Enlarged internal view of an artery shown as the background with an image of heart shown in the middle and an opened artery with an inserted stent displayed beside the heart.

இதய நோய்ப் பாதிப்பிற்கான அபாயங்களை அறிவோமா?

சர்வதேச அளவில், அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்ப்பாதிப்புகளில் முதன்மையானதாக, இதய நோய்ப்பாதிப்பானது விளங்கி வருகிறது. அதன் ஆபத்துகளைப் புரிந்து கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க இயலும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இதயப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க முடியும்.

இதய நோய்களின் வகைகள்

இதய நோய்ப்பாதிப்பு என்பது, இதயம் மற்றும் ரத்த நாளங்களைப் பாதிக்கும் வகையிலான குறைபாடு ஆகும். அதன் வகைகளாவன..

கரோனரி தமனி நோய் (CAD)

இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக, ரத்தம் செல்லும் பாதைக் குறுக்கமடைகிறது. இதனால் போதிய அளவிலான ரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் மார்புப்பகுதியில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. CAD பாதிப்பானது, சர்வதேச அளவில் பெரும்பாலானோரைப் பாதிக்கும் நோய்ப்பாதிப்புகளில் முதன்மையானதாக விளங்குகிறது.

இதயச் செயலிழப்பு

உடலின் முக்கிய உறுப்பான இதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்லாதபோது, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இது உடல் அசதி, சுவாசப் பிரச்சினைகள், கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளில் வீக்கங்கள் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. கரோனரி தமனி நோய்ப்பாதிப்பு, ஹைபர்டென்சன் எனப்படும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள், இதயச் செயலிழப்புக்குக் காரணமாக அமைகின்றன.

அரித்மியா

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நிலையையே, அரித்மியா என்று குறிப்பிடுகிறோம். படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். இது உயிருக்கு ஆபத்தானதால், உடனடி சிகிச்சைத் தேவை.

இதய வால்வு நோய்

இதயத்தில் உள்ள வால்வுகள் சேதம் அடையும் போது, அது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்போது, இதய வால்வு நோய் ஏற்படுகிறது. சோர்வு, மூச்சுத்திணறல், மார்புப்பகுதியில் வலி உணர்வு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். பிறவி அடிப்படையிலான இதய நோய், நோய்த் தொற்றுக்கள், வாத காய்ச்சல் உள்ளிட்ட காரணிகளின் மூலம், இதய வால்வு நோய்ப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதய நோயின் அறிகுறிகள்

இதய நோய்ப்பாதிப்பைக் கட்டுப்படுத்த, துவக்கக் காலத்திலேயே சிகிச்சைப் பெறுவதற்கு, அதன் அறிகுறிகளை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

A middle aged man sitting with his hands holding the left side of his chest in pain and a woman attending on him.

மார்புப் பகுதியில் வலி உணர்வு

இது இதய நோய்ப்பாதிப்பின் பொதுவான அறிகுறி ஆகும். இந்த வலி உணர்வானது, கைகள், முதுகு, கழுத்து, தாடை மற்றும் வயிற்றுப்பகுதிகளிலும் உணரப்படலாம். உடல் செயல்பாடுகள், மன அழுத்தம், உணவுமுறை உள்ளிட்டவைகளால், இந்த அறிகுறிகள் ஏற்படலாம்.

மூச்சு விடுவதில் சிரமம்

இதுவும் இதய நோய்ப்பாதிப்பின் முதன்மையான அறிகுறி ஆகும். இது உடல் செயல்பாடுகளால், இந்த அறிகுறியானது ஏற்படுகிறது.

உடல் பலவீனம்

நீங்கள் போதுமான அளவிற்கு ஓய்வு எடுத்தபிறகும், உடல் சோர்வு நீங்காமல் இருப்பது, இதய நோய்ப்பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. இரத்த ஓட்டம் குறைதல் மற்றும் இதயச் செயல்பாடுகளில் சுணக்கம் உள்ளிட்டவைகளால், இந்த அறிகுறி ஏற்படுகின்றது.

