வயதுமூப்பு காலத்தில் உடற்பயிற்சிக்கான நன்மைகள்
வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியானது பேருதவி புரிகிறது. வயதானவர்களுக்கு, உடற்பயிற்சிப் பழக்கவழக்கமானது, உடல்நலத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. இது வயதுமூப்பால் வரும் உடல்நலப்பாதிப்புகளைத் தாமதப்படுத்தி, தடுத்தாளுகிறது.
வயதானவர்களுக்கு உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை உடல் செயல்பாடு குறைவு மற்றும் இயலாமை அதிகரிப்புடன் தொடர்புடையவை.வயதான காலத்தில் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையானது மிகவும் அவசியமானது ஆகும். உடற்பயிற்சி பழக்கமானது, உடல் சார்ந்த மட்டுமல்லாது மனம் சார்ந்த ஆரோக்கிய நிகழ்விற்கும் நன்மைபயப்பதாக உள்ளது என ஆய்வுமுடிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டோர், உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாது, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும், தினசரி வாழ்க்கையில் நோக்கங்களை எட்ட உதவுகிறது. உடற்பயிற்சி விழுவதைத் தடுக்கிறது, எலும்பு முறிவுகளைத் தவிர்க்கிறது, மற்றும் எலும்பு அடர்த்தியைப் பராமரிக்கிறது.
உடற்பயிற்சியின் மனம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நன்மைகள்
உடற்பயிற்சிகளின் போது வெளிப்படும் எண்டோர்பின் ஹார்மோனானது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மனநிலையை மேம்படுத்தி, மனத் தெளிவை ஏற்படுத்துகிறது. Feel good ஹார்மோன்கள் என்றழைக்கப்படும் எண்டோர்பின் ஹார்மோன்கள், மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான நல்வாழ்வுக்குக் காரணமாக அமைகின்றன.
வழக்கமான உடற்பயிற்சிகள், புதிய நியூரான்களின் உருவாக்கத்திற்குப் பேருதவி புரிகின்றன. ஞாபகச் சக்தி, கற்றல் திறன்களை மேம்படுத்துகிறது, சிந்தனைத்திறன் சீர்குலைவைத் தடுக்கிறது. எண்டோர்பின் சுரப்பை ஊக்குவிப்பதால், அது மனப்பதட்டம், மன இறுக்கப் பாதிப்பைக் குறைத்து, மனம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நன்மைகளை மேம்படுத்துகின்றது.
உடற்பயிற்சிகளின் அணுகல் தன்மை
உடற்பயிற்சிகளை, ஜிம்மிற்குச் சென்று, விலையுயர்ந்த உபகரணங்களைக் கொண்டு தான் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தினசரி 10 நிமிடங்கள் கால அளவிற்குச் சாதாரண அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும், இதுவே உங்களுக்குக் கணிசமான நன்மைகளை வழங்கும். 60 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையைப் பெற, இந்தப் பயிற்சிகள் பேருதவி புரிகின்றன. 40-85 வயதினர்த் தினசரி 10 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சி செய்தால், அவ்வயதினரின் மரண விகிதம் 6.9% குறையும் என ஆய்வுகள் காட்டுகின்றன.உடற்பயிற்சிகளில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் கூட, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் விகிதத்தில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் வாசிக்க : 50 வயதிலும் இளமையான சருமத்தை வழங்கும் உணவுகள்
தனிப்பட்ட இயக்க நடவடிக்கைகள்
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கைமுறையும், அதற்கான மேம்பாட்டு முறையும் தனித்துவமானது ஆகும். அவற்றை உணர்ந்து, அதற்கேற்ற வகையிலான விருப்பத்தேர்வுகளைத் தேர்ந்தெடுத்து, சீரான அளவிலான இயக்க வடிவங்களைக் கண்டுபிடிப்பது என்பது, மிகவும் முக்கியமான நடவடிக்கையாக உள்ளது. தனிப்பட்ட வகையினதாக உடற்பயிற்சியை மேற்கொள்வது என்பது, தினசரி வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றுகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், அவர்கள் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் சூழல் உருவாகின்றது. இந்தத் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையானது, உடல் இயக்க நடவடிக்கைகளுடன் நேர்மறையான தொடர்பை உருவாக்குகிறது.
உடல் இயக்கங்கள் மீதான தாக்கங்கள்
வயதானவர்களுக்கு, மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால்கள், அவர்களின் உடல் இயக்கங்களில் அதீதத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகையச் சவால்களை அவர்கள் திறம்பட எதிர்கொள்வதன் மூலம், அறிவாற்றல் சார்ந்த திறன்களை வலுப்படுத்திக் கொள்ள இயலும், மனநிலையை மேம்படுத்தி, நல்வாழ்க்கையைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாது, நீரிழிவுப் பாதிப்பு, இதய நோய்ப்பாதிப்புகள், கீல்வாதம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பது மட்டுமல்லாது, அவற்றின் பாதிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. மனநிலையை மேம்படுத்துவதன் மூலம், மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்டவற்றின் அபாயங்கள் குறைவதோடு மட்டுமல்லாது, மன ஆரோக்கியமும் மேம்படுகிறது.
சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை என்பது, வயதானவர்களுக்கு, துடிப்பான வாழ்க்கையைச் சாத்தியப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஆரோக்கியமான எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான அதிகாரத்தை வழங்குகிறது. தங்களுக்குப் பிடித்த சமூகங்களுடன் இணைந்து செயல்படு உதவுகின்றன. அவர்களின் நலன்களைக் காக்கும்வகையில், சுயமாக இயங்குவதையும் சாத்தியமாக்கிக் கொள்ள இயலும்.
சுருங்கச் சொல்வதென்றால், வாழ்வின் பொன்னான காலமான முதுமைப் பருவத்தை, சரியான உடற்பயிற்சிகளின் தேர்வின் மூலம், அதை உன்மையான பொற்காலமாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.