நாம் உண்மையில் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?
நாம் தினமும் எந்த அளவுக்கு நீர் அருந்த வேண்டும் என்ற ஆலோசனைகள், சமூக ஊடகங்கள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்த ஆலோசனைகள் மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், சிலருக்குப் பயனளிக்கின்றன.நீர் அருந்தும் நிகழ்வு, பல்வேறு நோய்ப்பாதிப்புகளுக்கான சிகிச்சையாகவும் கருதப்படுகிறது.
ஆண்கள் தினமும் 3.7 லிட்டர், பெண்கள் தினமும் 2.7 லிட்டர் அளவிற்கு நீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் போதிய நீரேற்றத்துடன் இல்லாத நிலையானது, பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக அமையும் என்றபோதிலும், நீர்ச்சிகிச்சையால், நோய்பாதிப்புகளைக் குணப்படுத்த இயலும் என்ற தகவல் மிகைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.
உடலின் pH மற்றும் மினரல்களின் சமநிலையைப் பராமரிக்க நீர் முக்கியம். ஆனால் நீர் அருந்துவதால் எல்லா நோய்களும் குணமாகும் என்ற தவறான கருத்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
நீர் அருந்துதலினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எல்லை வரம்புகளை அறிந்துகொள்வதன் மூலம், நம் ஆரோக்கியத்தைத் திறம்பட அணுக இயலும்.
போதிய அளவு நீர் அருந்துதலினால் ஏற்படும் நன்மைகள்
இரத்தத்தின் அளவு மற்றும் அதன் பாகுத்தன்மையை மேம்படுத்துகிறது.
ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.
சருமத்தைப் பராமரிக்கிறது.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
தசைச் சுருக்கத்தைக் குறைக்கிறது.
ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
மூட்டு வலி உணர்வைக் குறைக்கிறது.
மன அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது.
உடலின் உப்பின் அளவு மற்றும் காரத்தன்மையைப் பராமரிப்பதில், நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. 75 கிலோ கொண்ட நபர், நாள் ஒன்றிற்கு 2.25 முதல் 3.75 லிட்டர் நீர் அருந்த வேண்டும். இது 9 முதல் 15 கிளாஸ்க்குச் சமம் ஆகும். அசைவ உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பவர்கள், தினமும் 6 கிளாஸ் நீர் அருந்தினாலே போதுமானது ஆகும். காலையில் எழுந்தவுடனே 2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரும், உணவு சாப்பிட்டு ஒருமணி நேரத்திற்குப் பிறகு 1 கிளாஸ், உறங்கச் செல்வதற்கு முன் 1 கிளாஸ் நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்பும் போதெல்லாம், 1 கிளாஸ் நீர்க் குடிப்பது சிறந்தது. இது உடலில் ஏற்பட்ட கனிம இழப்பை ஈடுசெய்து, அதன் சமநிலையைக் காக்கும்.
பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வரும் கார்பனேட்டட் பானங்கள் அருந்துவதன் மூலம், உங்கள் உடலின் நீர்ச்சமநிலைக் காக்கப்படாது என்பதை எந்தத் தருணத்திலும் மறந்துவிடக் கூடாது.
உணவு சாப்பிடும்போது இடையே நீர்க் குடிக்கலாமா?
சீனா மற்றும் ஜப்பானிய கலாச்சாரத்தில், உணவு சாப்பிடும்போது, இடையிடையே வெதுவெதுப்பான நீர் அருந்தினால், அது செரிமானத்திற்கு உதவும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நம் நாட்டிலோ, சாப்பிட்டபிறகு குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகே, நீர் அருந்த பரிந்துரைக்கப்படுகிறது. சாப்பிடும்போது இடையே நீர் அருந்தினால், அது வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்த்துப்போகச் செய்வதாகவும், இதன்மூலம், செரிமானம் தடைபடுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாவர உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடும்போது, உணவினிடையே, நீர் அருந்துவது கட்டுப்படுத்தப்படுகிறது. உணவுக்குழாய் தசைகளின் செயல்பாட்டிற்கும், வாய் சுகாதாரத்திற்கும் உணவுக்கு முன்னும் பின்னும் சிறிதளவு நீர் அருந்த வேண்டும்.
தினசரி நீர் உட்கொள்ளலைக் கணக்கிடுதல்
நீங்கள் எந்த அளவிற்கு நீர் அருந்த வேண்டும் என்பதை, உங்கள் மருத்துவர்த் தான் தீர்மானிக்க இயலும். ஒவ்வொருவருக்கும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில், நீர்த்தேவையானது மாறுபடுகிறது. நீங்கள் குறைவாக நீர் அருந்தும் வகையிலான நோய்ப்பாதிப்பிற்கு உட்பட்டு இருப்பின், இந்தப் பொதுவான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் புறக்கணித்து, மருத்துவர்ப் பரிந்துரைக்கும் அளவிலேயே நீர் அருந்த வேண்டும். போதிய அளவிலான நீர் அருந்தவில்லை என்றால், உடலில் நீரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. உடல் பலவீனம், ரத்த அழுத்தம் குறைதல், தலைச்சுற்றல், குழப்பமான மனநிலை, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர்க் கழித்தல் உள்ளிட்டவை, நீரிழப்புப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
மேலும் வாசிக்க : உணவுமுறையின் உண்மைத்தன்மையை அறிவோமா?
நீர்த் தேவைகளைப் பாதிக்கும் காரணிகள்
ஒவ்வொருவருக்கும் நீர்த்தேவையானது, பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடுகின்றன.
செயலாக்க நிலைகள்
நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உங்கள் உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறும். இதன்மூலம், உடலில் நீரிழப்பு நிகழ்கிறது. இந்த இழப்பைச் சரிசெய்ய, அதிக அளவிலான நீர்க் குடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வெளிப்புற வெப்பநிலை
அதிக உஷ்ணம் கொண்ட காலநிலை நிலவும்போது, நீங்கள் அதிகத் தாகமாக இருப்பதை உணர்கிறீர்கள். அந்த நேரத்தில், உங்கள் உடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப, அதிகளவிலான நீர்த் தேவைப்படுகிறது.
எடுத்துக்கொள்ளும் மருந்துகள்
சில நோய்ப்பாதிப்புகள், அதற்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள், நீங்கள் எந்தளவிற்கு நீர்க் குடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, உங்களுக்கு இதய நோய் அல்லது சிறுநீரகப் பாதிப்பு இருந்தால், அதற்குச் சில மருந்துகளை எடுத்துக்கொள்வீர்கள். இதன்மூலம், நீர் அருந்தும் அளவு மாறுபடுவதால், நீங்கள் அதனைச் சரிசெய்ய வேண்டி இருக்கும்.
வயதுக் காரணி
வயது ஆக ஆக, தாக உணர்வு படிப்படியாகக் குறையும். நீங்கள் எவ்வளவு நீர் அருந்துகிறீர்கள் என்பதைக் கவனிக்காவிட்டால், அது பெரிய பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்பதை எத்தருணத்திலும் மறந்துவிடக் கூடாது.
சரியான அளவிலான நீரை அருந்தி, உடல்நலத்தை ஆரோக்கியமாகவும், முறையாகவும் பேணிக்காத்து, வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…