முன்மாற்று மரபணுச் சோதனையின் (PGT) நன்மைகள்
இன்றைய போட்டி உலகில், பெண்களும் உயர்கல்வி படித்து, முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். இதனால், அவர்களால் பணி-வாழ்க்கைச் சமநிலையைப் பேண முடிவதில்லை.குழந்தைப் பிறப்பை, அவர்கள் 40 வயதுவரைத் தள்ளிப்போடவும் செய்கின்றனர். சில பெண்களோ, 40 வயது வரைத் திருமணம் செய்யாமலேயே உள்ளனர். பெண்கள் பிறக்கும் போதே, நிலையான எண்ணிக்கையிலான முட்டைகளுடன் பிறக்கின்றனர்.வயது அதிகரிக்க, அதிகரிக்க, முட்டைகளின் தரம் மற்றும் அளவுகள் படிப்படியாகக் குறைகின்றன. பெண்ணின் அதிகபட்ச இனப்பெருக்கத் திறன் 20 முதல் 30 வயதிற்குள் தான் இருக்கும். 30 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான பெண்ணுக்கு, இயற்கை முறையிலான கருத்தரிப்பு நடக்க 20 சதவீதம் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளன. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு, கருவுறுதல் விகிதம் சரியத் துவங்குகின்றது. 40 வயதிற்குப் பிறகு,இயற்கைக் கருத்தரிப்பிற்கான விகிதம் 5 சதவீத அளவிற்கும் குறைவானதாகவே உள்ளது.
பெண்களின் பிரசவக் காலத்தில் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகள், பிறக்கும் குழந்தைகளின் குரோமோசோம்களின் எண்ணிக்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பெண் தனது 25 வயதில் கருத்தரிக்கிறாள் என்றால், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருப்பதற்கான வாய்ப்பு, 1/1250 என்ற விகிதத்தில் உள்ளது. இதுவே, 40 வயது பெண் எனில், இதன் விகிதம் 1/100 ஆக உள்ளது. முதல் மூன்று மாதங்களில் நிகழும் கருக்கலைப்புகள் பெரும்பாலும் குரோமோசோம் எண்ணிக்கையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களால் நிகழ்கின்றன.
பெண்களின் வயது அதிகரிக்க, கருவில் குழந்தையின் குரோமோசோம் எண்ணிக்கையில் அசாதாரண மாற்றங்களும், கருக்கலைப்பு விகிதமும் அதிகரிக்கின்றன.40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருத்தரிக்கும்போது, பிரசவக் காலத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புகளும், எடைக் குறைவான குழந்தைகள் பிறக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, சிசேரியன் முறையிலான பிரசவமே நடைபெறுகிறது.
இன்றைய நிலையில், பெண்கள் 35 வயதைக் கடக்கும் முன்னரே, குழந்தைப் பேறை அடையத் துடிக்கின்றனர். அதற்காக, அவர்கள் அதுதொடர்பான மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்கத் தவறுவதில்லை. மருத்துவர்களிடம் அவர்களின் முதல் கேள்வியாக இருப்பது யாதெனில், குழந்தைப் பிறப்பில் நிகழும் அபாயங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதாகத்தான் உள்ளது.
குழந்தைப் பிறத்தலில் நிகழும் அபாயங்களைத் தவிர்க்க முடியுமா?
குழந்தைப் பிறத்தலில் நிகழும் அசாதாரண மாற்றங்களுக்கு, பெண்களின் உடலில் இருக்கும் அசாதாரணமான கருக்களே முக்கிய காரணமாக உள்ளன.
இந்த அசாதாரண கருக்களை அகற்றி ஆரோக்கியமான கருக்களாக மாற்றினால் மட்டுமே, விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.
செயற்கைக் கருத்தரிப்பு முறையில், மேம்பட்ட கருக்கள் கண்டறிவதற்கு முன்மாற்று மரபணுச் சோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சோதனையின் மூலம், அசாதாரண மாற்றங்களுடனான கரு இருக்கும் வாய்ப்பு குறைகின்றது.
