உங்கள் குழந்தைக்கு மனநல உதவி அவசியமா?
இன்றைய இயந்திரத்தனமான உலகில் போட்டி மற்றும் பரபரப்புகளுக்கு என்றும் குறைவில்லை. இந்த வாழ்க்கைமுறை மாற்றங்களால், பெரியவர்களும் குழந்தைகளும் மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களும் பாதுகாவலர்களும் குழந்தைகளின் மனநலப் பாதிப்பு அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டறிய வேண்டும். இதன்மூலம், பாதிப்பிற்கான காரணத்தை அறிந்து கொண்டு, சரியான சிகிச்சையை உரிய நேரத்தில் துவக்க முடியும்.
பாதிப்பைக் கண்டறிவது எப்படி?
குழந்தைகளுக்கு, மனநலப் பாதிப்பு இருப்பதை, சில காரணிகளின் மூலம் கண்டறிய முடியும்.
நடத்தைகளில் மாற்றங்கள்
அசாதாரணமான சூழ்நிலையில், உங்கள் குழந்தை எப்படி நடந்துகொள்கிறார் என்பது, முதன்மைக் காரணியாக உள்ளது. மனநிலையில் திடீர் மாற்றங்கள், கல்வி நடவடிக்கைகளில் பின் தங்குதல், உற்பத்தித்திறன் குறைதல், மன அழுத்த பாதிப்பில் இருத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், நீங்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதைக் குறிப்பதாக உள்ளது.
அறிகுறிகள்
அதீதச் சோர்வுடன் இருத்தல், போதிய அளவிலான உறக்கம் இன்றி அவதிப்படுதல், அடிக்கடி தலைவலி வருதல் உள்ளிட்ட அறிகுறிகள், குழந்தைகளுக்கு, மனவேதனை இருப்பதன் அறிகுறிகள் ஆகும். குழந்தைகளுக்குக் எதிர்பாராத வகையில் நிகழும் எந்தவொரு நிகழ்வும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதால் கவனம் அவசியம்.
உணர்ச்சிரீதியிலான மன அழுத்தம்
கவலை, பயம், கோபம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெரும்பாலான குழந்தைகள் உணர்ச்சிரீதியிலான மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். இந்த மன அழுத்த பாதிப்பிற்கு, உங்கள் குழந்தையின் எதிர்வினைகளைப் பொறுத்து, அவர்களுக்குள் நிகழும் உணர்ச்சி மாற்றங்களைக் கண்டறிய இயலும். இந்தக் காரணிகள் குறிப்பிடும் தொடர்ச்சியான நடத்தை மாற்றங்களையே, மனநல நிபுணர், மதிப்பீட்டிற்கு உள்ளாக்குவார்.
தனிமை உணர்வு
நாம் சார்ந்த சமூகத்தில் இருந்து விடுபட்டுத் தனிமையில் இருக்கும் நிகழ்வானது மிகவும் கவலைக்குரியது மட்டுமல்லாது, மனநலப் பாதிப்பிற்கும் முக்கிய காரணமாக அமையும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி இருத்தல், நண்பர்களைத் தொடர்பு கொள்வதை, பெரும்பாலும் தவிர்த்தல், நீண்ட நேரம் தனிமையில் இருத்தல் உள்ளிட்ட காரணிகள், உங்கள் குழந்தைகளைக் கடுமையான மன அழுத்த பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடுகின்றன.
கல்வி நிறுவனங்களில் நிகழும் பிரச்சினைகள்
பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் காட்டும் அணுகுமுறை, குழந்தைகளிடையே, மனநலப் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. உங்கள் குழந்தை, பள்ளியில் இருந்து திரும்பும்போது, அசாதாரண மனநிலையில் திரும்பினால், உடனடியாக அவர்களின் நடத்தைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும்.
மேலும் வாசிக்க : உங்கள் குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதா?
மனநல பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்
நீண்ட காலமாக நீடிக்கும் சோகம்
குறிப்பிடும் வகையிலான எந்தக் காரணம் இல்லாதபோதிலும், சில குழந்தைகள் எப்போதும் சோக உணர்வுடனேயே காணப்படும்.
தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
உடல்ரீதியான தீங்கு விளைவிப்பதன் மூலம் கோபம் அல்லது எரிச்சல் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்.
எதிர்மறை உணர்வுடன் இருத்தல்
அவநம்பிக்கையான அணுகுமுறைக் கொண்டு இருத்தல், எப்போதும், எதிலும் உற்சாகமின்றி இருத்தல், எந்தவொரு விவகாரங்களிலும் பற்றற்று இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் ஆகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பாதிப்பின் அறிகுறிகளை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், உரிய சிகிச்சையை முன்கூட்டியே துவக்கிவிட முடியும். நடத்தை மாற்றங்கள் உள்ளிட்டவைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்கும்பட்சத்தில், இதன்மூலம் ஏற்படும் வேதனைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். குழந்தைகளுக்கு, மருத்துவ உதவிகள் தேவைப்படும்பட்சத்தில், நன்கு நிபுணத்துவம் பெற்ற மனநல மருத்துவரை நாடுவது நல்லது.