பணி – வாழ்க்கைச் சமநிலையில் மன அழுத்த மேலாண்மை
நல்லப் பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பேணிக்காப்பது என்பது சிலருக்குக் கடும் சவாலான நிகழ்வாக உள்ளது. பணியிடங்கள் மற்றும் வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் போது மன அழுத்த பாதிப்பின் வீதமும் அதிகரிக்கின்றது. நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதன் மூலமாகவே, நாம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட இயலும்.
ஆரோக்கியமான பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை அடையும் நிகழ்விற்கு, சர்வதேச நாடுகளும் முன்னுரிமை அளிக்கத் துவங்கி உள்ளன. உலகின் முன்னணி தொழில் வல்லுநர்கள் பெரும்பாலும் வாரத்திற்கு 50 மணி நேரத்திற்கு மேல் வேலைச் செய்கின்றனர், இது அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை என்றால் என்ன?
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை என்பது ஒருவரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்குச் சமமான முன்னுரிமை அளிக்கும் நிலையாகும்.இந்த நிலையை அடையவே, பெரும்பாலானோர் முயன்று வருகின்றனர். ஆனால், அதை அடைவது அவர்களுக்கு மிகச் சவாலான நிகழ்வாகவே உள்ளது.
பணியிடங்களில் அதிகப் பொறுப்புணர்வு
நீண்ட நேரம் பணிபுரிதல்
வீட்டிலும் அதிகப் பொறுப்புணர்வு
வீட்டில் குழந்தைகள் இருத்தல்
உள்ளிட்ட நிகழ்வுகள், பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பாதிக்கவல்லக் காரணிகள் ஆகும்.
உங்களின் பணிச்சூழல் மற்றும் வாழ்க்கைக்கு இடையேயான ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது ஆகும். இந்த ஆரோக்கியமான சமநிலையைப் பராமரித்தலின் மூலம் மன அழுத்தம் குறைகின்றது உள்ளிட்ட நேர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. இது அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என இருவருக்குமுண்டான பலன்களை அளிப்பதாக உள்ளது.
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையை, ஊழியர்களிடையே ஊக்குவிக்கும் நிறுவனங்கள், தங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த இயலும். இதன்மூலம், நிறுவனத்திற்கு அதிக விசுவாசமாக இருக்கும் ஊழியர்கள் அதன் பலனை நிச்சயம் அனுபவிக்க முடியும். நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஊழியர்களுக்குத் தொலைதொடர்பு போன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் சிறந்த பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையை உருவாக்கலாம்.
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை ஏன் முக்கியம்?
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பராமரிப்பதன் மூலம், கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன.
மன அழுத்த பாதிப்பு குறைகின்றது
செய்யும் வேலையில் திருப்தி ஏற்படுகின்றது.
மேம்பட்ட கவனம் மற்றும் உற்பத்தித்திறன்
சுயப் பாதுகாப்பு மற்றும் உறவுகளைப் பராமரிப்பதற்கு அதிக நேரம் கிடைத்தல்’
உடல் மற்றும் மனநல ஆரோக்கியம் சிறந்து விளங்குதல்.
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைக் கவனிக்கத் தவறுவதன் மூலம் மனச் சோர்வு, பதட்டம், செயல்திறனில் குறைபாடு, உறவுகளில் சிக்கல் உள்ளிட்ட மிகப்பெரிய எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை இல்லையெனில், ஊழியர்களிடையே பதட்டம், மன இறுக்கம், எரிச்சல் உணர்வு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி, வேலைக்குப் போகாத நிலை, குறைந்த உற்பத்தித்திறன் உள்ளிட்டவைகளுக்குக் காரணமாகி, இறுதியில் வேலையை இழக்கச் செய்துவிடுகிறது. இதன்மூலம் அது உங்களுக்கும், நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கும் பெரும் இழப்பாக அமைந்துவிடுகிறது.
சமநிலையைப் பாதிக்கும் காரணிகள்
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பாதிக்கவல்லக் காரணிகள், மன அழுத்த அளவையும் அதிகரித்துவிடுகின்றன.
அதிகப் பணிச்சுமை
அளவுக்கு அதிகமான பணிநடவடிக்கைகள், குறைந்த நேரத்தில் அதிகப் பணி இலக்குகள், நீண்ட நேரம் உழைத்தல்
தனிப்பட்ட கோரிக்கைகள்
குடும்பம் சார்ந்தப் பணிகள், சமூகப் பொறுப்புகள், வீட்டு வேலைகள்
எல்லைகளை வரையறுக்க இயலாமை<h/3>
தனிப்பட்ட விசயங்கள் மற்றும் பணி நடவடிக்கைகளுக்குப் போதிய நேரம் ஒதுக்காமை
சுயப் பாதுகாப்பில் கவனமின்மை/
ஓய்வு எடுக்கவோ அல்லது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவோ போதிய நேரம் இல்லாமை
கட்டமைப்பதில் சிக்கல்
நேரத்தை நிர்வகிப்பதிலும் மற்றும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதிலும் தவறான அணுகுமுறை மேற்கொள்ளுதல்
இத்தகையக் காரணிகள், மன அழுத்த அளவையும் அதிகரித்துவிடுகின்றன.
பணியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம்
பணிச்சார்ந்த மன அழுத்தமானது, பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன.