குரோமோசோம் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் கருவின் மூலமாகவே, கருக்கலைப்பு அதிகம் நிகழ்கின்றது. குரோமோசோம் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் கருவை, அன்யூப்ளாய்டு கரு என்று குறிப்பிடுகின்றோம். PGT எனப்படும் முன்மாற்று மரபணுச் சோதனையானது, அன்யூப்ளாட்டி கருக்களை அடையாளம் காண உதவுகிறது. இதன்மூலம், விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன.
அடிக்கடி கருச்சிதைவுகளுக்கு ஆளானோர், செயற்கைக் கருத்தரிப்பு முறையிலும் தோல்வி அடைந்தவர்களுக்கு முன்மாற்று மரபணுச் சோதனையானது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது குரோமோசோமல் மாற்றங்களுடனான குழந்தைகளைக் கொண்டவர்கள் மற்றும் மரபணுக் குறைபாடுடனான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
முன்மாற்று மரபணுச்சோதனை (PGT ) செயல்முறை
செயற்கைக் கருத்தரிப்பு முறையின் போது, பெண்ணிடமிருந்து கருமுட்டையும், ஆணிடமிருந்து பெறப்பட்ட விந்துவும், ஆய்வகத்தில், கருவுறுதல் நிகழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கருவுறுதல் நிகழ்ந்து கருவானது உருவாகிறது. இந்தக் கருக்கள், பிளாஸ்ட்டோசிஸ்ட் நிலை வரும்வரை, ஆய்வகத்தில் வைக்கப்படுகின்றன. பின்னர்ப் பயாப்ஸி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கருவில் இருந்து சிறிய அளவிலான செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு, ஏதேனும் மரபணுக் குறைபாடுகள் உள்ளனவா என்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தக் கருக்களானது குளிர்நிலையில் பதப்படுத்தப்பட்ட, பின் அதில் உள்ள குரோமோசோம்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. எவ்வித விரும்பத்தகாத மாற்றங்களைக் கொண்டிராத கருவே, பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்படுகின்றன.
மேலும் வாசிக்க : நோயாளிகளுக்குத் தொலைமருத்துவத்தின் நன்மைகள்
பயன்கள்
குரோமோசோம் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் கருவின் மூலமாகவே, கருக்கலைப்பு அதிகம் நிகழ்கின்றது. குரோமோசோம் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் கருவை, அன்யூப்ளாய்டு கரு என்று குறிப்பிடுகின்றோம். இத்தகையக் கருக்கள் டவுன் சிண்ட்ரோம் மற்றும் எட்வர்ட் சிண்ட்ரோம்களுக்குக் காரணமாக உள்ளன. இத்தகைய அன்யூப்ளாய்டிகளைக் கண்டறிய, PGT – A சோதனைப் பேருதவி புரிகிறது.
சிஸ்டிக் பைஃப்ரோசிஸ், சிக்கிள் செல் அனீமியா உள்ளிட்ட ஒற்றை ஜீன்களில் நிகழும் மரபணுக் குறைபாடுகளை, பெற்றோரிடமிருந்து, குழந்தைகளுக்குப் பரவுதலைத் தடுக்க PGT – M சோதனை உதவுகிறது.
கருவின் குரோமோசோமில் நிகழும் கட்டமைப்பு மாற்றங்களைக் கண்டறிய, PGT -SR சோதனைப் பயன்படுகிறது.
மரபணுக் குறைபாடு கொண்டவர்கள், வயது அதிகமான பெண்களிடம் இருந்து, ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுக்க, PGT எனப்படும் முன்மாற்று மரபணுச் சோதனை உதவுகின்றது. இந்த மேம்பட்ட செயல்முறை மருத்துவரின் சீரிய வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது. இதன் மூலம், கருவுறுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற வழிவகை ஏற்படுகிறது.