பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை எட்ட உதவும் குறிப்புகள்
நல்ல பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை என்பது நம் சூழலுக்கு ஏற்ற, பாதிப்பற்ற தீர்வைக் கண்டறிவதாகும். இச்சமநிலையைப் பேணுவதில், உங்கள் முன்னுரிமைகளை மதிப்பிடும் திறனே முக்கியமானது.
உங்கள் வாழ்க்கை, எப்போதும் வேலைப்பளு உடன் இருப்பதாக நினைக்கின்றீர்களா? அப்படி என்றால், நீங்கள் மட்டும் அந்த மனநிலையில் இல்லை. இந்தியாவில் 80 சதவீதத்தினர், அத்தகைய மனநிலையில் தான் இருப்பதாக, வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பணிச்சூழலுக்கும், வீட்டிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், வேலை – வாழ்க்கைச் சமநிலையில், திருப்தியான உணர்வு அடைவது என்பது குதிரைக்கொம்பு நிகழ்வாகவே உள்ளது.
நல்ல பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை
பணி – வாழ்க்கைச் சமநிலை என்பது, நமது தொழில்சார்ந்த விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட விசயங்களை மேற்கொள்ளப் போதுமான கால அளவு இருக்கும் நிலையே ஆகும். தொழில்சார்ந்தப் பணிகள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, உங்களுக்காக நேரத்தைச் செலவிடுவது, உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்மிற்குச் செல்வது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, உங்களது பொன்னான நேரம் மற்றும் உங்களது இருப்பை அளிப்பதைவிட, வேறு முக்கியமானது எதுவும் இல்லை.
காலையில் எழுவது, பணிக்குச் செல்வது, பணி முடிந்தபின் வீட்டுக்குத் திரும்புவது, இரவு உறங்கச் செல்வது என்ற வழக்கமான நடவடிக்கைகளையே, பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். இன்றைய அவசர யுகத்திற்கு, இந்தப் பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, மேற்கண்ட நடவடிக்கைகளுடன், பிரியமானவர்களுடன் நேரத்தைச் செலவிடுதல், தங்களுக்கெனச் சிறிது நேரத்தை ஒதுக்குதல், எப்போது புத்துணர்ச்சியுடனும், மனமகிழ்ச்சியுடன் இருத்தல், இரவில் போதுமான அளவிற்கு நல்ல உறக்கம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளும் அவசியமாகும்.
நல்ல பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலைக்கு மதிப்பு அளிக்கும் நிறுவனங்களில் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்றால், சில விசயங்களை, எப்போதும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அலுவலகத்தில் அலுவலக நேரத்தில், அந்த வேலைகளை மட்டும் செய்வது
ஊழியர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவர்களை நம்புவது
ஊழியர்களுக்கு நல்ல ஓய்வு, புத்துணர்ச்சி கிடைக்கும் பொருட்டு, அவர்களுக்கு உரிய விடுப்புகளை வழங்குதல்.
ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை, அவர்களின் விருப்பப்படி மேற்கொள்ளுதல்
ஊழியர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பின், அவர்கள் அதிலிருந்து விரைவில் வெளியேறும் பொருட்டு, அவர்களுக்குத் தேவையான அளவிற்கு இடைவேளை வழங்குதல்
உள்ளிட்ட அம்சங்களை, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்கள் பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைக் காக்க இயலும்.
சமநிலை ஏன் முக்கியம்?
நீங்கள் பணியிடங்களிலும், வாழ்க்கையிலும் சிறப்பான இடம் பிடிக்க வேண்டும் என்றால், பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பேணிக்காப்பது அவசியம் ஆகும். சில தருணங்களில், அதிக நேரம் வேலைச் செய்தால் மட்டுமே, சிறந்த வெளியீடுகளைக் காண முடியும் என்றால், அது சிறந்த வழிமுறையாக இருப்பதற்கான வாய்ப்பாக இருக்க முடியாது. ஊழியர், 8 மணிநேரம் அலுவலகத்தில் பணிசெய்கின்றார் என்றால், அந்நிறுவனம் எதிர்பார்க்கும் பணியின் தரத்தை, அந்த ஊழியரால் 8 மணிநேரத்திற்குள் வழங்கிட முடியாது.
ஊழியர், மாணவர், தொழில்முனைவோர் என யாராக இருந்தாலும், தான் எடுத்த வேலையைத் திறம்பட மேற்கொள்ள வேண்டுமெனில், அவர்கள் அந்த வேலையை மட்டும் செய்துகொண்டே இருக்காமல், இடையிடையே பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டால் மட்டுமே, அவர்களின் மூளைச் சிறப்பாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாது. அன்றைய நாள்முழுவதும் அவர்கள் சோர்வின்றிச் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
ஆரோக்கியமற்ற பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலையின் அறிகுறிகள்
ஆரோக்கியமற்ற பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலை, நம் மன ஆரோக்கியத்தில், எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் மற்றும் ஆளுமையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
அறிகுறிகளாவன.
எப்போதும் வேலைத் தொடர்பான சிந்தனை
பணி தொடர்பான எல்லைகளை நிர்வகிப்பதில் சிரமம்
வார இறுதி நாட்களும் மறந்து போதல்
தனிப்பட்ட உறவுமுறைகளில் சிக்கல்கள்
அதீத எதிர்மறை எண்ணங்கள்
எதிலும் ஆர்வமில்லாத நிலை
உள்ளிட்டவை, ஆரோக்கியமற்ற பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலையின் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலை எவ்வாறு மேம்படுத்துவது?
