உடல் ஆரோக்கியம்: இந்திய உணவுமுறைச் சிறந்ததா?
இந்தியர்களிடையே அதிகரித்து வரும் உடற்பருமன், நீரிழிவு பாதிப்பு உள்ளிட்ட வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுவதற்கு உணவு வகைகளே முக்கிய காரணமா? இக்கேள்விக்கு ‘ஆம்’ என்ற பதிலே சாலப் பொருந்தும்.
இந்தியா தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்து வரும்போதிலும், ஃலைப்ஸ்டைல் நோய்கள் பாதிப்புகளிலும், நாம் மற்ற நாடுகளைவிட முன்னணியிலேயே உள்ளோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
சர்வதேச அளவில் அதிக உடற்பருமனான இளம்வயதினர் உள்ள நாடுகளின் பட்டியலில், முதல் 5 இடங்களில் இந்தியா உள்ளது. அதாவது, இந்தியாவில் 30 மில்லியன் அதிக உடற்பருமனான இளம்வயதினர் உள்ளனர். இது மும்பை, டெல்லி, பெங்களூரு நகரங்களின் மொத்த மக்கள்தொகைக்குச் சமம்.
அதிக உடற்பருமன் கொண்ட குழந்தைகள் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 14.4 மில்லியன் அளவிற்கு அதிக உடற்பருமனான குழந்தைகள் உள்ளனர். இந்த அளவு, சென்னை, புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களின் மக்கள்தொகைக்குச் சமமானது ஆகும்.
முன்னணி நகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூரு, புனே, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள மக்கள்தொகையும், நாட்டில் உள்ள அதிக உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமம் ஆகும்.
சர்வதேச அளவில், நீரிழிவு பாதிப்பின் தலைநகரமாக, இந்தியா விளங்கி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 மில்லியன் என்ற இமாலய இலக்கை எட்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது சீனா ( 42 மில்லியன்) மற்றும் அமெரிக்கா ( 30 மில்லியன்) அளவைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இத்தகைய உடல்நலக்குறைவுகள் ஏற்பட இந்திய உணவுமுறைகளே முக்கிய காரணமா என்ற கேள்வியை சற்று பொறுமையாக அணுக வேண்டும்..
இந்திய உணவுமுறைகளின் பொதுவான மூலப்பொருட்கள்
இந்திய உணவுமுறை என்றால், அது ஏதோ ஒருவகையை மட்டும் சார்ந்தது அல்ல. இந்தியா, பல்வேறு மாநிலங்களால் ஆனது போன்று, உணவு வகைகளிலும், பல்வேறு வகையான உணவுமுறைகள் இங்கு காணப்படுகின்றன.
கீழ்க்கண்ட உணவுவகைகளில் பெரும்பாலானவை, பொதுவான மூலப்பொருளைக் கொண்டதாக உள்ளன.
அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி இட்லி, தோசை, ரொட்டி, புரோட்டா உள்ளிட்டவைச் செய்யப்படுகின்றன.
பருப்பு வகைகளைக் கொண்டு, சாம்பார், சன்னா உள்ளிட்டவைச் செய்யப்படுகின்றன
அந்தந்த சீசன்களில் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு கிரேவி உள்ளிட்டவைச் செய்யப்படுகின்றன.
தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் வெண்ணெய் மற்றும் நெய் உள்ளிட்டவைச் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பண்டிகைகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது பால், பனீர், தயிர் உள்ளிட்டவைகளைக் கொண்டு சிறப்பு பதார்த்தங்கள் செய்யப்படுகின்றன.
கடல் உணவுகள் மற்றும் இறைச்சிகள் பெரும்பாலானோருக்குப் பிடித்த உணவுகளாக உள்ளன.
மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, சீரகம், கடுகு உள்ளிட்டவை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களும், நமது உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், மினரல்கள்,கொழுப்புகள் உள்ளிட்ட சத்துக்களை வழங்குகின்றன. மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்களும், மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளன. சர்வதேச அளவில் சிறந்த உணவு முறையாக, இந்திய உணவுமுறை விளங்குகிறது.இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், இங்கிலாந்தின் தேசிய உணவாக, இந்திய உணவுவகைகளில் ஒன்றான சிக்கன் டிக்கா மசாலா, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மக்களின் வாழ்க்கைமுறைகள் மற்றும் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் பெரும் மாற்றங்களை அடைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.
கடந்த தலைமுறையில், உணவுப் பழக்கவழக்கங்களில் நாம் மேற்கொண்ட மாற்றமானது, இன்றளவிலும், சாப்பிடும் ஒரு நாளின் உணவு வகைகள் மட்டுமல்லாது ஒருவேளை உணவு வரை அது எதிரொலிக்கின்றது.
காலை உணவு
விரைவில் சமைக்கக் கூடியது மட்டுமல்லாது, எளிதாகவும் இருப்பதோடு, பணியிடங்களுக்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக, நம் மக்கள் கார்ன் பிளேக்ஸ், ஓட்ஸ், பிரெட் ஜாம், உள்ளிட்டவைகளின் பக்கம், தங்களது கவனத்தைத் திருப்பி உள்ளனர்.
