OCD நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள்
OCD எனப்படும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு நோய் என்பது ஒருவிதமான மனநோய் ஆகும். இது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது உலக மக்கள்தொகையில் 1 முதல் 3 சதவீத அளவிலான மக்களைப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்புகளுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே, பாதிப்பு அறிகுறிகளை விரைவாக அடையாளம் கண்டு, உடனடி நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.
OCD என்பது உளவியல் நிலை ஆகும். இந்தப் பாதிப்பு உள்ள நோயாளி, எதையாவது குறித்து அதிகமாகச் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். இதன்காரணமாக, அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். தூய்மை, பொருட்களின் ஏற்பாடு உள்ளிட்ட கருப்பொருள் குறித்த அதிகப்படியான சிந்தனையுடன் துவங்குகிறது. இந்த நிலை, மெதுவாகத் துவங்கி, பின்னர்ப் படிப்படியாக அதிகரிக்கத் துவங்குகிறது.
லேசான அறிகுறிகளுடன் துவங்கும் OCD நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள், காலப்போக்கில், தீவிரமான அறிகுறிகளாக உருமாறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பெரியவர்களிடையே இப்பாதிப்பு ஏற்படும்போது, கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது தொழில் வாய்ப்புகளைச் சீர்குலைப்பதுடன், சுயக் காயத்திற்கும் வழிவகுக்கிறது.
OCD அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சரியான நேரத்தில் சிகிச்சையைத் துவக்க முடியும். அறிகுறிகள் தீவிரமடையும்போது, சிகிச்சைக் கடினமாகிறது. எனவே, அறிகுறிகளின் தீவிரத்திற்கேற்ப சிகிச்சைத் திட்டங்களை மாற்ற வேண்டும்.
அறிகுறிகள்
OCD பாதிப்பின் அறிகுறிகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. இந்தப் பாதிப்பிற்கு, இதுதான் நிலையான அறிகுறிகள் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாத சூழல் நிலவுகிறது. இதன் அறிகுறிகள் ஆவேசம் மற்றும் நிர்பந்தம் என்ற இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
ஆவேச உணர்வு
இவை மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்கள் ஆகும். இந்த எண்ணங்கள், தொந்தரவு மற்றும் திகில் ஊட்டும் வகையினதாக உள்ளன. தீவிரமான கவலை உணர்வு, மன அழுத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த வகை எண்ணங்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், பகுத்தறிவு அற்றவர் என்று குறிப்பிடப்படுகிறார்.
நிர்பந்தங்கள்
ஒரு செயலைச் செய்யக் கட்டாயப்படுத்தும் வகையிலான நடத்தைகள், சிந்தனைகள், உங்களை நிர்பந்த்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இது உங்கள் அன்றாட நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.
மீண்டும் மீண்டும் கைக் கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள்
ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்தல்
பணத்தை அடிக்கடி எண்ணுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் ஆகும்.
அதீதக் கவலை
அமைதி இல்லாத நிலை
எதிர்மறையான அதேசமயம் மகிழ்ச்சி இல்லாத நிலை
படபடப்பு உணர்வு
தசைப்பகுதிகளில் திடீர் வலி உணர்வு
அதிகச் சோர்வு நிலை
கூச்ச உணர்வு உள்ளிட்டவை, இதன் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
இந்த அறிகுறிகள் சிலருக்கு, லேசானது முதல் தீவிரமான வகையினதாக இருக்கும். சிலருக்கு, இந்தப் பாதிப்பின் அறிகுறிகள், வெளியே தெரியாத வண்ணத்துடனும் இருக்கலாம். இந்த அறிகுறிகள், எந்த நேரத்திலும் கூட வெளியாகலாம்.OCD பாதிப்பானது, பொதுவாக 10 முதல் 12 வயதிற்குள் துவங்குவதாக, மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
மேலும் வாசிக்க : மனநல சிகிச்சைக் குறித்த தவறான கருத்துக்கள்
OCD ஏற்படுத்தும் பாதிப்புகள்
OCD பாதிப்பின் அறிகுறிகள், உடல்நலத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்றன.
உடல்நலம்
சிலர்க் கைகள் மற்றும் முகத்தை அடிக்கடி கழுவுகின்றனர். இதன்காரணமாக, தோல்ப்பகுதியில் சில காயங்களை உணர்கின்றனர். கட்டாயத்தின் பேரில், OCD நோயாளிகளில் சிலர், தவறான மருந்துகளை உட்கொள்கின்றனர். பய உணர்வு மற்றும் OCD பாதிப்பு காரணமாக, பெரும்பாலான கர்ப்பிணிகள், கருக்கலைப்புக்கும் உட்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறுகின்றன.
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை
OCD நோயாளிகளால், தங்கள் வேலைகளில் முழுக்கவனமும் செலுத்த முடியாது. இதன்மூலம், அவர்களின் தொழில் மற்றும் கல்வி நிகழ்வுகளுக்குப் பெரும் இடையூறாக அமைகிறது. நோயாளிகள், பயத்தைக் குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதால், அவர்களால், தங்கள் பணியைச் சிறப்பாக முடிக்க இயலாத நிலை உருவாகிறது.
உறவுகளைப் பேணுவதில் சுணக்கம்
OCD நோயாளிகள், அதீதப் பயம் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இதன்காரணமாக, அவர்களது சமூகத் தொடர்பானது அறுபடுகிறது. இவர்களின் நடத்தைகளினால், அருகில் உள்ளவர்கள் விரக்தி அடைகின்றனர். இது, அவர்களின் தனிப்பட்ட உறவு நிலைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD) நோய்ப்பாதிப்பிற்கான அறிகுறிகளை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சையை, சரியான நேரத்தில் மேற்கொண்டு பாதிப்பில் இருந்து விடுபட்டு, உடல்நலத்தைப் பேணிக்காப்போமாக…