A scared woman sits in the corner of a room, surrounded by shadows of people, reminding us to consult trusted mental health professionals for a better quality of life.

மனநல சிகிச்சைக் குறித்த தவறான கருத்துக்கள்

மனநல மருத்துவர் அல்லது மனநல சிகிச்சை என்பது மக்களிடையே எப்போதும் எதிர்மறையான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. இதில், மனநல மருத்துவம் என்ற சொல்லானது, பாராட்டு மற்றும் சந்தேகத்தின் கலவையாக உள்ளது.

மக்கள் பல காரணங்களுக்காக மனநல மருத்துவரை நாடுகின்றனர்.இவற்றில் மாயத் தோற்றங்கள், கண்ணுக்குத் தெரியாதவர்களின் குரல்களைக் கேட்டல், பயம் குறித்த பாதிப்புகள்,
தற்கொலை எண்ணம் போன்ற பிரச்சினைகள் அடங்கும். இப்பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையிலும் இருக்கலாம்.

மனநல சிகிச்சை மேற்கொள்வது என்பது, பயங்கரமான அனுபவமாகவே அமைகிறது. இந்த விவகாரத்தில், சிறந்த மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் இன்றியமையாதது ஆகும். இதற்காக, நீங்கள் நீண்டகாலம் மெனக்கெடுவதில் எவ்விதத் தவறுமில்லை.

சில தருணங்களில், மன ஆரோக்கிய நிகழ்வானது, மிகவும் வேதனை அளிப்பனவையாக உள்ளன. இந்த நிகழ்வில் இருந்து நீங்கள் விடுபட உதவும் நடவடிக்கைகள், மிகுந்த சவால்மிக்கதாக உள்ளன. துவக்கத்திலேயே நீங்கள் சிகிச்சைப் பெறத் துவங்கினால், மற்ற நோய்ப்பாதிப்புகளைப் போலவே, மனநோய்ப் பாதிப்பில் இருந்து விரைவாகக் குணம் பெற இயலும்.

இன்று மனநல சிகிச்சைகள் பற்றிய தவறான கருத்துகள் பரவி உள்ளன. இவை உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ தீங்கு விளைவிக்கலாம். எனவே, இது குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மனநல சிகிச்சைத் தொடர்பான தவறான கருத்துகள்

மனநல மருத்துவர்கள் என்பவர்கள் உண்மையான மருத்துவர்கள் அல்ல

மனநல மருத்துவர்கள் என்பவர்கள், உண்மையில் இரட்டை நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர். இவர்கள், வழக்கமான மருத்துவர்களைப் போன்று, MBBS பட்டம் பெற்று உள்ளதுடன் மட்டுமல்லாது மனநல மருத்துவத்தில் MD பட்டமும் பெற்று உள்ளனர். இது அந்தத்துறையில் நிபுணத்துவம் பெற்றதற்குச் சமமாகும். 5 ஆண்டுகள் கால அளவிலான MBBS படிப்புக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கால படிப்பு மட்டுமல்லாது, அர்ப்பணிப்புப் பயிற்சியும் இதற்குத் தேவைப்படுகிறது.

மனநல மருத்துவர்கள், பணம் படைத்தவர்களுக்கானவர்கள்

இந்த கூற்றை, முற்றிலும் பொய் என்று புறந்தள்ளிவிட முடியாது. மனநலச் சிகிச்சைத் தேவைப்படுபவர்கள், தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மனநல மருத்துவர்களை நாடும்போது, அங்கு அதிகளவிலான பணம் செலவாக வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில், இலவசமாகவே மனநலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படும் மருத்துவர்கள் நீண்ட தடைக்கற்களைத் தாண்டி, அந்தப் பதவிகளுக்கு அதிகத் தகுதி மற்றும் பணி அனுபவத்துடன் வந்தமர்வதால், அவர்களின் கவனிப்பு நடவடிக்கையானது, மிகவும் கடினமானதாகவே இருக்கும். நோயளிகளுக்கு உள்ள மனநலப் பாதிப்புகளைப் பொறுத்து, தனியார் மருத்துவமனைகளின் மனநல மருத்துவர்கள் நிர்ணயிக்கும் கட்டண விகிதங்களும் மாறுபடும்.

