Wooden labels of body types Endomorph, Mesomorph, and Ectomorph near a stethoscope on a black background.

உடலமைப்பு மற்றும் ஊட்டச்சத்து இடையேயான தொடர்பு

உடலமைப்பு என்பது உடல் தோற்றத்தை மட்டுமல்ல. இது உணவு, உடல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப அமைகிறது.எக்டோஃகார்ப்,மீசோஃகார்ப், எண்டோஃகார்ப் என மூன்று முக்கிய உடல் அமைப்புகள் உள்ளன.

இந்த உடல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம்,ஆரோக்கியமான நல்வாழ்க்கைக்கு ஏற்ற உணவுமுறையினை நீங்கள் தேர்வு செய்திட முடியும். எல்லா உடலமைப்புகளுக்கும் ஒரே உணவுமுறைப் பொருந்தாது. ஒவ்வொரு வகையான உடலமைப்பு கொண்டவர்களுக்கும்,பிரத்யேக உணவுமுறைகள் உள்ளன. அவை என்னவென்று கண்டறிவதே,இதன் முதல்படி ஆகும். சரியான உணவுமுறையால் உடல் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சும். இதன்மூலம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.

எக்டோமார்ஃப் உடலமைப்பு

இவர்கள் இயற்கையாகவே மெல்லிய உடல் அமைப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த உடல் அமைப்பு கொண்டவர்கள்,எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை.

மீசோமார்ஃப் உடலமைப்பு

இவர்கள் நடுத்தர உடல் கட்டமைப்பைக் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் மேற்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்து,உடல் எடை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்.

எண்டோமார்ஃப் உடலமைப்பு

இவர்கள் இயற்கையாகவே உடல் பெருத்துக் காணப்படுவர். உடல் எடையை இழக்க இவர்கள் கடும்பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும்,இவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை.

மேலும் வாசிக்க : உணவுமுறையானது காயங்களிலிருந்து மீள உதவுமா?

உங்கள் உடலமைப்புக்கு ஏற்றவகையிலான உணவுமுறை

எக்டோமார்ஃப் உடலமைப்பு

இந்த வகை உடலமைப்பு கொண்டவர்களுக்கு,உடல் எடை அதிகரிக்காததால் இவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று கருதலாம். ஆனால்,அவர்கள் எப்போதுமே உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் மிதமான உடலமைப்பைப் பெற,புரதங்கள்,கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் போன்றவை அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர்.

  • புரதச்சத்து நிறைந்த உணவுகள்: பருப்பு வகைகள்,பன்னீர்,சீஸ்,முட்டை வெள்ளைக்கரு,இறைச்சி. இவற்றைத் தொடர்ந்து உண்பதால் தசை வலிமை அதிகரிக்கும்.
  • உடலின் அன்றாட செயல்பாடுகளுக்குக் கார்போஹைட்ரேட் முக்கியமான ஆற்றல் மையமாக விளங்குகிறது.
  • கோதுமை,பழுப்பு அரிசி,காய்கறிகள் உள்ளிட்டவற்றில் கார்போஹைட்ரேடும்; ஆலிவ் எண்ணெய்,மீன்,நெய்,கொட்டை உணவுகள் ஆகியவற்றில் உடலுக்கு நன்மைபயக்கும் வகையிலான கொழுப்புகளும் உள்ளன.
  • இந்த உடலமைப்பைக் கொண்டவர்கள்,உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடாமல் இருக்கச் சாப்பிடும் உணவைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து இரண்டு மணிநேர இடைவெளிகளில் சாப்பிட்டு வருவது நல்லது.
  • 55 சதவீத அளவிலான சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள்(முழுத் தானியங்கள், அரிசி, கொட்டைகள், அனைத்துக் காய்கறிகள்)
  • 30 சதவீத அளவிற்குப் புரதங்கள்(கோழி, முட்டை, மோர்)
  • 15 சதவீத அளவிற்கு ஆரோக்கியமான கொழுப்புகள்(ஆலிவ் எண்ணெய், ஆளிவிதை என்ணெய், மீன் உள்ளிட்ட கடல் உணவுகள்) உள்ளிட்டவை அடங்கிய உணவுமுறையானது, எக்டோமார்ஃப் உடலமைப்பு கொண்டவர்களின் சிறந்த தேர்வு ஆகும்.

A woman holding a bowl of apples, orange slices, and a spoon, symbolizing a balanced diet for the Mesomorph body type.

மீசோமார்ஃப் உடலமைப்பு

இந்த உடலமைப்பு கொண்டவர்களுக்கு உடல் எடைப் பராமரிப்பு எளிதானது. இவர்கள் அதிகப் புரதம்,சரியான அளவில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்,அதிகளவில் காய்கறிகள் கொண்ட சரிவிகித உணவைச் சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர். இவர்களின் உடல் எடை அதிகரிக்கும்போதிலும்,சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளின் மூலமாக,விரைவாகக் கட்டுப்படுத்தவும் இயலும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் அடங்கிய சீரான உணவுமுறையே,இந்த உடலமைப்பைப் பெற்றவர்களுக்கு உகந்தது ஆகும். இந்த உடலமைப்பைப் பெற்றவர்கள்,தசைகளின் வலிமையை மேம்படுத்த தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு,மூன்று வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும்.

  • 45 சதவீத அளவிலான சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள்.
  • 35 சதவீத அளவிலான புரதங்கள்.
  • 20 சதவீத அளவிலான ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுமுறையானது, மீசோகார்ஃப் உடலமைப்பு கொண்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

எண்டோமார்ஃப் உடலமைப்பு

இந்த உடலமைப்பைக் கொண்டவர்கள்,மிதமான புரதம் மற்றும் கொழுப்புகள் கொண்ட உணவு வகைகள் சாப்பிட வேண்டும். சாலட்கள்,சமைத்த காய்கறிகள்,இவர்களுக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது. சாலட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆவதால்,உங்களுக்குப் பசி உணர்வு மீண்டும் ஏற்பட அதிகக் காலம் பிடிக்கும். இது உங்களை அன்றைய நாள் முழுவதும் உத்வேகமாக இருக்க உதவுகிறது. ரொட்டி,அரிசி,பாஸ்தா,கேக்குகள் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட உணவுவகைகள்,நிலையான உடல் எடைப் பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. முழுமையான தானியங்கள்,விதைகள், கொட்டைகள் உள்ளிட்டவை, இந்த வகையினருக்கு ஏற்றவகையிலான கார்போஹைட்ரேட் உணவு வகைகள் ஆகும்.

  • 30 சதவீத அளவிலான சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து கொண்ட காய்கறிகள்,பழுப்பு அரிசி,முழுத் தானியங்கள்)
  • 45 சதவீதம் புரதம் ( கோழியின் நெஞ்சுக்கறி,மோர்)
  • 25 சதவீத அளவிலான கொழுப்புகள் கொண்ட உணவுமுறையானது, எண்டோமார்ஃப் உடலமைப்பு கொண்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இது வளர்சிதை மாற்ற வீதத்தை அதிகரிக்கிறது.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமுடன் கடைப்பிடித்து,அந்தந்த உடலமைப்பு கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையிலான சரியான உணவுமுறையைத் தேர்வு செய்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.