இந்தியாவில் மருத்துவ மரபியலின் வளர்ச்சி அறிவோமா?
மருத்துவ வரலாற்றைப் பகுப்பாய்வு செய்தல், வம்சாவளி விளக்கப்படத்தை உருவாக்குதல், விரிவான உடல் பரிசோதனை மேற்கொள்ளுதல் ஆகியவை மருத்துவ மரபியலின் அடிப்படைச் செயல்பாடுகள் ஆகும். மேலும், நோயின் பரம்பரை முறை ஆய்வு, மரபணு சோதனைகள், ஆலோசனைகள், கண்காணிப்புத் திட்டங்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள் வழங்குதல் போன்றவை மருத்துவ மரபியலின் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
மருத்துவ சுயவிவரம் மற்றும் நோய்களின் அறிகுறிகள், பீனோடைப்பைக் கொண்டு உள்ளன. மருத்துவத் துறையில், நோயைக் கண்டறிதல் நிகழ்வு கடினமான சவாலாகும். மைக்ரோஅரேக்கள், இந்தியாவில் மருத்துவத்துறையில் வேகமாகப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. புற்றுநோயியல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், இரத்தவியல் நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், சிறுநீரக நோயியல் நிபுணர்கள், குழந்தை நல மருத்துவர்கள், பெண்கள் நலம் சார்ந்த மருத்துவ நிபுணர்கள், நோயெதிர்ப்பு நிபுணர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள், கண் மருத்துவர்கள் மருத்துவ மரபியலில் அடங்குகின்றனர். இந்தச் சோதனைகள், நோயறிதல் செயல்முறையை விரைவுபடுத்துகின்றன மற்றும் பல மரபணு குறைபாடுகளைக் கண்டறிய உதவுகின்றன.
இந்தச் சோதனைகள், வளர்ச்சி அடைந்த நகரங்களில் ஒப்பீட்டளவில் எளிதாகக் கிடைத்தாலும், இந்தப் புதிய கருவிகளின் பலம் மற்றும் வரம்புகள் குறித்த சீரான அணுகல் மற்றும் விழிப்புணர்வு இல்லை.
மருத்துவ மரபியல் துறை, இந்தியாவில் ஒப்பீட்டளவில் புதிய துறையாக உள்ளது. மரபணுக் குறைபாடுகள் இந்தியாவில் பொதுவானதாக உள்ளதா?
உலக மக்கள்தொகையில் தோராயமாக 7 சதவீதத்தினர் மரபணுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மதிப்பை, இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்பட்சத்தில், சுமார் 840 லட்சம் பேர், மரபணுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மேம்பட்ட நோய்த்தடுப்பு முறைகளினால், தொற்று நோய்ப்பாதிப்புகள் வீழ்ச்சியைச் சந்தித்துவருகின்றன. இந்தச் சமூகங்களில் பெரும்பான்மையாக உள்ள சொந்தங்களுக்குள் திருமணம் உள்ளிட்ட நடைமுறைகளால், மரபணுக் குறைபாடுகளின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் மரபணுக் குறைபாடுகளைக் கண்டறிவதில் தாமதம் ஏதேனும் நிலவுகிறதா?
சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி, லைசோசோமல் சேமிப்புக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 119 நோயாளிகளின் விவரங்கள், துவக்கத்தில் இருந்து இறுதி நோயறிதல் நிகழ்வு வரைக் கணக்கிடப்பட்டன. நோய்ப்பாதிப்பு துவங்குவதற்கும், மருத்துவர்களின் சந்தேக நிவர்த்திக்கும் இடையிலான சராசரி கால இடைவெளி 6 மாதங்கள் ஆகும். மரபணு சிகிச்சைத் துவங்குவதற்கும், அதனை முறையாக வழங்குவதற்குமான இடைநிலை இடைவெளி 12 மாதங்கள் ஆகும். மரபணு நிபுணர்களால் அடுத்தடுத்த நோயறிதலுக்கான இடைநிலை இடைவெளி என்பது ஒரு மாத காலம் மட்டுமே ஆகும். நோயறிதல் நிகழ்வில் ஏற்படும் தாமதமானது, நிர்வகிக்கப்படும் மருத்துவத்தில் நிகழும் சந்தேகம், அதுதொடர்பான ஐயம், நிபுணரிடம் கொண்டு செல்லப்படுவதால் ஏற்படுகிறது.
மரபணுக் குறைபாடுகள் தொடர்பாக, முதன்மை மருத்துவரின் விழிப்புணர்வைப் புரிந்துகொள்ளப் பயனுள்ள வாய்ப்பை, மேற்கண்ட நடைமுறைகள் வழங்குகின்றன. மருத்துவப் படிப்பில் மரபணுக் குறைபாடுகள் தொடர்பான பாடத்திட்டம் இல்லை. மரபணுக் குறைபாடுகளைப் பொதுவான நோய்களுடன் ஒப்பிடுவதும், அவற்றின் அரிய தன்மைப் பற்றிய தகவல்கள் இல்லாததும் பிரச்சனையாக உள்ளது. இதனால் உரிய நேரத்தில் நோயறிதல் தாமதமாகிறது. சரியான நேரத்தில் நோயறிதல் செய்வது நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.