A mental health care professional consulting with a patient and making notes on a clipboard during a healthcare appointment.

பலவீனமானவர்கள் மட்டுமே, மனநல மருத்துவர்களைச் சந்திக்கின்றனர்.

இந்தக் கூற்று தவறானது ஆகும். மனநோய்ப் பாதிப்பானது, நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பல்வேறு நாடுகளின் ஜனாதிபதிகள், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு முன்பு, மனநல மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுகின்றனர். உடலில் ஒரு வெட்டுக்காயம் ஏற்பட்டால், அதனை எவ்வாறு தகுந்த முதலுதவி மேற்கொண்டு காக்கின்றோமோ, அதுபோன்று, மனநலப் பிரச்சினைகளையும், எவ்விதத் தயக்கமும் இன்றி, சிகிச்சைகளை மேற்கொண்டால் மட்டுமே, அந்தப் பாதிப்புகளில் இருந்து பூரண நலம் பெற முடியும்.

இது முற்றிலும் பணவிரய நடவடிக்கை மட்டுமே

சில மனநல மருத்துவர்களால், இந்தக் கூற்றை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டி உள்ளது. உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் விடப்பட்ட சில மனநலப் பாதிப்புகள், பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் மறக்கவோ அல்லது மறுக்கவோ இயலாது. இங்கு மனநலன் என்பது இன்றியமையாத நிகழ்வாக உள்ளது. நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பல ஆயிரம் செலவு செய்யும் நாம்,அமைதியான மனநிலைக்குச் செலவு செய்யத் தயக்கம் காட்டுகிறோம்…

இது பைத்தியக்காரர்களுக்கானது..

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சொல்லெணாத் துயரத்தில் உள்ளனர். இவர்களில் நபருக்கு நபர் வலி உணர்வானது மாறுபடுகின்றது. சிலருக்கு இந்த வலியின் காரணமாக, உடல்நிலைக் கூட பாதிக்கப்படலாம். அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்று அழைப்பது, உணர்ச்சி வலியால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் கவலைக்கு உள்ளாக்குகிறது. இது அவர்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. உடல் வலிக்கு மருத்துவ உதவி தேடுவது போல, உணர்ச்சி வலிகளுக்கும் மனநல மருத்துவரின் உதவியை நாடுகிறார்கள்.

ஒரே மருத்துவர் அனைவருக்கும் உதவுவார்..

ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள் வெவ்வேறு அளவிலான பலங்களைக் கொண்டிருப்பர். அவரவர்களது பணிகளுக்காக ஒருவரையொருவர்ச் சார்ந்திருப்பர். சில விஷயங்களில் சிலர் நெருக்கமாகவும் இருக்கலாம். ஆனால், மனநல விவகாரத்தில், ஒரே மருத்துவர், இரண்டு பேருக்குச் சரியான சிகிச்சை வழங்குவார் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.

மேலும் வாசிக்க : மனநல மீட்பு நிகழ்வில் மறுவாழ்வு மையத்தின் பங்கு

மனநல மருத்துவத்தில் இரண்டாம் கருத்துகளுக்கு இடமே இல்லை

நீங்கள் உடல்ரீதியிலான சிகிச்சைப் பெறும் நிகழ்வில், எந்தவொரு மருத்துவ முடிவுக்கும், இரண்டாவது கருத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை வழங்கப்பட்டு உள்ளது. மனநல மருத்துவம் விவகாரத்தில், மருத்துவர் உங்கள் குறைபாட்டைக் கண்டுபிடித்துச் சிகிச்சையைத் தொடங்கினால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும். அப்படி இல்லாமல், மருத்துவர் உங்கள் குறைபாட்டைக் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றாலோ அல்லது, அவரின் பதிலளிக்கும் விதம் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலோ, நீங்கள் மற்றொரு மருத்துவரிடம் செல்வதில் எவ்விதத் தவறும் இல்லை.