நீங்கள் ஆரோக்கியமற்ற பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலையால் பாதிக்கப்பட்டு இருப்பின், கீழ்க்கண்ட வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, சமநிலையை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
சிறந்த சமநிலை
பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலைத் தொடர்பாக, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கருத்துக்கள் இருக்கும். இதில் சமநிலையைச் சரியாகப் பேணிக்காப்பது என்பது கடும் சவாலான விசயம் ஆகும். அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுதல், சுய நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை ஒரே நாளில் செய்ய முடிந்தால், உங்கள் பணிச்சூழல்-வாழ்க்கைச் சமநிலைச் சிறப்பாக உள்ளது எனலாம்.
நீங்கள் விரும்பும் வகையிலான வேலையைத் தேடுங்கள்
வேலைச் செய்வது என்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்ற போக்கை மாற்றி, வேலைச் செய்வது என்பது பணம் சம்பாதிப்பதற்கும், நாம் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வத்ற்கான நிகழ்வு என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இந்தப் போக்கைக் கடைப்பிடித்து வந்தால், பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
உடல்நலத்தில் அக்கறைச் செலுத்துங்கள்
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை மறந்து, இளம் வயதில் வருமானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து உடல்நலத்தைப் புறக்கணித்தால், பின்னர் அதற்குப் பெரும் விலைக் கொடுக்க நேரிடும்.பணிநிமித்தமாகவும், உறவுமுறையிலும், மனதளவிலும் பெரிய பாதிப்பைச் சந்திப்பீர்கள்.
சமநிலையின் நேர்மறை விளைவுகள்
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
ஆரோக்கியமான பணிச்சூழல் மற்றும் வாழ்க்கைக்கு இடையேயான சமநிலையைப் பேணிக்காப்பதன் மூலம், மன அழுத்த பாதிப்பு குறைகின்றது.
எரிச்சல் உணர்வைக் குறைக்கிறது
அதிகமாக வேலைச் செய்யும் உணர்வினால், மனதில் சோர்வு எண்ணம் அதிகரிக்கின்றது. இது உங்களுக்கு எரிச்சல் உணர்வையும் தரவல்லது ஆகும். பணிச்சூழல் மற்றும் வாழ்க்கைக்கு இடையேயான சமநிலையை மேம்படுத்துவதன் மூலம், எரிச்சல் உணர்வு கட்டுப்படுவதோடு, பணி தொடர்பான அழுத்தங்களும் குறைகின்றன.
தனித்துவம் மேம்படுதல்
நீண்ட, நெடிய மன அழுத்தம் மற்றும் எரிச்சல் உணர்வானது, உங்களது வேலைத்திறனைப் பாதிக்கக் கூடும். பணிச்சூழல் மற்றும் வாழ்க்கைக்கு இடையேயான சமநிலையை மேம்படுத்துவதன் மூலம், உற்பத்தித்திறன் அதிகரிப்பதோடு, உங்களுக்கே உரித்தான தனித்துவமும் மேம்படும்.
சமநிலையை மேம்படுத்துவதற்கான குறிப்புகள்
நேர மேலாண்மை
பணி நடவடிக்கைகளில், உங்களின் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு, டைமர்ப் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தவும். இது உங்கள் பணிகளை, சிறு சிறு பிரிவுகளாக மாற்றி அமைப்பதன் மூலம், கவனச்சிதறல்கள் ஏற்படுவதைத் தடுக்கும். இதன்மூலம், கணிசமான அளவிலான நேரம் மிச்சமாகிறது.’
எல்லைகளை வரையறைச் செய்து கொள்ளுங்கள்
நீங்கள் வீட்டில் இருந்து வேலைச் செய்பவராக இருந்தாலும், அன்றைய நாளின் பணி நிறைவு நேரத்தைத் திட்டமிடுதல் சவாலான விசயம் என்றபோதிலும், அது மிகவும் இன்றியமையாத நடவடிக்கை ஆகும். உதாரணமாக, உங்களது பணிநேரம் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை என்றால், இதற்கு மேற்பட்ட நேரத்தில், அலுவல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
மேலும் வாசிக்க : சுய மருத்துவம் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?
தொழில்நுட்பப் பயன்பாடுகளைத் தவிர்த்தல்
பணிநேரத்தில், நம் கவனத்தைச் சிதறடிக்கும் வகையிலான வலைத்தளங்களைப் பயன்படுத்துதலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேற்கொண்ட பணியை மறுமதிப்பீடு செய்தல்
தற்போது மேற்கொள்ளும் வேலையில், உங்களுக்குப் போதிய ஆர்வம் இல்லை எனில், அதில் திருப்தி உணர்வை வழங்கும் வகையில் அதை எவ்வாறு மாற்றலாம் என்பதை ஆராய வேண்டும். இது முற்றிலும் சாத்தியம் இல்லை என்றபோதிலும், வேலையை மறுமதிப்பீடு செய்வதற்கு உதவும்.
இத்தகைய வழிமுறைகளை மேற்கொண்டு, உங்களது பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பேணிக்காக்க வேண்டுகிறோம்….