குடும்ப அமைப்பு சிகிச்சை உறவுகளை வலுப்படுத்துமா?
குடும்பங்கள் ஒவ்வொன்றும் இந்தச் சமூகத்தில் ஒரு அமைப்புகள் தான் ஆகும். இந்த அமைப்பு தனித்துவமானது. இது பெரிய அளவிலான பகுதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. சமீபகால உறவுகள் முதல் குடும்பத்தின் மூதாதையர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி வகையில் செல்வாக்கைச் செலுத்துகிறது. நம் அன்பிற்கு உரியவர்களுடனான தொடர்புகள், வாழ்க்கையின் சுவாரஸ்யமான தருணங்களை வடிவமைக்கின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே, கருத்து வேறுபாடு நிகழும் சமயத்தில், அது, குடும்ப அமைப்பிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு குடும்பங்களிலும், உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன. ஒருவர்ப் பேச்சானது, மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்தில் அமைகிறது. பிறர் வருத்தப்படும்படியான விசயங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்றச் சவால்களை ஒவ்வொரு குடும்பங்களும் எதிர்கொண்டே ஆக வேண்டும். சிலர், நம் குடும்பத்தில் மட்டுமே இதுபோன்று நிகழ்வதாக நினைத்துக் கொள்வார்கள், இது முற்றிலும் தவறான எண்ணம் ஆகும்.
குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, குடும்ப அமைப்பு சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.பிரத்யேக நிபுணர், குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உறவுகளை வலுப்படுத்த உதவுகிறார்.
மற்ற சிகிச்சைமுறைகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
குடும்ப அமைப்பு சிகிச்சையானது, தனிநபர் அல்லது தம்பதிகளுக்கான சிகிச்சைகள் போன்று இருப்பதில்லை. இது உங்களுக்குப் பிரியமானவர்களிடையேயும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் நிகழும் உறவுச் சிக்கல்களைக் களைய உதவுகிறது. இந்தச் சிகிச்சைமுறையின் மூலம், குடும்ப உறுப்பினர்களின் மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. இந்தச் சிகிச்சைமுறையானது, குடும்ப உறவுகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, பதட்டம், மனச்சோர்வு மற்றும் இன்னபிற வகையிலான உளவியல் பிரச்சினைகளின் அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சைகளையும் வழங்க உதவுகின்றன.
குடும்ப அமைப்புச் சிகிச்சை முறையானது கால அளவு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், மற்ற சிகிச்சை முறைகளில் இருந்து வேறுபடுகிறது. குடும்ப சிகிச்சை முறையானது, குறுகிய கால அளவிலான இலக்குகளை நோக்கிச் செயல்படுவதால், தீர்வை மையமாகக் கொண்டதாக விளங்கி வருகிறது. இந்தச் சிகிச்சைமுறையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்காமல், குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றாலே போதுமானது ஆகும். அனைவரும் பங்கேற்கும்பட்சத்தில், சிகிச்சையின் முழுப்பலனைப் பெற இயலும். சிகிச்சை அளிக்கவல்ல நிபுணர், யார் யார்ச் சிகிச்சையில் பங்கேற்க உள்ளனர் என்பதை அடையாளம் கண்டறிந்து அவர்கள் அனைவரையும் ஒரு அமர்வின் மூலமாகவோ அல்லது தனித்தனி அமர்வுகளுக்கு உட்படுத்தியோ, அவர்களை வழிநடத்த முடியும்.
குடும்ப சிகிச்சை – செயல்படும் முறை
குடும்பத்தைப் பாதிக்கும் வகையிலான இயக்கவியல், தகவல் தொடர்பு முறைகள் மற்றும் நடத்தைக் காரணிகள் வெளிக்கொணர்வதைக் குடும்பச் சிகிச்சை முறையானது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
மற்ற சிகிச்சைமுறையைப் போலவே, இந்தச் சிகிச்சை முறையிலும், சிகிச்சை நிபுணரின் வழிகாட்டுதலின்பேரிலேயே, அனைத்துச் செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. இந்தச் சிகிச்சை உறவானது, குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கையையும், சிகிச்சையாளர் உடனான நல்லுறவை மேம்படுத்தவும் உதவுகிறது.
குடும்ப சிகிச்சையின் அணுகுமுறைகள்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்து, சிகிச்சை நிபுணர்கள் பல்வேறு அணுகுமுறைகளை வகுக்கின்றனர். இந்தச் சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் பொதுவான அணுகுமுறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
முறையான வகையிலான குடும்ப சிகிச்சை
இந்தச் சிகிச்சைமுறையின் மூலம், உங்கள் பிரியமானவர்களுக்கு விருப்பமில்லாத தொடர்புகள் அல்லது நடத்தை முறைகளை அடையாளம் காண்பது மட்டுமல்லாது, அவைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவுகிறது.
