தனிப்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியமா?
நோயாளிகளின் மரபணு வேறுபாடுகளை அறிவதன் மூலம், சாத்தியமான நோய்பாதிப்புகளை அறியலாம். மேலும், ஆரோக்கியம் மேம்படுவதற்கான வழிமுறைகளையும் கண்டறியலாம். ஒருவரின் நடத்தை மாற்றங்களால் நோய் ஆபத்து அதிகரித்ததா என்ற கேள்விக்கு, இதுவரை யாரிடமும் பதில் இல்லை.
நடத்தை மாற்றம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையாக உள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த கோட்பாடு மரபணு மாறுபாடுகளால் ஏற்படும் அபாயங்களைக் குறிக்கிறது. இதன் மூலம் சாத்தியமான பாதிப்புகளைக் குறைக்கலாம். மாற்றங்களை ஊக்குவிக்கும் மற்றும் மருத்துவ விளைவுகளை மேம்படுத்தும் மரபணுத் தகவல்களை நோயாளிகளுடன் பகிர்வது அவசியம்.
வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களானது, நாள்பட்ட நோய்களின் பாதிப்பைத் தடுப்பதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 2016இல், அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளின் சங்கம், மருத்துவப் பள்ளிகளில் நடத்தை மாற்றம் மற்றும் ஆலோசனைத் திறன்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியது.உடல் பருமன் பாதிப்பு கொண்ட அனைத்து நோயாளிகளுக்கும், வாழ்க்கைமுறை ஆலோசனையை உள்ளடக்கிய தீவிர நடத்தைச் சிகிச்சைகளை வழங்க, மருத்துவர்களை ஊக்குவிக்கிறது.
நோயாளிகளுக்கு ஏற்படும் வாழ்க்கைமுறை அடிப்படையிலான நோய்ப்பாதிப்புகளைக் களைய, முதன்மைப் பராமரிப்பு மருத்துவர்களே அதற்கான இடத்தில் உள்ளனர். மருத்துவத்துறையில் சமீபத்திய வரவான செயல்பாட்டு மருத்துவ முறையில், வாழ்க்கைமுறைக் காரணிகள், சிகிச்சை உறவைப் பேணுவதில் கவனம் செலுத்தும் வகையிலான பராமரிப்பு மாதிரியுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இம்முறையில், நோயாளி-பயிற்சியாளர்க் கூட்டாண்மை முக்கியம். இது நோயாளியின் ஈடுபாடு, பயனுள்ள சிகிச்சை உத்திகள், மற்றும் நோயாளிக்கு அதிகாரமளித்தலை உள்ளடக்கியது.
பெரிய அளவிலான நாள்பட்ட நோய்களான புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவுப் பாதிப்புகள் இல்லாத வகையிலான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையுடன் தொடர்புடையது என்று மருத்துவத்துறையின் முன்னணி நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவுப் பாதிப்பு கொண்ட 50 வயது நபருக்கு, இத்தகைய பாதிப்புகள் இல்லாத ஆண்டுகள் என்பது 23.7 ஆண்டுகளாக உள்ளன. இதன் வரம்பு 22.6 முதல் 24.7 ஆண்டுகளாக உள்ளன. இதே நிலை, 50 வயது கொண்ட பெண்ணிற்கு என்றால், பாதிப்புகள் இல்லாத ஆண்டுகள் 34.4 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இதில் வரம்பு என்பது 33.1 முதல் 35.5 ஆண்டுகளாக உள்ளன.
50 வயது கொண்ட ஆண்களில், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைகளை மேற்கொள்பவர்களில், நாள்பட்ட நோய்கள் இல்லாத காலம் 23.5 ஆக உள்ளது வரம்பானது, 22.3 முதல் 24.7 ஆண்டுகள் வரை ஆகும். இதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்ட ஆண்களில், நோய்பாதிப்புகள் இல்லாத ஆண்டுகள் 31.1 ஆகும். இதன் வரம்பானது 29.5 முதல் 32.5 ஆண்டுகள் வரை ஆகும்.
செயல்பாட்டு மருத்துவ முறையின் பரிசீலனைகள்
நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு,
உடல் எடைக் குறைப்பு புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்துதல் மற்றும் உடலின் செயல்பாட்டு விகிதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கும் பழக்கமும் காரணமாக இருக்கலாம்.
நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகள், ஏற்கனவே, சிகிச்சைகளால் அதிகளவிலான சுமை உணர்வுடன் இருப்பர். அவர்களின் தினசரி வாழ்க்கையில், நடத்தை மாற்றங்களை இணைப்பது என்பது, அவர்களுக்கு மேலும் சுமைகளை ஏற்றுவதற்குச் சமமானது ஆகும். வாழ்க்கை முறையில் மேற்கொள்ளப்படும் இலக்கு நடவடிக்கைகளில், நோயாளிகளின் விருப்பங்களுக்கு ஏற்றவாறும் மற்றும் அவர்களின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும்பட்சத்தில், அது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அமையும்.
நோயாளிகள் நேர்மறையான விளைவுகளை அடையவும், நடத்தைகளில் மாற்றம் ஏற்படும் பகுதிகளை அடையாளம் காண,செயல்பாட்டு மருத்துவ நிறுவனப் பயிற்சியாளர்கள் உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். உணவுமுறை மற்றும் உடற்பயிற்சித் தொடர்பான வாழ்க்கைமுறைத் தேர்வுகளை ஆராய்வதன் மூலம், சிக்கலான உடலியல் செயல்முறைகளை மதிப்பிடவும், நாள்பட்ட நோய் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகளையும் பரிந்துரைச் செய்கிறது.
மேலும் வாசிக்க : AI – வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள்!
ஒவ்வொரு நாளும் நோயாளி எடுத்துக்கொள்ளும் உணவு, எடுத்துக்கொள்ளும் பானங்கள், உறக்கம், உடற்பயிற்சி, உடல் செயல்பாடுகள், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் கண்காணிக்கப்படுகின்றன. வெவ்வேறு காலகட்டங்களில், இந்தக் காரணிகளைக் கண்காணிக்க உணவுமுறை, ஊட்டச்சத்து, வாழ்க்கைமுறை உள்ளிட்டவைகளும் ஆராயப்படுகிறது.
நோயாளிகள், தங்களது உடல்நல மேம்பாட்டிற்காக, பழக்கங்களை மாற்ற உதவும் வகையில் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறைக்கு, குறிப்பிட்ட வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை, செயல்பாட்டு மருத்துவ நிறுவனப் பயிற்சியாளர்கள் பின்பற்றுகின்றனர். வாழ்க்கைமுறை அடிப்படையிலான இலக்குகள், விருப்பத் தேர்வுகள் உள்ளிட்டவை அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளன.
வாழ்க்கைமுறை மாற்றம் தொடர்பான முடிவெடுப்பதில் கவனமாக இருக்கும் நோயாளிகள், ஆரோக்கியமற்ற நடத்தையை மாற்றி அமைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட நபரின் ஆரோக்கியமானது, அவர்ச் சார்ந்துள்ள சூழல், அவரின் டி.என்.ஏ.வில் உள்ள தனித்துவமான மரபணுக்கள், உடலின் உயிர்வேதியியல் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளைச் சார்ந்து உள்ளது.
நோயாளிகளுக்குத் தனிப்பட்ட கவனிப்பை வழங்குவதன் மூலம், நாள்பட்ட நோய்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், மறுசீரமைப்பிற்கான ஆரோக்கியத்தை ஆதரிப்பதில், செயல்பாட்டு மருத்துவ அணுகுமுறையானது முக்கியப்பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
தனிப்பயனாக்கப்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…