A complete Indian meal served on a big banana leaf.

சாப்பிடுவதில் கவனம் அவசியமா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தி உள்ளோம்.நாம் இப்போதெல்லாம், உணவை நன்றாக மென்று சாப்பிடாமல், ஏதோ கடனுக்கு என்று அவசரகதியில் சாப்பிட்டு வருகிறோம். பசி உணரவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடாமல், துரித உணவுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை ஆர்டர்ச் செய்து சாப்பிடுகிறோம். ஆர்டர்ச் செய்யும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுகாதார அம்சங்களில் போதிய அக்கறைக் காட்டுவது இல்லை. தற்போது இது பிரச்சினையாகத் தோன்றாவிட்டாலும், இந்த உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

நம் உடல் எவ்விதத் தங்குதடையின்றிச் சிறப்பாகச் செயல்பட உணவு மற்றும் நீர் அத்தியாவசியமானதாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவானது, உடலின் இயக்கங்களுக்கு எரிபொருளாகச் செயல்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவுவகைகளைப் பொறுத்தே, நமது உடலின் செயல்பாடு அமைகிறது.

ஆரோக்கியமான இந்திய உணவுமுறைகள்

பண்டையக்கால இந்திய மரபுகள், கவத்துடன் சாப்பிடுவதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

தரையில் அமர்ந்து சாப்பிடுதல்

டைனிங் டேபிள்கள் வருவதற்கு முன்பு, இந்தியர்கள் தரையில் அமர்ந்து சம்மணமிட்டு, சுகாசானா நிலையில் தான் உணவு சாப்பிட்டு வந்தனர்.

An elderly Indian woman making dosa inside an ordinary kitchen.

சரியான காலை உணவு

காலை உணவானது, அன்றைய நாளில் மேற்கொள்ளப்படும் முதல் உணவு ஆகும். அன்றைய நாளின் வழக்கமான பணிகளைத் திறம்பட மேற்கொள்ள, காலை உணவானது பேருதவி புரிகிறது.

சமையல் பாத்திரங்களின் மூலமான சத்து

பண்டையக்கால மக்கள் கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்களுக்குப் பதிலாக, பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களையே, சமையலுக்குப் பயன்படுத்தினர். இந்தியர்கள், இரும்புப் பாத்திரங்களிலேயே சமைத்தனர். இது உடலின் இரும்புச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவியது.

மண் பானைகளைப் பயன்படுத்துதல்

பண்டையக் காலங்களில், மக்கள் தண்ணீரைச் சேமிக்க, மண் பானைகளைப் பயன்படுத்தினர். மண் பானைகள், இயற்கைக் குளிரூட்டியாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய உணவைச் சாப்பிடுதல்

உணவு எப்போதும் புதிதாகத் தயாரிக்கப்பட்டுச் சுடச்சுட பரிமாறப்பட்டது. அதனால், அந்த உணவில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

கவனச்சிதறல்களுக்கு நோ

சாப்பிடும் போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிடும்போது எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள், பாட்டு கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல் போன்ற கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

மனந்தெளிநிலை என்றால் என்ன?

நடப்பு நேரத்தில் உங்களுடன் இருப்பது மற்றும் உங்களைச் சுற்றி நடக்கும் விசயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பதே, மனந்தெளிநிலை என்று வரையறுக்கப்படுகிறது. இதைச் சுருக்கமாகக் கூறுவதென்றால், குறிப்பிட்ட செயலில் ஈடுபடும்போது, மற்ற எந்த விசயங்கள் குறித்தும் சிந்திக்கக் கூடாது என்பதே ஆகும். சாப்பிடுவது, அலுவலகப் பணிகளை மேற்கொள்வது, ஷாப்பிங் செய்வது, சினிமா பார்ப்பது என எந்தவொரு நிகழ்வையும், முழுமனதுடன் மேற்கொள்வதே ஆகும்.

கவனமாகச் சாப்பிடுதல் என்றால் என்ன?

நாம் மேற்கொள்ளும் உணவுப் பழக்கத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெற உதவும் நிகழ்வே, கவனமாகச் சாப்பிடுதல் என்று வரையறுக்கப்படுகிறது.