கட்டமைப்பு ரீதியிலான குடும்ப சிகிச்சை
இந்தச் சிகிச்சைமுறையானது, குடும்ப உறவுகளின் கட்டமைப்பைச் சீரமைப்பது மட்டுமல்லாது, அதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்கிறது. இதன்மூலம், குடும்ப உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான எல்லைகளை வகுக்க உதவுகிறது.
செயல்பாட்டு வடிவிலான குடும்ப சிகிச்சை
நடத்தைச் சவால்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு உரிய ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தச் சிகிச்சைமுறையானது விளங்கி வருகிறது.
தீர்வினை மையமாகக் கொண்ட சிகிச்சை
கடந்த கால நினைவுகளைக் கண்டு அஞ்சாமல், குடும்பத்தின் வளங்கள் மற்றும் பலங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிகழ்காலத்தில் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் போதிய கவனத்தைச் செலுத்துகிறது.
போவெனியன் குடும்ப சிகிச்சை
இந்தச் சிகிச்சைமுறையில், தனித்துவமான மற்றும் இணைப்பின் சரியான சமநிலையைக் கண்டறிவதில் கவனம் செலுத்துவதன் மூலம், பிரிதல் மற்றும் ஆரோக்கியமற்ற நெருக்கம் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.
மேலும் வாசிக்க : பணி நடவடிக்கைகளில் மனநல ஆரோக்கியம் அவசியமா?
குடும்ப சிகிச்சை எல்லோருக்கும் ஏற்றதா?
குடும்ப அமைப்பு சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தேவையான ஆதரவைப் பெறலாம். குடும்பத்தில் நிகழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், பின்னால் ஒரு நடத்தை இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
குடும்பத்தில் நிகழும் சவால்கள், பொதுவான முறையான சவால்கள் என்றபோதிலும், இதில் தனிப்பட்ட பொறுப்புணர்வு நிகழ்வானது முக்கியம் பெறுகிறது. நீங்கள் குடும்ப சிகிச்சை முறையை முன்னெடுப்பீர்களானால், உண்மையான சுயச் சிந்தனைப் பிரதிபலிப்பில் ஈடுபடவும். நேர்மரையான மாற்றங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கும்பட்சத்தில், மற்றவர்களால் ஊக்குவிக்கப்படுவீர்கள்.
குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சிகிச்சை அமர்வில் பங்கேற்க வேண்டும். சிகிச்சைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும். அனைவரும் சுறுசுறுப்பாகப் பங்கேற்றுச் செயல்படும்போதே குடும்பச் சிகிச்சை வெற்றிப் பெறும். இந்தச் சிகிச்சை முறையில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் தனிப்பட்ட வகையிலான சிகிச்சை அமர்வுகளில் கலந்துகொள்வது என்பது வழக்கமான நடைமுறைத் தான் ஆகும். இது தனிநபர்கள், தங்கள் குடும்ப கவலைகளைச் செயலாக்கம் பெறுவதற்குத் தேவையான ஆதரவினைப் பெற உதவுகிறது.
குடும்ப சிகிச்சை, எந்தவகையான சிக்கல்களைப் பூர்த்தி செய்கிறது?
ஒவ்வொரு குடும்பமும், அதற்கே உரிய தனித்துவத்தைக் கொண்டு இருப்பதால், மக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, குடும்ப சிகிச்சையை நாடுகின்றனர்.
- பெற்றோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள்
- பெற்றோர் – குழந்தை இடையேயான உறவில் முரண்பாடு
- உடன்பிறந்தவர்களுடனான உறவில் மோதல் ஏற்படுதல்
- பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு, திருமண உறவில் விரிசல்
- துக்கம் மற்றும் இழப்பு நிகழ்வுகளால் பாதிப்பு
- மனநலம் சார்ந்த பாதிப்புகள்
- குழந்தைப் பருவம் மற்றும் இளம்பருவத்தில் நிகழும் நடத்தைச் சவால்கள்
உள்ளிட்ட சிக்கல்களை, குடும்பச் சிகிச்சையானது திறம்பட நிர்வகிக்கிறது.
குடும்ப அமைப்புச் சிகிச்சையை, உரிய நிபுணரின் வழிகாட்டலின்படி பின்பற்றி, குடும்ப உறுப்பினர்களிடையே நிகழும் உறவுச் சிக்கல்களை வேரறுத்து, குடும்பத்தில் இனிய சூழல் நிலவச் செய்வோமாக…