View of a gym with a young man lying on a dumbbell bench, lifting dumbbells in each hand.

உடல் எடையைக் குறைக்க மட்டுமா உடற்பயிற்சிகள்?

பலர் உடல் எடையைப் பராமரிப்பது என்பது வெறும் உயரம் மற்றும் ஆரோக்கியம் பற்றியது மட்டுமே என்று தவறாக நினைக்கின்றனர். உடற்தகுதியைத் தீர்மானிப்பதில், உடல் எடை முக்கியப் பங்கு வகிக்கின்றது என்றபோதிலும், அதையும் தாண்டி சில விசயங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஃபிட் ஆக இருந்தால் மட்டும், நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள் அல்ல. தெளிவான மனநிலை, உயரத்திற்கு ஏற்ற சரியான எடை, உடற்பயிற்சி அம்சங்களிலும் போதிய கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.

உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்க, SMART வழிமுறையை அணுகுவதே, சிறந்த வழி ஆகும்.

Specific

உங்கள் உடற்பயிற்சி திட்டத்திற்கு என வரையறுக்கப்பட்ட இலக்கு நிர்ணயித்தலை, உறுதிசெய்து கொள்ள வேண்டும். உங்களது இறுதிநிலையை, நீங்கள் அறியும்பட்சத்தில், பின்வாங்க நினைக்கும்பட்சத்தில், அது உங்களை முன்னோக்கிச் செல்ல உதவும்.

Measurable

உடற்பயிற்சி இலக்குகள், அளவிடக்கூடியதாக இருக்க வேண்டும். இதன்மூலம், எதிர்காலத்தில், உங்களின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கு, இது உந்துசக்தியாக அமையும்.

Attainable

உங்களது உடற்பயிற்சி இலக்குகள், பெரிய பெரிய லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது தவறில்லை என்றபோதிலும், அது உண்மையில் அடையக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் ஆகும்.

Relevant

உடற்பயிற்சி இலக்குகளை, உங்களது உடல்வாகுக்குப் பொருந்தக்கூடிய வகையிலான, பொருத்தமான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், மற்றவர்களின் வழியைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

Time-bound

உடற்பயிற்சி இலக்குகளுக்குப் போதிய அளவிலான காலக்கெடுவை நிர்ணயிப்பது அவசியமான ஒன்றாகும். இதன்மூலம், நீங்கள் உங்களது இலக்கில் இருந்து விலகிச் செல்லும் வாய்ப்பு குறைவாகும்.

உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க மட்டுமல்லாது, உடல் அமைப்பைக் கட்டமைக்கவும், வலுப்படுத்தவும் உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொண்டு, உங்களது உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த வழிமுறைகளின் போது, உடல் எடையும் குறையும்பட்சத்தில், உங்களுக்கு டபுள் தமாக்கா தான்.

உடற்பயிற்சியுடன் இணக்கமான உறவைப் பேணுங்கள்

உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க மட்டுமே என்பதான உங்கள் கருத்தை, நீங்கள் முதலில் மாற்றிக் கொள்ளவும். உடலை ஃபிட் ஆக வைத்திருக்கவே உடற்பயிற்சிகள் என்பதை மனதில் ஆழமாகப் பதியவைத்துக் கொள்ளுங்கள். சில வகை உடற்பயிற்சிகள் செய்வதற்கு மிகவும் கடினமானதாகவே இருக்கும். அதை அனுபவித்துச் செய்வதன் மூலமே, அதன் பலனை நீங்கள் முற்றிலுமாகப் பெற முடியும்.

அதிகளவு நீர் அருந்தவும்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதற்கென்று பிரத்யேகமாக உள்ள பானங்களை அருந்தாமல், தினமும் போதிய அளவிலான நீர் அருந்தி வந்தாலே, மகத்தான பலனைக் காண முடியும். தினமும் இத்தனை லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அதை உங்கள் வாழ்க்கையின் அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 2 லிட்டர் நீர் அருந்தி வந்தாலே, வளர்சிதை மாற்றம் மேம்படும், இரத்த ஓட்டம் சீராகும், சிந்தனைத்திறன் உள்ளிட்ட உடலின் அனைத்துச் செயல்பாடுகளும் சீராக நடைபெறும்.

Close up view of runners feet with running shoes on, captured during a marathon run.

