ஐபோன் பயனர்க்கான சிறந்த ஃபிட்னெஸ் செயலி இதுவா!
இன்றைய பரபரப்பான மற்றும் போட்டிகள் நிறைந்த அவசர உலகில் உடல்நல ஆரோக்கியத்தின் மீது பெரும்பாலானோர் அக்கறைச் செலுத்த துவங்கி விட்டனர். இவர்கள் இதற்காக, ஃபிட்னெஸ் செயலிகளின் உதவியை நாடத் துவங்கி உள்ளனர். உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஐபோன் மிகச்சிறந்த உபகரணமாக மாறி உள்ளது. இது அவர்களின் இலக்குகளைத் துரிதமாக அடைய உதவுகிறது. இது தொழில்நுட்ப வளர்ச்சியினாலேயே சாத்தியமாகி உள்ளது.
ஐபோன் பயனர்களுக்கெனச் சந்தையில் ஓராயிரம் அளவில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயலிகள் புழக்கத்தில் உள்ளன. நீங்கள் உடற்பயிற்சி நிகழ்வுகளைக் கண்காணிக்க விரும்பினாலோ அல்லது, சுறுசுறுப்பாக இருந்து உடல் உத்வேகம் பெற விரும்பினாலோ, நீங்கள் முதல்கட்டமாக, உங்கள் உணவுமுறையில் ஈடுபாடு செலுத்துவது முக்கியம் ஆகும்.
நீங்கள் ஐபோன் பயனராக இருந்து, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்பினால், உங்களுக்கு உதவும் வகையில், சில செயலிகளை இங்கு பட்டியலிட்டு உள்ளோம்.
MyFitnessPal
ஐபோன் பயனர்கள், சிறந்த உடல்நல ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளில் சிறந்து விளங்க, முதன்மையானதாகத் திகழும் செயலியாக, MyFitnessPal செயலி விளங்கி வருகிறது. இந்தச் செயலி, உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலை நிர்வகிப்பதோடு மட்டுமல்லாது, ஊட்டச்சத்துக் கண்காணிப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தச் செயலி பல்வேறு உடற்பயிற்சி மானிட்டர்கள் மற்றும் கேட்ஜெட்டுகளுடன் இணைந்து செயல்படுகிறது. இது உடற்பயிற்சி நடைமுறைகளையும், அதன் முன்னேற்றத்தையும் எளிதாக மதிப்பிட உதவுகிறது. ஐபோன் பயனர்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், தசைகளின் வலிமையை அதிகரித்தல், உடல் எடைக் குறைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, இந்தச் செயலி பேருதவி புரிகிறது.
Nike Training Club
ஐபோன் பயனர்களுக்கான மற்றுமொரு சிறந்த செயலி Nike Training Club ஆகும். இந்தச் செயலியில் இடம்பெற்றுள்ள உடற்பயிற்சி நடைமுறைகளானது, Nike நிறுவனத்தின் மாஸ்டர்ப் பயிற்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்தச் செயலியில், உடற்பயிற்சி நடைமுறைகள் மட்டுமல்லாது, யோகா, செயல்பாடு பயிற்சிகள், வலிமைப் பயிற்சிகள் உள்ளிட்டவைகளையும் தன்னகத்தே கொண்டு உள்ளது. செயலியை, பயனர்கள் சரியாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, அதன் பயன்பாட்டு நெறிமுறைகள் குரல் மற்றும் காட்சி வடிவமைப்பிலும் உள்ளன. உடற்பயிற்சி இலக்குகளைத் துல்லியமாகவும், அதேநேரம் விரைவாகவும் எட்ட நினைக்கும் ஐபோன் பயனர்களுக்கு, இந்தச் செயலி, சிறந்த தேர்வாக அமைந்து உள்ளது.
Strava
நீங்கள் சுற்றுலா செல்வதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தாலோ அல்லது சைக்கிளிங் வீரராக இருந்தாலோ, உங்களுக்கு இந்த Strava செயலி, உற்ற துணைவனாக விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தச் செயலியில் உள்ள GPS வசதியானது, நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளைக் கண்காணிக்கவும், அதை மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. இதன்மூலம் உங்களின் வேகம், தொலைவு உள்ளிட்ட விரிவான தகவல்கள் புள்ளிவிவரங்களாகக் கிடைக்கின்றன. நீங்கள் மராத்தான் போட்டி தயார் ஆகிறீர்கள் என்றால், இந்த Strava செயலி, சரியான தேர்வாக அமையும்.
Headspace
Headspace செயலி, ஐபோன் பயனர்களுக்கு மன அமைதி மற்றும் சமநிலையைப் பேணிக்காக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தைப் போல, மன ஆரோக்கியமும் இன்றியமையாதது என்று நினைப்பவர்களின் சிறந்த தேர்வாக, இந்தச் செயலி விளங்குகிறது. இந்தச் செயலி மன அழுத்த பாதிப்பைக் குறைக்கவும், உறக்க நிகழ்வை மேம்படுத்தி, நல்வாழ்க்கைச் சாத்தியமாக்கலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தச் செயலி, தியான நடைமுறைகளில் உங்களை நிபுணத்துவம் பெற்றவராக மாற்றுகிறது. குரல் மற்றும் காட்சி வடிவமைப்பிலான இந்தச் செயலியின் பயன்பாட்டு நெறிமுறைகள், ஐபோன் பயனர்களுக்கு, புதுவிதமான அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் வாசிக்க : இலக்குகளை அடைய சரியான ஃபிட்னெஸ் செயலிகள்
Seven
எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு, Seven செயலி, ஆபாந்பாந்தவனாக விளங்கி வருகிறது. இந்தச் செயலியில் உள்ள 7 நிமிட கால அளவிலான உடற்பயிற்சிகள், உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தசைகளைச் செயல்படுத்துவதற்கும், உடலின் வளர்சிதை மாற்ற வீதத்தை அதிகரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. எப்போதும் பிஸியாக இருப்பவர்கள், தாங்கள் விரும்பும் நேரத்தில், உடற்பயிற்சிகளை விரைந்து முடிக்க நினைப்பவர்களுக்கு, இந்த Seven செயலி சிறந்த தேர்வாக உள்ளது. இந்தச் செயலி, உங்களை உத்வேகப்படுத்தவும், உடற்பயிற்சி இலக்குகளை விரைந்து நிறைவேற்றவும், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி அட்டவணைகளை வழங்குகிறது.
Fitbit
உடல் செயல்பாடுகள், உறக்கம், இதயத்துடிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளின் நிகழ்நேரப் புள்ளி விவரங்களைத் துல்லியமாக அறிய, Fitbit செயலி உதவுகிறது. இந்தச் செயலி, நீங்கள் அணியும் சாதனத்துடன் கைகோர்த்து, உடல் ஆரோக்கிய கண்காணிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியின் மூலம், உடற்பயிற்சி இலக்குகளைத் தீர்மானிக்க முடியும், அதுதொடர்பான முன்னேற்றத்தையும் கண்காணிக்கலாம். நாம் தினமும் போதிய அளவிலான உறக்கத்தைப் பெறுகிறோமா என்பதைக் கண்காணிக்கவும், இந்த Fitbit செயலி உதவுகிறது.
ஐபோன் பயனர்களே, சிறந்த உடல்நல ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க நீங்கள் தயாரா? மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு செயலியின் பயன்பாட்டை முறையாக மேற்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்கோப்பாகப் பேணிக்காத்து, நல்வாழ்க்கை வாழ்வீர்களாக…