நீண்ட நேரம் வேலைச் செய்தல்
நீண்ட நேரம் வேலைச் செய்வதன் மூலம், நாம் செய்யும் வேலையின் மீதே ஒருவிதமான வெறுப்பு தோன்றுகிறது. இது உடல் மற்றும் மனநல ஆரோக்கியக் குறைவிற்கும் காரணமாக அமைகின்றது.
நிதி ஆதாரம் குறைவு
அதிக நேரம் வேலைச் செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில், நாட்டின் பெரும்பாலானோர்ப் பணியாற்றி வருகின்றனர்.ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போன்று போதிய அளவிலான பணம் வராததால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மரியாதையின்மை
இன்றைய கார்ப்பரேட் யுகத்தில், பெரும்பாலான பணியிடங்களில் இருக்கும் ஊழியர்கள், சக ஊழியர்களை அடிமையாகவே நடத்தும் சூழ்நிலையே நீடித்து வருகிறது. பணியாற்று ஊழியர்களுக்கு, அவர்கள் சார்ந்த நிறுவனமும், போதிய அளவிலான மரியாதையை வழங்குவதில்லை. இதன்காரணமாக, ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இலக்கை அடைய போதிய கால அளவு ஒதுக்காமை
ஒவ்வொரு பணியையும் குறித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது வழக்கமான நடவடிக்கை. ஆனால், அவசரத் தேவையின் காரணமாக, ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை ஒதுக்கி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது, ஊழியர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலையும், உடல் மற்றும் மனப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
மன உளைச்சல், மன நலப்பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் காரணிகளைப் பட்டியலிடுதல், நேரத்தைச் சரியாக நிர்வகித்தல், எந்தவொரு சூழ்நிலையையும் தாங்கிக் கொள்ளும் பொருட்டு மனதை ஒருநிலைப்படுத்துதல், பணி தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எழும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண, நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியுடன் எப்போதும் தொடர்பில் இருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், அலுவலகங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே வேலைப் பார்ப்பவரா?
அலுவலகத்திற்குச் சென்று வேலைப் பார்ப்பவர்களுக்கும், அதேநேரத்தில் வீட்டில் இருந்துகொண்டே வேலைப் பார்ப்பவர்களுக்கும் இடையே ஒரே அளவிலான மன அழுத்த பாதிப்புகள் நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்கண்ட காரணிகளைச் செயல்படுத்துவதன் மூலம், மன அழுத்த பாதிப்பைக் குறைக்க இயலும்
வேலை இடத்தை நிர்ணயிக்க வேண்டும்
வேலைச் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். இதன்மூலம், நமது செயல்திறன் அதிகரிக்கும். அவ்வப்போது உங்கள் வீட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்து, மீண்டும் வேலைப் பார்க்கும் இடத்தில் அமர வேண்டும். இதன்மூலம், அந்த இடத்திற்கு வந்தாலே, வேலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
வழக்கத்தைப் பழக்கத்திப்படுத்திக் கொள்ளுங்கள்
வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் நடைமுறையானது, உங்களது வழக்கமான வாழ்க்கைமுறையில் சமநிலையற்ற நிலையை உருவாக்கும் தன்மைக் கொண்டது. செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு, குறித்த நேரத்தில், அந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடுங்கள். இதன்காரணமாக, உங்களது வழக்கமான பணிகள் பாதிக்காத சூழல் ஏற்படும்.
போதிய இடைவெளிகள் அவசியம்
உங்கள் வேலைகளுக்கு நடுவே, சிறிய அளவிலான இடைவெளிகளை, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வதன் மூலம், உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். அந்த இடைவெளி நேரத்தில், உடலை வளைப்பது உள்ளிட்ட சிறிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதன்மூலம், உடலில் உள்ள அலுப்புத்தன்மை, சோர்வு உள்ளிட்டவைகள் நீங்கும்.
வீட்டில் இருந்து வேலைச் செய்யும் போதும், குறித்த நேரத்தில். பணிகளை முடித்துவிட்டு, அதில் இருந்து அகன்றுவிடுதல் நல்லது. உடலின் நீரேற்றத்தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருதல் வேண்டும்.
மேலும் வாசிக்க : பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை எட்ட உதவும் குறிப்புகள்
போதிய அளவிலான உறக்கம்
தினமும் இரவில் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலான உறக்கம் மிக மிக அவசியமாகும்.
நேர மேலாண்மையைச் சரியாக நிர்வகித்து, உங்களது வேலையைக், குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கத் திட்டமிடுங்கள். இதுவே, உண்மையான நிர்வாகத் திறனிற்குச் சான்றாக அமையும்.
இந்த இயந்திர உலகில், பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைக் காக்க, அனைவரும் போராடி வருகின்றனர். இந்தச் சமநிலையைப் பேணிக்காக்கவில்லை என்றால், மன அழுத்த பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், இந்த விசயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நலம். அலுவலகத்திற்குச் செல்லாமல், வீட்டில் இருந்தே வேலைச் செய்வது என்பது சிலருக்கு வசதியாகத் தோன்றலாம், ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் இந்தப் பணிச்சூழலில் தான் அதிகளவிலான மன அழுத்த பாதிப்பிற்கு உள்ளாகிறீர்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை. நீங்கள் மேற்கொள்ளும் பணியைவிட, உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்க, தியானம், யோகாப்பயிற்சி முறைகள் பேருதவி புரிகின்றன.