இருக்கும் இடத்துவிட்டு நகர்ந்து செல்லுங்கள்

உடற்பயிற்சி என்றாலே, கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. நாம் நீண்டநேரம் தொடர்ந்து அமர்ந்தி இருக்கும்பட்சத்தில், சிறிதுநேரம் காலார நடந்து சென்றுவந்தாலே, அதுவும் ஒருவகையான உடற்பயிற்சிதான். இதுபோன்றதொரு, எளியவகைப் பயிற்சிகளை, தினசரி அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். இத்தகைய எளிய பயிற்சிகள் இதய நலன், மூளைச் செயல்பாடு, மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

உடற்பயிற்சியை வேடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்

உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு பயிற்சியை மேற்கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் உடற்பயிற்சியுடன், பாலே அல்லது ஜீம்பா நடன அசைவுகளை ஒத்திகைச் செய்து பார்க்க வேண்டும். இதன்மூலம், உங்களுக்கு ஏற்படும் தேவையில்லாத அசவுகரியம் தவிர்க்கப்படுவதுடன், உங்களது உடற்பயிற்சி இலக்குகளும் விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

காரண காரியம் முக்கியம்

மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் உடல் எடைக் குறைப்பு விழிப்புணர்வுக்காக மராத்தான் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இது நம்மை உடற்பயிற்சி இலக்குகளில் தீவிரமாகச் செயல்பட ஊக்குவிப்பது மட்டுமல்லாது, உடற்பயிற்சி உடனான உங்களது உறவை மறுவரையறைச் செய்யவும் உதவும்.

உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்துதல்

உடலின் இயக்கத்திறனை மேம்படுத்துவது உடற்பயிற்சியின் முக்கிய பகுதியாகவும், காயங்களைத் தடுக்கவும் உதவுகிறது.உடற்பயிற்சியின் இடையிடையே மேற்கொள்ளப்படும் நீட்சிப் பயிற்சிகள், சிறந்த மன அழுத்த நிவாரணியாகச் செயல்படுகின்றன. நெகிழ்வுத்தன்மைப் பயிற்சியானது, தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இயக்கத்திறன் பயிற்சியானது, தசைகளைப் பல்வேறு வழிகளில் இயங்க உதவுகிறது.

உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக, சிறிய அளவிலான நீட்சிப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது உடலின் நெகிழ்வு மற்றும் இயக்கத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

இதய நலனில் அக்கறை

இதய நலனுக்கான பயிற்சிகள், உடற்தகுதியின் அளவை மேம்படுத்த மட்டுமல்லாது, எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பிற்கும் காரணமாக அமைகிறது. இதன்மூலம், உற்சாகமான மனநிலை உண்டாகிறது. வாரத்திற்கு 5 நாள்களுக்கு மிதமான உடற்பயிற்சிகள் அல்லது 2 – 3 நாள்களுக்குக் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த உடற்பயிற்சி நிகழ்வின்போது, சீரான இடைவெளிகளில், இதயத்துடிப்பின் வீதத்தையும் கணக்கிட வேண்டும். கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளும் போதும், உங்களது இதயத்துடிப்பு சீராக இருக்கும்பட்சத்தில், உங்கள் இதயம் நல்ல ஆரோக்கியமாக உள்ளது என்றறியலாம்.

மேலும் வாசிக்க : இலக்கு சார்ந்த உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம்

சரியான உணவுமுறையைத் திட்டமிடல்

நீங்கள் சாப்பிடும் உணவைச் செரிமானம் செய்யவும், அதன்மூலம் உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலைப் பெறவும், சரியான நேரத்திற்குச் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். உடற்பயிற்சிகளை, வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டுச் செய்யக்கூடாது. இது உங்களுக்குக் குமட்டல், வாந்தி வரும் உணர்வை ஏற்படுத்திவிடும்.

உங்களது உடற்பயிற்சிக்கும், சாப்பிடும் நிகழ்விற்குக் குறைந்தது 2 அல்லது 3 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியமாகும். கடினமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக, வேகவைத்த முட்டைகள், வாழைப்பழம், சிறிதளவு கொட்டைகளை எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம், உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது.

வாழ்க்கைமுறை உடன் இணைந்த உடற்பயிற்சிகள்

உடற்தகுதியை மேம்படுத்தும் உடற்பயிற்சியை, நமது வாழ்க்கைமுறையின் அங்கமாக மேற்கொள்ள வேண்டும். உணவு மற்றும் ஓய்வுநேரத்திற்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அதுபோல, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உடற்பயிற்சிகளை, வாழ்க்கைமுறையின் நடவடிக்கைகளாக மாற்றி, அதை முறையாக மேற்கொண்டு, உடற்தகுதியை மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.