நோயாளி பராமரிப்பில் மொபைல் செயலிகளின் தாக்கம்
சுகாதாரத்துறையில், மொபைல் செயலிகளின் பயன்பாடு, சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. பெரும்பாலான மொபைல் செயலிகள் தொழில்நுட்பங்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயலிகளின் மூலம், நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வாறு சுகாதாரச் சேவைகளுடன் தொடர்பு கொள்கின்றனர் என்பதைக் கண்காணிக்க முடியும்.
மொபைல் செயலிகள், நோயாளிகளைச் சுகாதாரச் சேவை வழங்குநர்களுடன் இணைக்கும் வலுவான கருவிகளாக விளங்கி வருகின்றன. இது இருவருக்கும் இடையே தடையற்ற தகவல்தொடர்புகளை ஏற்படுத்துகின்றன. மொபைல் செயலிகள், நோயாளிகளுக்குக் கூடுதல் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரச் சேவைகளை வழங்குகின்றன. நவீனச் சுகாதாரச் சேவைகளில் மொபைல் செயலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை டிஜிட்டல் ஆலோசனைகள் முதல் நிகழ்நேரக் கண்காணிப்பு வரைப் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.
நோயாளி பராமரிப்பில் மொபைல் செயலிகளின் பங்கு
சுகாதாரச் சேவைகள் துறையில், மொபைல் செயலிகளின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தச் செயலிகள், டெலிமெடிசின் எனப்படும் தொலைமருத்துவம் முதல் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு நிகழ்வுகள் வரை முக்கிய இடம் பிடித்து உள்ளன. மொபைல் செயலிகள் மூலம் தினசரி நடைப்பயிற்சி, இதயத்துடிப்பு, உறக்கம் போன்ற அனைத்து உடல்நல அளவீடுகளையும் கண்காணிக்க முடியும்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதல் பாதுகாப்பு, எளிதான ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் மொபைல் செயலிகளினால் மட்டுமே சாத்தியமாயின. இது நோயாளிகள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு ஏற்ற முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கின.
நோயாளி பராமரிப்பு நிகழ்வை மொபைல் செயலிகள் எவ்வாறு மேம்படுத்துகின்றன?
நோயாளி பராமரிப்பு என்பது, சுகாதாரச் சேவைகளில் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. மொபைல் செயலிகள், நோயாளிகளுக்கும், சுகாதாரச் சேவை நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளிகளைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம், உடற்பயிற்சிக் கட்டுப்பாட்டைத் தனிப்பயனாக்கி, அதன்மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது.
தனிப்பயனாக்கப்பட்ட நினைவூட்டல்கள்
மொபைல் செயலிகள் மேற்கொள்ளும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார நினைவூட்டல்களின் மூலம், நோயாளிகள் சிகிச்சைத் திட்டங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறது. இது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் பேருதவி புரிகிறது.
மருத்துவ சோதனை முடிவுகளுக்கான அணுகல்
மொபைல் செயலிகள், நோயாளிகளுக்குச் சோதனை முடிவுகளின் உடனடி அணுகல்களை வழங்குகின்றன. இது நோயாளிகளுக்கு, அவர்களின் உடற்பயிற்சி நிலைமைகள், சிகிச்சைகள் குறித்த கூடுதல் அறிவைப் பெற உதவுகிறது. இது ஆலோசனை நிகழ்வில், சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகிறது. திறன்மிகு சுகாதாரத் தொடர்புகளுக்கு வழிவகைச் செய்கிறது.
உடல்நல கண்காணிப்பு அம்சங்கள்
மொபைல் செயலிகள் உடலின் செயல்பாடுகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட அளவீடுகளைக் கண்காணிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தத் தொடர்ச்சியான கண்காணிப்பு நிகழ்வானது, நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நன்மைபயப்பதாக உள்ளது.
