மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தில் புதிய வரவுகள்
இன்றைய நிலையில், சுகாதாரப் பராமரிப்பு மாறிவருகிறது. நோய்ப்பாதிப்புகள் வந்தபிறகு காப்பதைவிட, பாதிப்பு வருவதற்கு முன்னரே தடுப்பதே முதன்மையானதாக உள்ளது. மருத்துவத்துறையில், சுகாதாரத்திற்கான அணுகல் என்பது தற்போது மிகவும் எளிமையானதாகிவிட்டது.
துல்லியமான மற்றும் விரைவான நோயறிதல் மிக முக்கியமானது. தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் திறமையான சுகாதார வழங்கல் மூலம் நோயாளிகளின் பாதிப்புகள் பெருமளவு குறைகின்றன. இது மருத்துவத்துறையில், தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுவதற்கு வழிவகைச் செய்கிறது. தொலைமருத்துவம் மற்றும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு ஆகியவை நவீன மருத்துவமுறையின் முக்கிய அங்கங்களாக மாறியுள்ளன. இவைத் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை உறுதி செய்கின்றன. மருத்துவத்துறையில் தொழில்நுட்பப் பயன்பாடானது நோயாளிகளின் அணுகலை எளிமைப்படுத்தி, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் மருத்துவத்துறையானது அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. மருத்துவத்துறையில், சுகாதார ரீதியிலான தொழில்நுட்பங்களின் பங்கு மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், மருத்துவச் சேவைகளின் தரம் மற்றும் அணுகலை அதிகரிக்கின்றன.
நாட்டின் மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், சிறந்த சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெறும் பொருட்டு, அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள், பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பானது, சுகாதாரச் சேவைகளைச் சீராக்க மட்டுமல்லாது, நோயாளிகளை, நோய்ப்பாதிப்புகளில் இருந்து விரைந்து காக்கவும் உதவுகின்றன.
செயற்கை நுண்ணறிவு நிரல்கள்
மருத்துவத்துறையில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் வியாபித்துள்ளது. இது நோயாளிகளின் அணுகல், சுகாதாரச் சேவைகள் வழங்கல், செயல்திறன் மேம்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளை எளிமையாக்குகின்றது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள்:
- நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளிலிருந்து தரவு பிரித்தெடுத்தல்.
- நியமனத் திட்டமிடல், உரிமைகோரல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள்.
- மருத்துவப் படங்கள் மற்றும் ஸ்கேன் பகுப்பாய்வு.
- மருத்துவ ஆராய்ச்சி மேம்பாடு.
- தனிப்பயன் சிகிச்சைத் திட்டமிடல்.
தொலைமருத்துவம்
வீடியோ கான்பரன்சிங், ஸ்ட்ரீமிங் சேவைகள் உள்ளிட்ட தகவல் தொடர்புமுறைகளின் பங்களிப்புடன், உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும், சிறந்த சுகாதார நிபுணர்களுடன், நோயாளிகளுடன் கலந்துரையாட முடியும். பெருந்தொற்றுக் காலத்தின் போது, தொலைமருத்துவத்தின் நிகழ்வின்போது, விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் ஆலோசனைகளுக்குப் பேருதவி புரிகின்றன. நோயறிதல் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தியது. சில சுகாதாரத்துறை நிறுவனங்கள், மருத்துவ சேவைகளை அடைய இயலாத நோயாளிகளை, தொலைதூரக் கண்காணிப்புக்காக, தனிப்பயனாக்கப்பட்ட தொலைமருத்துவ முறையிலான தீர்வுகளை வழங்குகின்றன.
நானோமெடிசின்
மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ ரோபோக்கள் உள்ளிட்டவைகளை ஈடுபடுத்தும். நானோ ரோபோக்கள் மனித ரத்த நாளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றன. இந்தச் சிகிச்சைமுறையானது, மரபணு, ஆட்டோ இம்யூன், புற்றுநோயியல் பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பமாக உள்ளது.
