கலோரிகளைக் கண்காணிக்க உதவும் AI வழிமுறை
உணவு கண்காணிப்பு முறைகள்
உங்களது உணவுமுறையை மேனுவலாகப் பதிவுசெய்து ஸ்மார்ட் போனில் பல்வேறு செயலிகளின் உதவியின் மூலம் கலோரி நுகர்வைக் கண்காணிக்க வழிவகைகள் உள்ளன. இந்தச் செயல்முறையை, நீங்கள் கடுமையானதாக உணரும்பட்சத்தில், HealthifyMe நிறுவனத்திடம் இருந்து புதிய வரவாக வந்துள்ள Snap யை, நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்..
Snap – AI உணவு அங்கீகார அமைப்பு
Snap என்பது உணவு அங்கீகார அமைப்பு ஆகும். நீங்கள் சாப்பிடப் போகும் உணவைப் புகைப்படம் எடுப்பதன் மூலம், அது உணவு வகைகளை அடையாளம் காண்பதுடன், உணவு உட்கொள்ளலைக் கண்காணிக்க, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. இதைப் பயன்படுத்த, நீங்கள் செயலியைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க : பணி – வாழ்க்கைச் சமநிலையில் மன அழுத்த மேலாண்மை
Snap இன் சிறப்பம்சங்கள்
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி செயலியான HealthifyMe கூற்றின்படி, Snap உலகின் முதல் ‘Fire & Forget’, உணவு அங்கீகார அமைப்பாகத் திகழ்கின்றது. நீங்கள் போட்டோ எடுத்த உணவு வகைகளை, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், அதன் அளவுகள், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டவைகளைக் கண்டறிவதை, முதன்மையாகக் கொண்டு உள்ளது. Snap அம்சமானது, HealthifyMe செயலியில் உள்ள உணவு வகைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து கொள்கிறது. இவைகளை, நாம் தேவைப்படும்போது மதிப்பீடு மேற்கொள்ள முடியும்.
இந்திய உணவு வகைகளின் பன்முகத்தன்மையை அறிவது கடினம் எனினும், Snap இந்திய உணவுகளையும் எளிதில் அடையாளம் காணும் என HealthifyMe கூறுகிறது.இது நாடு முழுவதிற்குமான மிகப்பிரபலமான உணவு வகைகளையும், முன்னணி சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள உணவு வகைகள் மற்றும் திரவ உணவு வகைகளை அடையாளம் காண உதவுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், Snap யின் செயல்பாடுகளை விரிவுபடுத்த, HealthifyMe திட்டமிட்டு உள்ளது.
தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
HealthifyMe செயலி, உங்கள் போனின் கேலரி பகுதியில் உள்ள உணவின் போட்டோக்களை ஆய்வு செய்து, அதன் தரவுகளைத் தானாகவே பதிவு செய்து கொள்கின்றன. இந்த நிலையில் தான், HealthifyMe செயலி பயனர்களுக்கு, தரவு பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில், HealthifyMe செயலி, பயனர்களின் அச்சத்தைப் போக்கியுள்ளது. இது தரவுகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்து உள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன், போனின் கேலரியில் உணவல்லாத படங்கள் தனியாகப் பிரிக்கப்படுகின்றன.இதற்காக, நீங்கள் தனியாக எந்தவொரு செயலியையும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. போனின் கேலரியில் உள்ள உணவு வகைகளின் போட்டோக்கள் மட்டுமே, HealthifyMe நிறுவனத்தின் வசம் செல்கின்றன. அங்கு அவை, அதிநவீனச் செயற்கை நுண்ணறிவின் உதவியால் செயலாக்கம் மேற்கொள்ளப்படுகின்றன.
உணவு வகைகளைக் கண்டறிவதில், HealthifyMe செயலி, 75 சதவீதத் துல்லியத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. இந்த அளவீடுகளில் ஏதேனும் பிழைகளோ அல்லது ஏதேனும் ஒரு மதிப்பு விடுபட்டு இருந்தாலோ, அந்தக் குறிப்பிட்ட உணவுத் தரவுகளை, நாம் விரும்பும் நேரத்தில் திருத்தவோ அல்லது நீக்கவோ முடியும். நீங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்து அளவைக் கண்காணிக்கும் நடவடிக்கையில், Snap ஆரம்பப் புள்ளியாக விளங்குகிறது. இது உணமுமுறைகள் குறித்த கூடுதல் தகவல்களை அறியவும் மற்றும் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.
இது என்ன உணவு என்பது அடையாளம் காண்பது, அது இருக்கும் அளவைக் கண்டறிவதை விட மிக எளிதான செயலே ஆகும். HealthifyMe செயலி இந்த உரிமையைப் பெற்றால், கலோரிகளை உள்ளிட்டு துல்லியமான அளவீடுகளை வழங்க முடியும்.இது ஊட்டச்சத்துக் கண்காணிப்பில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.