இயல்பான மற்றும் அசாதாரண நடத்தைகள்
மக்கள், தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, சுற்றுப்புறச் சூழல்களுடன் இணைத்துக் கொள்ளும் நிகழ்வே, நடத்தை என்கிறோம். இயல்பான மற்றும் அசாதாரண நடத்தைகள் என்பவை உயிரியல், உளவியல் தொடர்பான பண்புகளை விவரிக்கும் சொற்கள்.இந்த நடத்தைகள் விவகாரமானது, வயது, பாலினம், சூழ்நிலைச் சமூக விதிமுறைகள் உள்ளிட்ட காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தச் சொல்லாடல்கள் மக்களின் கலாச்சார ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதன் தரங்களுக்கு ஏற்ப, அர்த்தங்களும் அவ்வப்போது மாறுபடுகின்றன.
இயல்புநிலை என்றால் என்ன?
பொதுவான அல்லது எதிர்பார்க்கப்படும் செயல்களை, நாம் இயல்பானது அல்லது இயல்புநிலை என்று குறிப்பிடுகிறோம். சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல், நடைமுறைக்கு உகந்ததாக இருத்தல், சமூகத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளுதல் உள்ளிட்டவை, இயல்பான நடத்தையின் பண்புகளாக வரையறுக்கப்படுகிறது.
அசாதாரண நடத்தைகள் என்றால் என்ன?
இயல்பான அல்லது எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளிலிருந்து வேறுபட்ட நடத்தையே, அசாதாரண நடத்தை என்கிறோம். இது செயலற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளைக் குறிக்கிறது. ஒரு இடத்தில் ஒருவர் அசாதாரணமாக நடந்துகொள்ளும்போது, அங்கு உள்ளவர்களுக்கு அந்தச் செயலானது மன உளைச்சலை ஏற்படுத்தும்விதத்தில் அமையும். இது அவர்களை, அந்தச் சூழலில் திறம்பட செயலாற்றுவதைத் தடுக்கிறது. இதன்மூலம், அன்றாடப் பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றுவது சவாலானதாக மாறுகின்றது. அசாதாரணமான மனநிலையில் இருப்பவர்கள் அதிகக் கிளர்ச்சி மற்றும் குழப்பம் கொண்டவர்களாக இருப்பர். அவர்களால் தங்களைக் கவனித்துக் கொள்ளவோ, சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவோ, பணிகளில் சிறப்பாக ஈடுபடவோ முடியாது.தனிநபருக்கு, வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லையெனில், அதை நாம் அசாதாரணமான நடத்தை என்று குறிப்பிடுகிறோம்.
அசாதாரண நடத்தைகளை, நான்கு வகையாகப் பிரிக்கலாம்
ஒரு நபரின் சொந்த நலன்களைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் வகையில் செயல்படுதல்
மோசமான தொடர்பு
சூழ்நிலைக்குப் பொருந்தாத உணர்ச்சிபூர்வமான பதில்கள்
ஒழுங்கற்ற நடத்தை என்பது, நடத்தையில் திடீர் மாற்றம் எனக் குறிப்பிடுகிறோம்.
அசாதாரண நடத்தைகளுக்கான காரணங்கள்
அசாதாரண நடத்தைகளுக்கான காரணங்கள் கீழே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
உயிரியல் காரணிகள்
மூளையில் உள்ள சிறப்பு ரசாயனங்களை உள்ளடக்கிய நரம்பு டிரான்ஸ்மீட்டர்கள், முறையற்ற சமநிலையுடன் இணைக்கப்பட்டு உள்ளதாலேயே, மனநலம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதாக, ஆய்வுமுடிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மூளை மற்றும் நரம்பு செல்களிடையேயான தொடர்புக்கு, இந்த நரம்பு டிரான்ஸ்மீட்டர்கள் உதவுகின்றன. இந்தத் தொடர்புகளில், சிறப்பு வகையிலான ரசாயனங்கள் சமநிலையில் இல்லாது இருந்தாலோ அல்லது சரியாகச் செயல்படாவிட்டாலோ, மூளையால், செய்திகளைச் சரியாக அனுப்ப முடியாது. இதன்காரணமாகவே, மனநோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மூளைப் பகுதிகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதங்கள் ஏற்படும்பட்சத்தில், சில வகையான மனப்பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகின்றன.
மரபியல்
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு,மனநோய்ப் பாதிப்புகள் இருப்பின், அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் , மன நோய் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். மன அழுத்த பாதிப்பு கொண்டவரின் மரபணுக்கள் இணையும்போது, மனநலப் பாதிப்பு வாய்ப்பு அதிகரிக்கும்.
தொற்றுப் பாதிப்புகள்
பல்வேறு வகையான நோய்த்தொற்றுப் பாதிப்புகள், மூளைப் பாதிப்பு, மனநோயின் ஆரம்ப கட்டம் அல்லது அறிகுறிகள் முற்றுதல் உள்ளிட்டவைகளுடன் தொடர்புடையதாக உள்ளன.
மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டு இருந்தால், அதன்மூலமாகவும், மனநோய்ப் பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில், இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஆகும்.
பிறப்புக்கால குறைபாடுகள்
பெண்களுக்குப் பிரசவக் காலத்தில் மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் தடங்கல், கருவின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் இடையூறுகள், பிரசவக் காலத்தில் ஏற்படும் அதிர்ச்சி, மன இறுக்கப் பாதிப்பு உள்ளிட்டவைகளின் காரணமாகவும், மனநோய்ப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன.
உளவியல் சார்ந்தக் காரணிகள்
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் சார்ந்த வன்முறைகள், பெற்றோரின் மரணம் என அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்கள், மனநலப் பாதிபுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இவைகள் உளவியல் சார்ந்தக் கூறுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
சமூகம் சார்ந்தக் காரணிகள்
உளவியல் சார்ந்த பாதிப்பிற்குள்ளான ஒருவர், செயல்படாத நிலையிலான குடும்பம், மரியாதைக்குறைவு, அதீதக் கோபம், தனிமையில் வாடுதல், போதைப்பொருளுக்கு அடிமையாதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்தக் காரணிகளுக்கு ஆளாகும் நிலையில், அவருக்கு மனநோய்ப் பாதிப்புகள் ஏற்படலாம்.
கலாச்சாரம் சார்ந்தக் காரணிகள்
குடும்பப் பின்னணி, மதம், மரபுகள், சமூக விதிமுறைகள் உள்ளிட்ட கலாச்சாரக் கூறுகள், மன ஆரோக்கியத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
குடும்பப் பின்னணி
குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கு மனநோய்ப் பாதிப்பு இருப்பின், அங்கு பிறக்கும் குழந்தைக்கு, மனநலப் பிரச்சினைகள் இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளன. இது கிட்டத்தட்ட மரபியல் முறையை ஒத்தது ஆகும். நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதையும், மன அழுத்தத்தைக் கையாள்வதையும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகலாம்.இது வாழ்வின் பிற்பகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது நிதர்சனம்.
மதம்
மதம் என்பது சமூகத்தின் உணர்வையும், வெளிஉலகத்தைப் புரிந்துகொள்வத்ற்கான கட்டமைப்பை வழங்குவதாக உள்ளது. அதேபோன்று, இந்த மதமே, வாக்குவாதங்களுக்கும், மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
சில மத வழிமுறைகளின்படி, மனநோய் என்பது பலவீனத்தின் அறிகுறி என்றும் பிசாசின் ஆட்கொள்ளுதல் என்றும் வரையறுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக, மனநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுவது கூட சவாலான நிகழ்வாக மாறி உள்ளது.
மேலும் வாசிக்க : சிறந்த மன ஆரோக்கியத்திற்கு உதவும் யோகா
சமூக விதிமுறைகள்
நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பதன் மூலம், மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நம் சொந்தத் தேவைகளைவிட, குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த தேவைகளுக்கே, முன்னுரிமை அளிக்க உந்தப்படுகிறோம். இதன்காரணமாக, மன ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படுவதற்கான சூழலை உருவாக்குகின்றன. இந்தச் சமூகத்தில், பெரும்பாலான மக்கள் தன்னிச்சையாகவே வாழ விரும்புகின்றனர். அவர்களால் அவ்வாறு வாழ முடியாது என்ற உண்மையை அறியும் போது, அவர்களுக்கு மன அழுத்த பாதிப்பு ஏற்படுகின்றது.
கலாச்சாரக் கூறுகள்
மன ஆரோக்கியம் சார்ந்த நிகழ்வில், கலாச்சாரக் கூறுகள் மற்றும் விதிமுறைகள், பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. இதனுள் திருமணம் அல்லது ஆண், பெண் எனப் பாலின அடிப்படையிலான பழக்கவழக்கங்கள், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன, எடுத்துக்காட்டாக, வீட்டில் கணவர்களுக்கு அடங்கிச் செல்லும் பெண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர். அதேபோன்று விரும்பிய நபரைத் திருமணம் செய்ய இயலாதவர்கள், மனச்சோர்வு பாதிப்பிற்கு உள்ளாகி தனிமையை அனுபவிக்க நேரிடும்.
துன்ப நிகழ்வுகள், செயலிழப்பு, ஆபத்து உள்ளிட்டவை அசாதாரணச் செயல்பாடுகளாக வரையறுக்கப்படுகின்றன. சூழலைப் பொறுத்தே, எந்தவொரு நடத்தையையும் மதிப்பிட இயலும். அசாதாரண நடத்தைகள், சமூகத்தின் விதிமுறைகள் மற்றும் அதன் பாதிப்புகளால் குறிப்பிடப்படுகின்றன.