உணவுமுறையானது காயங்களிலிருந்து மீள உதவுமா?
உடற்பயிற்சி நிகழ்வின்போது காயங்கள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். இதற்கு உடல்ரீதியிலான சிகிச்சைகள், மறுவாழ்வு நடைமுறைகள் மட்டுமே தீர்வு எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அவர்களின் எண்ணம் சரிதான் என்றபோதிலும், உணவுமுறையும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை அவர்கள் எளிதாக மறந்துவிடுகின்றனர்.
காயங்களில் இருந்து மீண்டு வரும்போது, நாம் சாப்பிடும் உணவு வகைகள், நம் மனநிலையை மாற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த உணவு நம் உடலைக் காயங்களில் இருந்து மீட்கும் எரிபொருளாகச் செயல்படுகிறது. காயங்களில் இருந்து மீள நல்ல ஊட்டச்சத்து முறை அவசியம்.
காயங்களில் மீள உதவும் ஊட்டச்சத்துகள் மற்றும் உணவுமுறைகள்
பல்வேறு வகையான உணவு வகைகள், உங்களை வெவ்வேறு விதமான காயங்களில் இருந்து மீள உதவுகின்றன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
அழற்சி உணர்வைத் தடுக்கும் வகையிலான உணவுகள்
உடற்பயிற்சி நிகழ்வின் போது, உங்களுக்குக் காயங்கள் ஏற்படும்பட்சத்தில், உங்கள் உடல், வீக்கம் போன்ற எதிர்வினைகளை உருவாக்கும். காயமடைந்த செல்கள் வீக்கத்தை உருவாக்கி, அழற்சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது இயற்கை நடைமுறைதான். ஆனால் நீண்ட நேர அழற்சி உணர்வு காயம் குணமாவதைத் தாமதப்படுத்தும்.அழற்சி உணர்வைத் தடுக்கும் வகையிலான உணவுகள், காயங்களில் இருந்து மீளும் நிகழ்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஸ்ட்ராபெர்ரிகள், புளூபெர்ரிகள், பிளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகள்,
சால்மோன், சார்டைன் உள்ளிட்ட அதிகக் கொழுப்பு கொண்ட மீன்கள்,
புரோக்கோலி,
அவகேடோ,
காளான்கள்,
மிளகு,
திராட்சை உள்ளிட்டவை, அழற்சி உணர்வைத் தடுக்கும் உணவு வகைகளில் முதன்மையானதாக உள்ளன.
இந்த உணவு வகைகள் மட்டுமல்லாது, கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய், மஞ்சள் உள்ளிட்டவைகளும், அழற்சி எதிர்ப்பு விளைவை ஏற்படுத்தவல்லதாக உள்ளது.
புரதம் நிறைந்த உணவுகள்
புரதங்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்களால் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இவைத் தசைகளில் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும், ஆற்றல் மட்டத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
முட்டைகள்,
பாதாம்,
ஓட்ஸ்,
புரோக்கோலி,
பாலாடைக்கட்டி,
மாட்டிறைச்சி,
கோழியின் நெஞ்சுக்கறி,
டுனா மீன்.
புரதங்கள் நிறைந்த உணவு வகைகள், தசைகளுக்குத் தேவையான வலிமையை வழங்குகின்றன. பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நல்ல கொழுப்புகள் உடலுக்குச் சிறந்த எரிபொருளாக விளங்குகின்றன. சேதமடைந்த தசைகளுக்குப் பதிலாக, புதிய தசைகளின் உருவாக்கத்தில் புரதம் நிறைந்த உணவுகள், முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவை இதய நலனை மேம்படுத்துவது மட்டுமல்லாது, நீங்கள் காயங்களில் இருந்து விரைவில் மீள்வதற்கும் துணைபுரிகிறது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய உணவுகள்
காயங்களில் இருந்து குணம்பெறச், சில சமயங்களில் அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படும். இந்த நிகழ்விற்குப் பின்னர், நோயாளிகளுக்கு, திரவ உணவுகள் வழங்கப்படும். இந்த உணவு வகைகள், அறுவைச் சிகிச்சை நிகழ்விற்குப் பிறகு, ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் குமட்டல் உணர்வைத் திறம்படச் சமாளிக்கிறது. இந்தத் திரவ உணவு வகைகளில், உங்கள் உடலுக்குத் தேவையான ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன.
தயிர்,
பெர்ரி,
மஞ்சள் தூள்,
பழ வகைகள்,
கீரை வகைகள் உள்ளிட்டவை ஆகும்.
தசைகளின் இழப்பைக் குறைக்கவும்
நீங்கள் காயங்களில் இருந்து மீண்டு வரும்போது, உங்களின் உடல் செயல்பாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நீண்ட நாட்கள் செயலற்ற நிலையில் இருக்கும்போது, உங்கள் தசைகள் பலவீனமாகத் துவங்குகின்றன, இது உங்களை ஓய்வு நிலைக்குத் தூண்டுகின்றன. இதுபோன்ற நிலையில், நீங்கள் மேற்கொள்ளும் உணவு வகைகளே, உங்களின் தசை நிறையைப் பராமரிக்கவும், தசைகளின் அயர்ச்சி நிலையைத் தவிர்க்கவும் உதவுகின்றன.
மேலும் வாசிக்க : நாம் உண்மையில் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?
பக்கவிளைவுகளைத் திறம்பட நிர்வகியுங்கள்
நீங்கள் காயங்கள் காரணமான அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், சிலவிதமான பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். மலச்சிக்கல், குமட்டல், குடல் பாக்டீரியாக்களின் இழப்பு உள்ளிட்டவை, அறுவைச் சிகிச்சை நிகழ்வுக்குப் பிந்தைய பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். ஃப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகள், இதற்குச் சிறந்த பலனை அளிக்கின்றன. இருப்பினும் இந்தத் திரவ உணவுகளைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு முன்னர், மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
ஆர்கானிக் உணவுகளைச் சாப்பிடலாமா?
தற்போதைய நிலையில், ஆர்கானிக் என்ற பதமே, பெரும்விவாத பொருளாய் மாறி உள்ளது. ஆர்கானிக் என்று குறிப்பிடப்பட்டு உள்ளவைகள் எல்லாம், நம் உடல்நலனுக்கு உகந்தது என்று அர்த்தம் அல்ல. ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, கீரை வகைகள், தக்காளி உள்ளிட்டவை, ஆர்கானிக் பிரிவில் அடங்குவன ஆகும். ஆர்கானிக் விவசாய முறையில், குறைந்த அளவிலான பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த உணவுவகைகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலில் சேகரமாகும் தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களின் அளவும் குறைகிறது.
சர்க்கரை என்ன மாற்றத்தை நிகழ்த்துகிறது?
நீங்கள் சர்க்கரைக் கலந்த உணவுகளைச் சாப்பிடும்போது அதனை உடைக்க, உடலின் பல பகுதிகளிலிருந்து ஊட்டச்சத்துக்கள் எடுக்கப்படுகின்றன. காயத்திலிருந்து மீள்வதற்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவை. சர்க்கரை உணவுகளைச் செரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் செலவாவதால், காயங்கள் குணமடைய தாமதமாகும்.இதனைத் தவிர்க்க, சர்க்கரைக் கொண்ட உணவு வகைகளை, சிறிதுகாலத்திற்குத் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட காயங்களினால் அவதிப்படுபவர்கள், சரியான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து, அதைக் கவனமாகப் பின்பற்றி, காயங்களில் இருந்து விரைவில் மீண்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ வாழ்த்துகிறோம்…