ஆபத்து காரணிகளின் மதிப்பீடு

இதய நோய் ஆபத்து காரணிகளைக் கண்டறிவது என்பது அப்பாதிப்பு தடுப்பின் முதல் படியாகும்.உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, நீரிழிவு, உடல் பருமன், புகைபிடித்தல், உடல் செயலற்ற வாழ்க்கை, குடும்ப வரலாறு ஆகியவை இதய நோய் காரணிகளாகும். இதய நோயியல் மருத்துவரின் பரிந்துரையிலான மருத்துவப் பரிசோதனைகள், இத்தகைய ஆபத்துக் காரணிகளைத் திறம்பட மதிப்பிட உதவுவது மட்டுமல்லாது, நிர்வகிக்கவும் உதவுகின்றன.

சிறந்த மருத்துவரைக் கலந்தாலோசித்தல்

இதய நோய்ப்பாதிப்பிற்குத் தீர்வு காண, சிறந்த மருத்துவரை நாடுதல் இன்றியமையாதது ஆகும். முன்னணி நகரங்களில், சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பரிந்துரையைக் கவனமுடன் மேற்கொள்வது நல்லது.

இதய நலனுக்கு ஏற்ற வகையிலான வாழ்க்கைமுறை

இதய நோய் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கிய வாழ்க்கை முறை அவசியம்.இவர்கள்,உப்பு, சர்க்கரை, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதங்கள் கொண்ட உணவுகளே சரிவிகித உணவாகும். வழக்கமான உடல் செயல்பாடுகளும் இதில் அடங்குகின்றன. வார நாட்களில், குறைந்தது 30 நிமிடங்கள் கால அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகித்தல்

நாள்பட்ட மன அழுத்தம், ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகள், இதய நோய்ப்பாதிப்பு ஏற்படுவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சுவாசப பயிற்சிகள், தியானம், யோகாப் பயிற்சிகள், உங்கள் மனதிற்குப் பிடித்த வகையிலான செயல்பாடுகள் உள்ளிட்டவை, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவையாக உள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு, போதுமான அளவிற்கு உறங்குவதும் இன்றியமையாததாகும்.

புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்

இதய நோய்ப் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக, புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதால், இந்தப் பழக்கத்தை, உடனடியாகக் கைவிட வேண்டும். இதன்மூலம், இதய நலன் காக்கப்படும். அதிகளவில் மது அருந்துவதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத் தசைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும். இதய நலனுக்கு ஆல்கஹால் உதவுவதால் சிறிதளவு அருந்துவது நல்லது.

மேம்படுத்திக் கொள்ளுங்கள்

மருத்துவத் துறையில், இதய ஆரோக்கியம் தொடர்பான முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இரத்த அழுத்தம், கொழுப்பு அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரவும். தடுப்பு நடவடிக்கைகளுக்கு, துறைச் சார்ந்த மருத்துவர்களின் பரிந்துரைகளைக் கவனமாகப் பின்பற்றவும்.

விரைவான மருத்துவ நடவடிக்கைகள்

இதய நோய்ப்பாதிப்பின் அறிகுறிகளான மார்புப்பகுதியில் வலி உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம், தலைச்சுற்றல், இதயத்துடிப்பில் மாறுபாடு உள்ளிட்டவைகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, சரியான சிகிச்சையை உரிய நேரத்தில் பெறுவதன் மூலம், பாதிப்பின் தீவரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பை வென்றவர்களின் வெற்றிக் கதைகள்

சிகிச்சை முறைகள்

இதய நோய்ப்பாதிப்பின் சிக்கல்களைக் களைவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சிகிச்சை முறையானது இன்றியமையாததாக உள்ளது.

வாழ்க்கைமுறை மாற்றங்கள்

வாழ்க்கைமுறையில், சிற்சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், இதய நோய்கள் பாதிப்பில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சிப் பழக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல். புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல் உள்ளிட்ட மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், இதய நலனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சிகிச்சைகள்

சிலவகை இதயப் பாதிப்புகளுக்கு, ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்ட் வைத்தல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் அவசியமாகின்றன.

இதய நோய்ப்பாதிப்புக்கான காரணிகளை அறிந்துகொண்டு, அதைத் தவிர்க்கும் முறைகளைக் கையாண்டு, இதய ஆரோக்கியத்தைப் பராமரித்து, நீண்ட காலம் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.