கவனமாகச் சாப்பிடுதல் நிகழ்வை எவ்வாறு மேற்கொள்ளலாம்?

உங்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான சில வழிகள்

கவனச்சிதறல்களை நீக்கவும்

உணவு உட்கொள்ளும்போது, டிவி பார்த்தல், ஸ்மார்ட்போனில் குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்புகளை மேற்கொள்ளுதல், குறுஞ்செய்திகளைப் படித்தல் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் விழிப்புடன் இருக்கவும். இது உங்கள் உணவை நன்கு ரசித்து, ருசித்துச் சாப்பிடத் தூண்டும். இதன்மூலம், உணவுடனான உங்கள் உறவு மேம்படுகிறது.

உணவை அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுங்கள்

நம் உடலின் ஆரோக்கியம் மேம்பட, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து, புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறையானது, உடல் எடை நிர்வாகத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.முழுமனதுடன் உணவு உட்கொள்வது அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தவிர்க்க உதவும். போதுமான அளவு சாப்பிட்டபின், பசி உணர்வு தானாக அடங்கும். இது மலச்சிக்கல், செரிமான பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். புதிதாகச் சமைக்கப்பட்ட உணவு அதிக ஊட்டச்சத்துகளை வழங்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்

உணவை நன்றாக மென்று சாப்பிடுதல் மிக முக்கியமான நடவடிக்கை ஆகும். உணவைச் சிறு துண்டுகளாக எடுத்து, பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். இது தேவையான அளவு மட்டுமே சாப்பிட உதவும்.

உணவு செரிமான நிகழ்வானது, வாய்ப்பகுதியில் இருந்தே துவங்குகிறது. கவனத்துடன் சாப்பிடும்போது, செரிமான நிகழ்வானது மேம்படுகிறது. நீங்கள் மெதுவாகச் சாப்பிடும்போது, குறைவாகச் சாப்பிட உதவுகிறது. இதன்காரணமாக, உடல் எடையானது கட்டுப்படுத்தப்படுகிறது. இது உணவு இடைவேளைகளில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடத் தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.

தட்டு முழுவதுமான சாப்பாடு வேண்டாம்

சிலர்த் தாங்கள் சாப்பிடும் தட்டு முழுவதும் உணவு வகைகளை நிரப்பி இருப்பர். ஆனால், இறுதியில் அதில் பாதியைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். உணவைச் சிறிய அளவில் எடுத்துக் கொண்டு அது நிறைவடைந்த உடன், மீண்டும் வாங்கிக்கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. இது உணவு வீணாவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாது, அதிகப்படியான உணவு உட்கொள்ளுதலையும் தடுக்கிறது.

மேலும் வாசிக்க : உணவுடனான உங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

புலனுறுப்புகளையும் பயன்படுத்தவும்

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கண்களால் பார்ப்பதன்மூலம், கவனச்சிதறல்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உணவு சமைக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களைக் கண்டறிய, சமைக்கப்பட்ட உணவை, மூக்கிற்கு அருகே கொண்டு சென்று வாசனையை நுகரவும்.

போதுமானவரை, கைகளாலேயே எடுத்து உணவைச் சாப்பிடவும்

உணவை நன்றாக மென்று சாப்பிட்டு, அதன் சுவையை உணரவும்.

கவனமாகச் சாப்பிடுதல் பயிற்சியானது ஏன் அவசியம்?

கவனமாகச் சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாது, மருத்துவரீதியாகவும் பல நன்மைகள் உள்ளன.

கவனமாகச் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம், PCOD / PCOS, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்ப்பாதிப்புகள், தைராய்டு, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளைத் துவக்கத்திலேயே நிர்வகித்துக் கட்டுப்படுத்தலாம்.

கடுமையான உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள், ஒழுங்கற்ற உணவுப்பழக்கத்தை உடையவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தக் கவனமாகச் சாப்பிடுதல் நிகழ்வானது உற்ற துணைவனாக விளங்குகிறது.

கவனமாகச் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு, செரிமான பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஓரங்கட்டி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.