மரபணுக் குறைபாடுகளால் கண்டறிவதால் ஏற்படும் நன்மைகள்
மரபணுச் சோதனைகள் கவனமாக மேற்கொள்ளப்படும்போது, தேவையற்ற சோதனைகள் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. இதன்மூலம் தசைத் திசுப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளின் மூலம் உடலுக்கு ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன.
நோய்ப்பாதிப்பை, அதன் ஆரம்பநிலையிலேயே அறிந்து கொள்ள உதவும் முன்கணிப்பு நடைமுறைகள், நோயியல் குறித்த அறிவாற்றலுக்கு உதவுகிறது.
நோய்க்கு உரித்தான வகையிலான கண்காணிப்புத் திட்டத்தைத் திட்டமிடுதல். உதாரணமாக, டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு, குழந்தையிடம் கண்டறியப்பட்டவுடன், ரத்த அளவீடுகள், தைராய்டு அளவு, கண் பரிசோதனை, செவிப்புலன் மதிப்பீடு உள்ளிட்டவைக் கணக்கிடப்படும். நோய்ப்பாதிப்பின் சிக்கல்களைத் துவக்கத்திலேயே கண்டறிவதன் மூலம் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையை அளித்து, பாதிப்பின் தீவிரத்தை, முளையிலேயே கட்டுப்படுத்தி விடலாம்.
லைசோசோமல் சேமிப்புக் குறைபாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில், என்சைம் மாற்று சிகிச்சையானது பேருதவி புரிகிறது. இந்த நவீனத்துவச் சிகிச்சையின் மூலம், பலருக்கு மறுபிறப்பு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
மரபணு நோயறிதல் மருத்துவர் அறிந்திருக்கும்பட்சத்தில், அடுத்தடுத்த ஆலோசனை நம்பகத்தகுந்த வகையில் அமைகிறது. இது எதிர்கால சந்ததியினருக்கு நோய்ப்பாதிப்பு ஏற்படும் அபாயத்தை உணர்த்துவதுடன், ஆபத்தைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறது.
கருத்தரிப்புக்கு முன்பே நோயறிதல் செய்வதால், குழந்தைக்கு ஏற்படக்கூடிய மரபணுக் குறைபாடுகளைத் தடுக்க முடியும்.
மேலும் வாசிக்க : வீட்டில் DNA சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
ஆய்வகத்தில் மரபணுச் சோதனை மேற்கொள்வதற்கான செயல்முறை
இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளில் ஆய்வகங்களின் எண்ணிக்கைக் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. தங்களின் தேவைகள் மற்றும் காரணிகள் அடிப்படையில், மருத்துவர்கள் ஆய்வகங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆய்வகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும், சோதனை முடிவுகளின் நம்பகத்தன்மையே, இங்கு பிரதானமாக உள்ளது. ஒரு ஆய்வகத்தில், பல்வேறு மருத்துவர்கள் தங்கள் சோதனைகளை உட்படுத்தும்போது, அவர்களின் விருப்பங்கள், அணுகல்முறை, ஆய்வகத்தின் அறிவியல் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த உணர்திறன் உள்ளிட்ட காரணிகளையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்தியாவில் மார்பக மற்றும் கருப்பைப் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் மரபணுச் சோதனை மேற்கொள்கின்றனரா?
தெற்காசிய மக்களிடையே, மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய்ப் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. புற்றுநோய் தொடர்பான மரபணுச் சோதனைகள் விலை அதிகம் என்பதால், அதைப் பெரும்பாலானோர்ப் பரிந்துரைப்பது இல்லை.
மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய மார்பகப் புற்றுநோய், ஆண் மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான சிகிச்சை அல்லது கண்காணிப்பு உத்திகளை மேம்படுத்துவதில், மரபணுச் சோதனை நிகழ்வானது, முக்கியப்பங்கு வகிக்கிறது.
மரபணு மற்றும் ஜீனோம் மதிப்பீடுகளுக்கு ஏதேனும் காப்பீடு உள்ளதா?
இந்தியாவில் அனைவருக்கும் பொதுவானதொரு காப்பீடு என்ற திட்டம் எதுவும் இல்லை. நாட்டின் சுகாதாரத்துறையில் 71 சதவீதச் சிகிச்சைச் செலவுகளை நோயாளிகளே ஏற்க வேண்டியுள்ளது. பல்வேறு சிகிச்சைகளுக்கு அதிகப் பணம் தேவைப்படுவதால், மருத்துவர்கள் பரிந்துரைத்தும் பெரும்பாலானோர்க் காப்பீடு செய்துகொள்ள முன்வராததால், முக்கியமான சிகிச்சைகள் மேற்கொள்ள இயலாத சூழலே நிலவிவருகிறது.
இந்தியாவில் மருத்துவ மரபியலின் தேவைக் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் பயன்பாடுகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைவரும் வளமான நல்வாழ்வு பெற விழைவோமாக…