முழுமையான குணப்படுத்தும் முறைகள் அறிவோமா?
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020ஆம் ஆண்டில் இருந்தே, வேலை நடைமுறைகள் மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் அளப்பரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. அலுவலகத்திற்குச் சென்று வேலைப் பார்த்துவந்த பெரும்பாலானோர் மாற்றம் அடைந்துள்ளனர். இன்று அவர்கள் வீட்டில் இருந்தே வேலைச் செய்யும் “வொர்க் ஃப்ரம் ஹோம்” முறைக்கு மாறிவிட்டனர்.
கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பைத் தடுக்க அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஊழியர்களுக்குப் பேருதவியாக இருந்தன. இதன் மூலம், வீட்டில் இருந்தே வேலைச் செய்யும் போது ஏற்படும் நேர்மறையான அம்சங்களை அவர்கள் அடையாளம் கண்டனர்.வீட்டில் அலுவலக வேலைகளைப் பார்த்தவாறே குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், மனைவி/ கணவருடன் அதிக நேரத்தைச் செலவிடுவது உள்ளிட்ட நன்மைகளை அவர்கள் அனுபவித்தனர். வீட்டில் இருந்து அலுலகப் பணிகளை மேற்கொள்ளும் போது, ஆடைக்குறியீடானது இல்லை, நேரில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பயண நேரம் இல்லை, உங்களின் பணியிடத்தை நீங்களே தீர்மானிக்க இயலும்.
வீட்டில் இருந்து பணிபுரிவதால் ஏற்படும் இன்னல்கள்
இந்தப் புதுமையான நடைமுறையானது, வீட்டில் இருந்து வேலைச் செய்வதில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லாததை நீங்கள் உணரும்போது அது பதட்டத்தைத் தூண்டுவதாக உள்ளது. வீட்டில் இருந்து வேலைச் செய்யும் போது, வேலைநாளுக்குத் தொடக்கமும், முடிவும் இல்லை. இது நபரின் உடல் மற்றும் மனநலனைப் பெரிதும் பாதிக்கிறது.ஊரடங்கு நிகழ்வின்போது, ஊழியர்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து வேலைச் செய்தால், அவர்கள் அலுவலகத்தில் இருந்து வேலைச் செய்வதைக் காட்டிலும், அதிகளவிலான மன அழுத்த பாதிப்பையும், மந்த நிலையும் ஏற்படுகிறது.
இன்றைய கார்ப்பரேட் உலகில், ஊழியர்கள் அலுவலகத்திலோ அல்லது வீடு என எங்கிருந்து வேலைப் பார்த்தாலும், பெரிய உடல்நலக்குறைபாடுகளுக்கு உள்ளாவது கண்கூடாகத் தெரிகிறது.
- நீரிழிவு நோய்ப்பாதிப்பு
- ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம்
- உடல் பருமன்
- புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாதல்
- அதிகக் கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுதல்
- மன இறுக்கம்
- இரைப்பை அழற்சி
உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதன்காரணமாக, மன அழுத்த பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர்.
தீர்வு நடவடிக்கைகள்
இத்தகைய சூழ்நிலையில், கார்ப்பரேட் உலகின் அழுத்தத்தைச் சமாளிக்கும் பொருட்டு, கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக, நாம் போதிய அளவிலான இடைவெளி எடுத்துக்கொள்வதும், மன அமைதிக்குக் காரணமாக, நிதானமான வகையிலான செயல்களில் ஈடுபடுவது அவசியமாகும்.
முழுமையான சிகிச்சை முறையானது, இன்றைய நடைமுறைக் காலத்தில் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமநிலையை உள்ளடக்கியதாக, முழுமையான சிகிச்சைமுறை அமைந்து உள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், உறக்கமின்மைப் பாதிப்பை நிவர்த்தி செய்யவும், மன அழுத்த பாதிப்பைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நினைப்பவர்களுக்கு, முழுமையான சிகிச்சை முறைகள் சிறந்த தீர்வாக உள்ளன.
முழுமையான சிகிச்சை முறையை மேற்கொள்பவர்கள், குறிப்பிட்ட நபரின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்கின்றனர். இதில் உணவுமுறை, உடலின் செயல்பாடுகள், மனம் மற்றும் உணர்ச்சி திரிபுகள் அடங்கும்.இது அறிகுறிகளுக்கான அடிப்படைக் காரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. நவீன மருத்துவ முறையுடன் பழமையான, மாற்று சிகிச்சைகளை இணைப்பதன் மூலம், பயிற்சியாளர்களை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த, சிறந்த முறைகளைப் பயன்படுத்த உதவுகிறது.
மேலும் வாசிக்க : வாழ்க்கையில் அமைதியைக் கண்டறியும் வழிமுறைகள்
குணப்படுத்தும் முறையின் பயன்கள்
முழுமையான குணப்படுத்தும் முறையின் மூலம் பின்வரும் சிகிச்சைகளுக்குப் பலன் கிடைக்கின்றன.
- அக்குபஞ்சர் மருத்துவம்
- அரோமாதெரபி
- நிறங்கள் அடிப்படையிலான சிகிச்சை
- கப்பிங் சிகிச்சை
- ரெய்கி மருத்துவம்
- ராகங்கள் அடிப்படையிலான சிகிச்சை
- சூடான கல் மசாஜ் சிகிச்சை
- யோகா மற்றும் தியானம்
- மண் சிகிச்சை
ஆயுர்வேத நடைமுறைகளான ஷிரோதரா, உத்வர்தன் மற்றும் பஞ்சகர்மா நடைமுறைகள், முழுமையான குணப்படுத்தும் அனுபவத்தின் ஒரு பகுதியாகும். அத்தியாவசிய எண்ணெய்கள், மூலிகைக் கலவைகள் உள்ளிட்ட இயற்கைக் கூறுகள், உடலின் நச்சுத்தன்மையை அகற்ற பயன்படுகின்றன. இயற்கை மருத்துவமானது, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், உடல்பாதிப்புகளைக் குணப்படுத்தும் வகையிலான சக்திகளில் கவனம் செலுத்த உதவுகிறது. ஹைட்ரோதெரபி, வைப்ரோ மசாஜ், எனிமா உள்ளிட்ட நடைமுறைகளும், இந்த மருத்துவ முறையில் அடங்கும்.
இந்த இயற்கை நடைமுறைகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், முழுமையான குணப்படுத்துதலை உருவாக்கி, உடலுக்குப் புத்துயிர் அளிக்க உதவுகிறது.இது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்கான அதிகாரத்தையும் பயனர்களுக்கு வழங்குகிறது.