நடத்தையியல் சிகிச்சையின் வகைகள் மற்றும் பயன்கள்
நாம் கேட்கும் அனைத்தும் ஒருவிதமான கருத்துகளே அன்றி உண்மை அல்ல.. அதேபோல், நாம் பார்க்கும் அனைத்தும் பரப்பார்வையே அன்றி, உண்மை அல்ல.. – மார்கஸ் அரேலியஸின் தத்துவம்
நடத்தையியல் சிகிச்சை என்பது செயலற்ற நடத்தையை மாற்றும் நுட்பமாகும். இது விரும்பத்தக்க நடத்தைகளை வலுப்படுத்தி, விரும்பத்தகாத நடத்தைகளை நீக்க உதவுகிறது. இச்சிகிச்சைச் செயல் அடிப்படையிலானது. இது நடத்தைகளில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றை அகற்றி, புதிய நடத்தைகளைக் கற்பிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
யாரெல்லாம் பயன்பெறுவர்?
- மன இறுக்கப் பாதிப்பு
- அதீதக் கவலை உணர்வு
- பயம் சார்ந்த குறைபாடுகள்
- அதிகக் கோப உணர்வு
- கவனக்குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி குறைபாடு
- சமூகம் சார்ந்த பய உணர்வு
உள்ளிட்ட பாதிப்பு கொண்டவர்களுக்கு நடத்தையியல் சிகிச்சையானது ஆபந்தபந்தனாக விளங்குகிறது.
வகைகள்
- பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA)
- அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT)
- இயங்கியல் நடத்தைச் சிகிச்சை
- வெளிப்பாட்டுச் சிகிச்சை
- பகுத்தறிவு உணர்ச்சி நடத்தைச் சிகிச்சை
- சமூகக் கற்றல் சிகிச்சை உள்ளிட்டவை, நடத்தையியல் சிகிச்சையின் வகைகள் ஆகும்.
நடத்தையியல் குறைபாடுகளைச் சரிசெய்வது எப்படி?
சிறந்த நடத்தையியல் சிகிச்சை நிபுணரைத் தேர்ந்தெடுப்பது என்பது நடத்தையியல் குறைபாட்டைக் களைவதற்கான முதல்படிநிலை ஆகும்.
மனநலச் சிகிச்சை வல்லுநர்களான ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், சமூகச் சேவையாளர்கள் உள்ளிட்டோர், நடத்தையியல் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
சிகிச்சைத் தொடர்பாக, உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், உடனடியாக நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
மேலும் வாசிக்க : மன அழுத்த நிர்வாகத்தில் CBT-யின் நன்மைகள்
சிகிச்சைகள் துவங்கப்பட்ட உடன், தான் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட நோயாளி, சிகிச்சை வல்லுநருடன் விவாதிக்க வேண்டும். அப்போதுதான், சிகிச்சை வல்லுநர், திறன்மிகு சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கி, நோயாளியின் நம்பிக்கையை நிறைவேற்றிட முடியும்.
நடத்தைச் சிகிச்சையைத் திறம்பட செய்ய, செயல்பாட்டில் பங்கேற்பதில் ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும்.
நடத்தையியல் சிகிச்சை முறையைக் கவனமுடன் மேற்கொண்டு, விரும்பத்தக்க நடத்தைகளை வலுப்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..