A young couple having a happy conversation while enjoying healthy food at home.

உணவுடனான உங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

உங்கள் உணவுமுறையுடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது முக்கியம். இது உங்கள் உடலுக்கு எது உகந்தது, எது பொருத்தமற்றது என்பதை அடையாளம் கண்டறிய உதவும்.

உணவுடனான உறவுமுறையை எவ்வாறு புரிந்துகொள்வது?

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான நேரத்தில் கிடைப்பது அவசியமாகும். அதனடிப்படையிலான ஆரோக்கியமான உணவுமுறையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையானது, உங்கள் உடல்நலத்திற்கு நன்மைபயப்பனவாக இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் உணரும்போதுதான், உங்களால் சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்ள இயலும்.

தினசரி பழக்கவழக்கங்களில் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பரிந்துரைகள்

உடலின் இயற்கையான பசிக் குறிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்

பசி உணர்வு என்பது இயல்பான உயிரியல் செயல்பாடு ஆகும். உங்கள் உடல் சரியான இடைவெளிகளில், பசி உணர்வுக்கான சிக்னல்களை வெளியிடுகிறது. அந்தச் சிக்னல்களுக்கு நாம் போதிய மதிப்பளித்து, உணவு வகைகளைச் சாப்பிட்டு வர வேண்டும்.பசி உணர்வின் சிக்னல்களைப் புறக்கணித்தால், அது வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, அதீதப் பசி உணர்வு, அதிகப்படியான உணவை உட்கொள்ளுதல், இதனால் ஏற்படும் உடல்பாதிப்புகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

உங்கள் வயிறு சொல்வதையும் கேளுங்க..

இயற்கையான பசி உணர்வை வெளிப்படுத்தும் சிக்னல்களை நாம் ஒருபோதும் புறந்தள்ளக் கூடாது. தலைச்சுற்றல், லேசான தலைவலி, எரிச்சல் உணர்வு, எதிலும் ஈடுபாடு இல்லாத நிலை, குமட்டல் உணர்வு, தெளிவற்ற மனநிலை, வயிற்றுவலி, நடுக்க உணர்வு, உடலுக்குப் போதிய சக்தி இல்லாத நிலை உள்ளிட்டவை, பசி உணர்வின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்தப் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

பசியாக இருக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்

பசி உணர்வுக்கான சிக்னல்களை மதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று, உணவுமுறைக் குறித்த நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்குப் பசி உணர்வு மேலோங்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். நீங்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியாகத் திருப்தி அடையும்போது, சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

பசிநேரத்தில் கலோரியைப் பற்றிய அச்சம் தேவையில்லை

பசி நேரத்தில், உடலின் கலோரி எரிப்பு விசயத்தில், கவனம் கொண்டால், அது ஒழுங்கற்ற உணவுப்பழக்கத்திற்குக் காரணமாக அமைந்துவிடும். உங்கள் உடலுக்குப் பசி உணர்வு ஏற்படும் போது, நீங்கள் உணவு வகைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அப்போதுதான், முழுமையான அளவிலான ஆற்றல் கிடைக்கும். உங்கள் உடல் விரும்புவதை, சரியான அளவில் சாப்பிட அனுமதியுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்குத் துணைநிற்கும்.

Top view of a young couple in workout costume, having healthy salad in a gym.

 

சிறந்த உணவுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

கார்போஹைட்ரேட் கொண்ட உணவு வகைகள், உடலுக்குத் தீங்கானது என்று சொன்னால், அவர்களைப் புறக்கணித்துவிடுதல் நல்லது. ஏனெனில், கார்போஹைட்ரேட்களிலேயே ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரண்டு வகைகள் உள்ளன. நமது உணவுமுறையில் காய்கறிகள், பழ வகைகள், பருப்பு வகைகள், கோதுமை, ஓட்ஸ், முழுத்தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ள உணவுவகைகளை இடம்பெறச் செய்வது நல்லது.

காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது

நம்மில் பெரும்பாலானோர், பல்வேறு காரணங்களுக்காக, காலை உணவைத் தவிர்த்து வருகிறோம். அன்றைய நாளின் முதல் உணவைத் தவிர்ப்பதன் மூலம், மதிய உணவில் அதிகமாகச் சாப்பிடும் சூழல் உருவாகும். அதேபோன்று, இரவில் தாமதமான உணவு உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இது தவறான உணவுச் சுழற்சிக்குக் காரணமாக அமைந்து விடும்.

சுயமதிப்பீடு வேண்டாம்

நீங்கள் விரும்பும் உணவுகளைச் சாப்பிடுவது திருப்தி அளிக்கலாம், ஆனால் அது எப்போதும் பொருந்தாது.நீங்கள் ஆரோக்கியமான உணவுமுறையினை மேற்கொள்கிறீர்கள் மற்றும் உடலின் சிக்னல்களுக்குப் போதிய மதிப்பு அளிக்கிறீர்கள் என்றால், சுயமதிப்பீடு செய்துகொள்வதில் தவறில்லை.

உணவுமுறை உடனான உறவை மேம்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விசயம், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஆரோக்கியமான உணவுமுறையௌ மேற்கொள்ள விரும்பினால், அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன.

பசி உள்ளுணர்வைக் கேட்டு இருக்கிறீர்களா?

பசி உள்ளுணர்வு என்பது நீங்கள் சாப்பிட உண்மையான அதேசமயம் நிபந்தனையற்ற அனுமதியைத் தரும் வழிமுறை ஆகும். சாப்பிடும் நடைமுறையில், பய உணர்வை, முற்றிலுமாக விட்டொழிக்க வேண்டும். எதைச் செய்தாலும், அதில் ஒரு மன அமைதியையும், திருப்தியும் அடைய வேண்டும். இது உணவு சாப்பிடுவதற்கும் பொருந்தும். அப்போதுதான், எது ஆரோக்கியமான உணவுமுறை என்பதை நாம் அடையாளம் காண முடியும்.

உணவு அட்டவணையை உருவாக்கி, அதனடிப்படையில் நடக்கும்பட்சத்தில் நாம் பசியௌ உணரும்போது சாப்பிடவும், கிட்டத்தட்ட வயிறு நிரம்பியவுடன், சாப்பிடுவதை நிறுத்த தூண்டுகிறது.

குற்ற உணர்வைத் தவிர்க்க வேண்டும்

நாம் வருத்தமான மனநிலையில் இருக்கும் போது, சாக்லேட் அல்லது நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவது ஒன்றே, அந்த மனநிலையில் இருந்து வெளியேறுவதற்கான வழி என்று நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நின்றுபோனப் பணியை மீண்டும் தொடர்வது, நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் செய்ய விரும்பும் வேலைகளைச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க : ஆன்லைன் சுகாதார மதிப்பீடு முறையை அறிவோமா?

புதியனவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்களுக்குப் பசி உணர்வு இல்லாவிட்டாலும், அனுபவித்துச் சாப்பிடுங்கள். உங்களது தேவைகளை, நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டறீர்களோ, அந்தளவிற்கு, உணவுமுறை உடனான உறவு மேம்படும்.

உணவியல் நிபுணரின் வழிகாட்டுதலின்படி, தினசரி ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்வதன் மூலம், உடலுக்கு எது நன்மைப் பயக்கின்றது எது தீமை விளைவிப்பதாக உள்ளது என்பதை அடையாளம் காண முடியும்.

உணவுமுறையுடனான உறவை மேம்படுத்துவதற்கு, சில நடைமுறைகளை, தினசரி வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஏதாவது சிக்கல்களை எதிர்கொள்ளும்பட்சத்தில், நிபுணரைக் கலந்தாலோசிப்பது நலம், ஏனெனில், இது கடுமையான உணவுக்குறைபாடுகளை ஏறபடுத்திடக் கூடும்.

உணவுமுறை உடனான உறவை மேம்படுத்தி, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை உருவாக்கி, நல்வாழ்க்கை வாழ்வீராக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.