைப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, உணவு இடைவேளையின் போது, 10 நிமிடங்கள் காலார நடத்தல், மாடிப்படிக்குச் செல்ல லிப்ட்களைப் பயன்படுத்தாமல், மாடிப்படிகளைப் பயன்படுத்த வேண்டும்.
உடற்தகுதியை மேம்படுத்தும் வகையிலான ஆன்லைன் வீடியோக்களைப் பார்க்க வேண்டும்.
வீடு மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களை, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஆதரிக்கும்பட்சத்தில் அவருக்கான ஈடுபாடும் அதிகரிக்கும்.
சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
உணவு உட்கொள்ளல் மற்றும் கலோரி எரித்தலைச் சரிபார்க்கவும்.
சரியான அளவில் உறக்கம் மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிப் பழக்கத்தை, வாழ்க்கையின் தினசரி நடவடிக்கையாக ஏற்றுக் கொண்டு, போதிய உடற்பயிற்சிகளைச் சரியான அளவில் செய்து, உடல்பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற்று, நல்வாழ்க்கை வாழ்வோமாக…