மனநல மருந்துகள் போதை உணர்வை ஏற்படுத்துகின்றன

மனநல சிகிச்சைக்கு அளிக்கப்படும் அனைத்து வகை மருந்துகளில் பெரும்பாலானவை அடிமையாக்குவதில்லை. கவலை, பயம் சார்ந்த பாதிப்புகள், ADHD மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள், சிலரை அடிமையாக்கக் கூடும். நீங்கள் எடுத்துக் கொள்ள இருக்கும் மருந்துகள் குறித்த விவரங்களை, மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு அடைந்துகொள்ளுதல் நல்லது.

மனநல மருத்துவம் எல்லோருக்கும் ஒரேமாதிரியானது

இது முற்றிலும் தவறான கூற்று ஆகும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறோம். மனநலப் பாதிப்பு நோயாளிகளிடம், மருத்துவர்ப் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திய பின்னரே, அவர்களுக்கான மருந்துகளை நிர்ணயம் செய்கிறார். சிலருக்கு மருந்துகளை நிர்ணயிப்பதற்கு, ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். நோயாளிகள், அவர்களின் உடல் தன்மைக்கு ஏற்ப, மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, சிகிச்சைப் பெற்றுக் கொள்வது நல்லது.

முதல் மருந்து வேலைச் செய்யவில்லை எனில் துவண்டு விடாதீர்கள்

மனநல மருத்துவம் மட்டுமல்லாது, அனைத்து மருத்துவ முறைகளிலும், முதலில் வழங்கப்படும் மருந்துகள் உரிய பலனைத் தரும் என்று எதிர்பார்ப்பது தவறான நடவடிக்கை ஆகும். உங்களுக்கு எந்த மருந்துகள் பொருத்தமானது என்பதை, சில முடிவுகளின் மூலமே அறிய இயலும். மருந்துகளுக்கு, நமது உடல் எவ்வாறு வினைபுரிகிறது என்பதை அறிய மனநல மருத்துவருக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படும். அதை நீங்கள் அவருக்குக் கட்டாயம் வழங்கி, அவர் உரிய முடிவு எடுக்கும்வரை, காத்திருப்பது அவசியம் ஆகும்.

பாதிப்பு குறைந்தவுடன், மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திவிடலாம்

இதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு ஆகும். மனநல சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்துகள், ஆன்டி-பயாடிக் மருந்துகள் போன்றவைகள் ஆகும். இது உங்கள் சிகிச்சைக் காலம் முழுமைக்கும் உட்கொள்ள வேண்டும். நீங்கள் மருந்துகள் உட்கொள்வதை, பாதியிலேயே நிறுத்திவிட்டால், மறைந்த பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கக் கூடும். பின்னர் அதே பாதிப்புகளை மீண்டும் உணர வேண்டி இருக்கும். சில தருணங்களில், மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தும்பட்சத்தில், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

தேவைப்படும்போது மருந்துகளை எடுக்கவும்

அனைத்து மருந்துகளும், மருத்துவர்ப் பரிந்துரைத்த காலம் வரை, கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.மருந்தை முறையாக எடுத்துக்கொள்ளாவிட்டால், நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை நாம் அடைய முடியாது. நீங்களாகவே, மருந்து நிர்வாகத்தை மேற்கொள்வது, மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

மனநல சிகிச்சை விவகாரத்தில் தவறான தகவல்களை அப்படியே நம்பிவிடாமல், அதற்கு உரிய சரியான மனநல மருத்துவரைக் கலந்தாலோசித்து, இந்தப் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற்று வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.