ஜீனோமிக்ஸ்
மருத்துவ ஆராய்ச்சி நடைமுறையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவ முறையில், சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மரபணுக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பமானது, தனிப்பயனாக்கப்பட்ட மருந்துமுறைகளை உருவாக்க உதவுகிறது.
தரவுகளின் பாதுகாப்பு
மருத்துவத்துறையில் நோயாளிகளின் உடல்நல தரவுகள் அதிகளவில் சேகரிக்கப்படுகின்றன. இத்தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சைபர்த் தாக்குதல்கள் மற்றும் தரவு மீறல்களிலிருந்து பாதுகாப்பு அவசியம். இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமானவை.பிளாக் செயின் மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் மருத்துவத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இவைத் தரவுப் பாதுகாப்பு மற்றும் பகிர்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் அசிஸ்டெண்ட்கள் மற்றும் சாட்போட்கள்
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மெய்நிகர்க் கருவிகள் சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றமாக உள்ளது. இவை நோயாளிகளுடன் உரையாடவும், மருத்துவர்களுக்கு நோயறிதலில் உதவவும் பயன்படுகிறது. நோயாளிகளுக்கு, சிகிச்சைத் திட்டத்தைத் தீர்மானிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதாரச் சேவை வழங்குநர்களுக்கு, மருத்துவக் குறிப்புகளை உருவாக்குகிறது. இது நோயாளியின் வரலாறு மற்றும் நோய்ப்பாதிப்புக்கான அறிகுறிகளைப் புரிந்துகொள்வதற்கான முழு செயல்முறையையும் எளிதாக்குகிறது. இது நோயாளிக்குத் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
மேலும் வாசிக்க : நோயாளிகளின் நோயறிதலில் AI செயலிகளின் பங்கு
பெரிய தரவுகளின் பகுப்பாய்வு (Big Data Analytics)
மருத்துவர்கள் நோய்ப்பாதிப்புகளை அடையாளம் காண, பல்லாயிரக்கணக்கான நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட பெரிய அளவிலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய, Big Data Analytics எனப்படும் பெரிய அளவிலான தரவுகளின் பகுப்பாய்வு நிகழ்வானது அவசியமாகின்றது. இந்தப் பெரிய அளவிலான தரவுகள், உயிருக்கு ஆபத்தான நோய்ப்பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அதற்கே உரித்தான சிகிச்சைகளை அளிப்பதற்கும், அதுதொடர்பான பயனுள்ள முடிவுகளை எடுக்கவல்ல மருத்துவ நுண்ணறிவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது மருத்துவத்துறையில் நிகழும் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளுக்கு, இந்தத் தரவுகள், பேருதவியாக உள்ளன.
மருத்துவக் காப்பீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப டிரெண்டுகள்
மருத்துவத்துறையில், தகவல்தொழில்நுட்பப் பிரிவின் பங்களிப்பானது, தற்போது அதன் காப்பீட்டுத் துறையிலும் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. காப்பீடு நிகழ்வுகளுக்கு ஆகும் செலவினங்களைக் குறைக்கவும், செயல்திறனை மேம்படுத்து, சிறந்தமுறையிலான சேவைகளை வழங்கும் பொருட்டு, காப்பீட்டுத்துறை நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த துவங்கிவிட்டன.
மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்:
- ரோபோடிக் அடிப்படையிலான ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் விரைவான உரிமைகோரல் செயலாக்கம்
- முன்கணிப்புப் பகுப்பாய்வு மூலம் மோசடி கண்டறிதல்
- வாட்ஸ்அப், சாட்போட் வழியாக,நிர்வாகச் செலவு குறைப்பு
- தொலைமருத்துவச் சேவையின் மூலம்,ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் வழங்கல்
- அணியக்கூடிய சாதனங்கள் மூலம் உடல் ஆரோக்கிய கண்காணிப்பு
மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில், தொழில்நுட்பங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளைக் கவனமாக மேற்கொண்டு, உடல் ஆரோக்கியப் பாதிப்புகளில் இருந்து முழுமையாக நிவாரணம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…