கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்தின் நன்மைகள்
மாறும் பணிச்சூழலில், சிறந்த கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டம் இன்றியமையாததாக உள்ளது. இது நிலையான சலுகைகளை அளிப்பதைவிட, நீண்டகால அளவிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இத்திட்டங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துகின்றன.இது பணியிடங்களுக்கு வெளியேயும், ஊழியர்களின் நலன் பேணிக்காக்க உதவுகின்றன. கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டங்கள் நிறுவனங்களின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்தை நோக்கிய பயணமானது, தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். நிறுவன இலக்குகள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் ஆகும். இது ஊழியர்களின் தனித்துவமான மருத்துவ தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், அத்தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வழிவகுக்கிறது.
நிறுவனங்கள் வழங்கும் வழக்கமான சுகாதாரத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை விட, கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டங்கள் அதிகச் சலுகைகளை வழங்குகின்றன. மாறும் வகையிலான பணியிடங்களை உருவாக்குவதில், கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளன. இது ஊழியர்களின் உடல்நல அபாயங்களை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து, அதைக் களைய உதவுகிறது. இந்தச் செயலூக்கமான அணுகுமுறை, ஊழியர்களுக்குப் பயன் அளிப்பதோடு மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களுக்கு, நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டங்களின் நோக்கம் உடல் தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிகழ்வுகளுக்கு மட்டும் உரியதல்ல. இது நல்வாழ்வை மேம்படுத்தும் வகையிலான செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மன ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையிலான உறக்கச் சுழற்சிகள், போதிய அளவிலான உடலின் நீர்ச்சத்து உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
நன்மைகள்
கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்தின் நன்மைகளை, நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தத் திட்டங்கள், துடிப்பான, ஆதரவான உற்பத்தி அதிகரிக்கும் வகையிலான பணியிடச் சூழலை உருவாக்க இன்றியமையாததாக உள்ளன.
மன அழுத்தம், மன உளைச்சலை நீக்குகிறது.
இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே, மன அழுத்த பாதிப்பு என்பது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது இந்தப் போட்டி உலகில், உயர் அழுத்த சூழலில் பணியாற்றும் அனைவருக்கும் மன அழுத்த பாதிப்பானது ஏற்படுகிறது. வாடிக்கையாளர்ச் சேவை, தகவல்தொழில்நுட்பம், விருந்தோம்பல், BPOக்கள், மார்க்கெட்டிங் உத்திகளை வகுக்கும் விற்பனை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, பேருதவி புரிவதாக உள்ளது.
நினைவாற்றல் பயிற்சிகள், ஆழ்ந்த சுவாசம் உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், கடுமையான உடல்நலப் பாதிபுகளின் ஆபத்துகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது தனிநபர்களின் மனநலனுக்கு உதவுவதோடு மட்டுமல்லாது, குழுவின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும் மேம்படுத்துகிறது.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவித்தல்
ஊழியர்களிடையே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதில், கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டங்களின் பங்கு முக்கியமானது. அலுவலகத்தின் கேண்டீனில் ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை வழங்குதல், குழுவாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், உடலுக்குப் போதிய அளவிலான நீர்ச்சத்துப் பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதிகரிக்கும் ஆற்றல் மட்டங்கள், உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.
ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையிலான கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டமானது, சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில், ஊழியர்களின் பங்கேற்பை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்கு நாம் ஒருமுறைப் பழக்கப்பட்டுவிட்டால், அது உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளின் தீவிரங்களைக் குறைக்க உதவுகிறது.
பணியாளர்த் தக்கவைப்பை ஊக்குவிக்கிறது
தற்போதைய நிலையில், தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட துறைகளில், ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வது சவாலான நிகழ்வாக உள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையிலான கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டமானது, பணியாளர்களிடையே விசுவாசம் மற்றும் பணியின் மீதான திருப்தி உணர்வை அதிகரிக்கிறது.
இந்த வகையான அணுகுமுறையானது, ஊழியர்கள், நல்வாழ்வின் மதிப்பை எந்த அளவிற்குப் புரிந்து வைத்து உள்ளனர் என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறது. இது அவர்கள் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்பை உறுதி செய்கிறது.
மேலும் வாசிக்க : கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்திற்கான துவக்கம் எது?
நல்வாழ்வின் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது
ஊழியர்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும், நிறுவனத்தின் உற்பத்திதிறனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிறுவனங்களில், ஊழியர்களின் உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டம், ஊழியர்களின் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதீதக் கவனம் செலுத்தப்படுவதால், அவர்கள் பணிக்கு தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது நாள்முழுவதும் முழு உத்வேகத்துடன் பணியாற்றுகின்றனர்.
மருத்துவ செலவினங்களைக் குறைக்கிறது
தினமும் தவறாது பணிக்கு வருதல், மருத்துவ செலவினங்களைக் குறைத்தல் உள்ளிட்டவைகளே, கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்தின் முதன்மையான நன்மைகளாக விளங்கி வருகிறது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய திட்டத்தைச் செயல்படுத்திய நிறுவனங்களில், திட்டமிடப்படாத விடுப்புகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவைக் கண்டன. இது நிலையான பணியாளர்கள் அமைவது உறுதி செய்வது மட்டுமல்லாது, மருத்துவம் தொடர்பான செலவுகளையும் கணிசமான அளவிற்குக் குறைக்கிறது.
கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டமானது ஊழியர்களின் உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நிறுவனத்தின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற ஊழியர்களுக்கு நலன்பயக்கும் திட்டங்களை, அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வலியுறுத்துவோமாக..