நோயாளி – மருத்துவர் இடையே இணக்கச் சூழல்
மொபைல் செயலிகள் குறுந்தகவல் மற்றும் வீடியோ ஆலோசனைகள் மூலம், நோயாளிகளை, சுகாதாரச் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் எளிதாக இணைக்கின்றன. இதன்மூலம், நாள்பட்ட பாதிப்பிலான நோயாளிகள் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளை உரிய சமயத்தில் வழங்குகின்றன.
மேலும் வாசிக்க : கேட்ஜெட் அளவீடுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்பவரா?
நோயாளி பராமரிப்பு நிகழ்வில் மொபைல் செயலிகளினால் ஏற்படும் நன்மைகள்
மருத்துவர் – நோயாளி இடையேயான தொடர்பை மேம்படுத்துகிறது
மருத்துவர் – நோயாளி இடையேயான தொடர்பு மேம்படுகிறது. இதன் மூலம், உடல் ஆரோக்கியம் தொடர்பான வலுவான விவாதங்கள் இருவருக்கும் இடையே நிகழ்கிறது. இதன்மூலம், நோயாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்கள் கிடைக்க வழிவகைப் பிறக்கிறது. இது மருத்துவருக்கு நல்ல அனுபவத்தையும், நோயாளிக்கு உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் பெறவும் பேருதவி புரிகிறது.
சிறந்த மருந்து மற்றும் சிகிச்சைத் திட்டங்கள்
தனிப்பட்ட சுகாதார நினைவூட்டல்கள், எடுத்துக்கொள்ளும் மருந்து அளவுகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட அம்சங்கள், மொபைல் செயலிகளில் உள்ளன. இதன்மூலம் சிறந்த மருந்து மற்றும் சிகிச்சைத் திட்டங்கள் தீட்டுவது சாத்தியமாகின்றது.
நோயாளிகளுக்கு உகந்த அதிகாரம்
மொபைல் செயலிகள், நோயாளிகளுக்கு உடற்பயிற்சி கண்காணிப்பு செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான நுண்ணறிவை வழங்குகின்றன. இந்த நன்மைகள், நோயாளிப் பராமரிப்பில் மொபைல் செயலிகளின் பங்கை வெளிப்படையாக விளக்குகின்றன.
சவால்கள்
தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
மொபைல் செயலிகள் மூலம் சுகாதாரச் சேவைகள் கையாளப்படுகின்றன. இது நோயாளிகளின் உடல்நலத் தரவுகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் குறித்த கவலைகளை எழுப்புகிறது. இந்தத் தரவுகள்,HIPAA (Health Insurancе Portability and Accountability Act) உள்ளிட்ட சட்ட விதிகளுடன் இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
வரம்பு குறைபாடு
இன்றைய சூழலிலும், தொழில்நுட்பமானது அனைவருக்கும் கிடைக்காத சூழலே நிலவி வருகிறது. இதன்காரணமாக, மொபைல் செயலிகளின் மூலமான நன்மைகளைப் பெருமளவினர் அனுபவிக்க இயலாத நிலையே உள்ளது.
துல்லியத்தன்மையை உறுதி செய்தல்
மொபைல் செயலிகளின் மூலம் பெறப்படும் சுகாதாரம் சார்ந்த தகவல்களின் துல்லியத்தன்மையை உறுதி செய்வது அவசியம் ஆகும். இந்தத் தகவல்கள் தவறாக வழிநடத்தப்படும்பட்சத்தில், அது மோசமான விளைவுகளுக்குக் காரணமாக அமையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நோயாளி பராமரிப்பில், மொபைல் செயலிகளின் பங்கு, தற்போதைய சூழலில் அளப்பரியதாக இருப்பினும், அதில் உள்ள் சில சவால்களை நாம் திறம்பட எதிர்கொள்வதன் மூலம், நாள்பட்ட வகையிலான நோய்ப்பாதிப்புகளில் இருந்தும் முழுமையாக நிவாரணம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழலாம்.