மதிய உணவு
இந்த நேரத்திற்கு, அலுவலகக் கேண்டீன்களே, பெரும்பாலானோருக்கு ஆதரவாளராக விளங்குகிறது. சிலர், ஆன்லைனில் ஆர்டர்ச் செய்து, தங்களது பசியைப் போக்கிக் கொள்கின்றனர். இந்த நேரத்தில், அதிகச் சத்தான உணவு, நமது உடலுக்குத் தேவை என்பதை, எளிதாக மறந்து விடுகின்றோம்.
சிற்றுண்டி
இது பெரும்பாலும் பிஸ்கெட்களாகவும் அல்லது எண்ணெயில் பொரிக்கப்பட்ட சமோசா, பப்ஸ்களாகவே இருக்கும்.
இரவு உணவு
உணவு வகைகளைச் செயலிகளின் மூலம் பதிவு செய்து, அதைக் குறுகிய நேரத்தில் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு, இது பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு, நம் மக்கள், இந்த நேரத்தில் ஆர்டர்ச் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ஹோட்டல் உணவு வகைகள் என்றாலே, பெரும்பாலும் அதிக எண்ணெய் கொண்டதாகவே இருக்கும் என்பதை எளிதாக மறந்து விடுகின்றனர்.
நாள் முழுமைக்கும்
சர்க்கரை அதிகம் கொண்ட காபி, டீ உள்ளிட்ட பானங்களே, மக்களின் அன்றைய நாளை எளிதாகக் கடந்து செல்ல உதவுகின்றன என்று கூறினால், அது மிகையல்ல.
மேற்குறிப்பிட்ட இந்த உணவு வகைகளை நாம், இந்திய உணவுமுறையிலேயே, சேர்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஏனெனில்,
மேற்குறிப்பிட்ட உணவு வகைகளில் அதிகளவில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையே உள்ளது.
உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் துளியளவும் இல்லை.
அதற்குப் பதிலாக, உடலிற்குக் கேடு விளைவிக்கும் எண்ணெய், கொழுப்புகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
புரதங்கள் கொண்ட உணவு வகைகள் ஒன்றுகூட இல்லை
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில், செயற்கை நிறமூட்டிகளும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கவல்ல எண்ணெய் வகைகளுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
நாளொன்றுக்குச் சராசரியாக 10 தேக்கரண்டி சர்க்கரையா?
நாம் நாளொன்றுக்கு 10 தேக்கரண்டிக்கும் மேல் சர்க்கரை உட்கொள்கிறோம் என்பது நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.
நாம் உண்ணும் உணவு வகைகளில் அதிகளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை உள்ளிட்ட நமது உடலுக்கு ஒவ்வாத சத்துக்களே உள்ளன. இத்தகைய உணவு வகைகளைத் தொடர்ந்து உண்பதனால், உடல் எடை அதிகரித்து, உடற்பருமன் பாதிப்பு ஏற்படுகின்றது.
நம் உணவில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் போதுமானதாக இல்லை. இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் வாசிக்க : இந்தியாவின் பாரம்பரிய VS நவீன உணவுமுறைகள்
இதை எவ்வாறு தவிர்ப்பது?
வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டுமா? அல்லது பாரம்பரிய இந்திய உணவுமுறையைப் பின்பற்ற வேண்டுமா? இந்தக் கேள்விக்கான பதில் மிக எளிமையானது.
உடல்நலத்தைப் பேணிக்காக்க வேண்டுமெனில், நாம் அதற்காக எத்தகைய தியாகங்களையும் (உணவு விசயத்தில்) செய்யத் தயாராக இருத்தல் வேண்டும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற 5 முக்கியமான விசயங்கள்
உணவுத்தட்டில், பாதியளவு காய்கறிகளாலேயே நிரம்பி இருக்க வேண்டும். இந்தக் காய்கறிகள் உள்ளூரில் விளைந்ததாகவோ அல்லது அந்தந்த சீசனில் கிடைக்கப் பெறுபவையாகவோ இருக்கலாம். இந்தக் காய்கறிகள், இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப் பெற்றிருப்பது நலம்.
ஒவ்வொரு உணவிலும் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நம் உடலுக்குத் தேவையான சர்க்கரை, பழங்களிலிருந்து மட்டுமே கிடைத்ததாக இருக்க வேண்டும்.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை, அறவே தவிர்ப்பது நல்லது.
புரதம் உள்ளிட்ட சத்துக்களின் குறைபாட்டால் அவதிப்படுவோர், எந்தச் சத்து குறைபாடோ, அதற்குரிய துணைப் பொருட்களின் உதவி கொண்டு, அந்தக் குறைபாட்டைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் சமைத்தாலும், செயலிகள் மூலம் ஆர்டர் செய்தாலும், மேற்கண்ட காரணிகளைப் பின்பற்றினால், ஆரோக்கியக்குறைவு உங்களை அணுகாது.
இந்திய பாரம்பரிய உணவுமுறையின் நன்மைகள்
இந்தியப் பாரம்பரிய உணவுமுறையினைப் பின்பற்றுவதால், கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது
இந்திய பாரம்பரிய உணவு முறையில் இடம்பெற்றுள்ள முழுத் தானியங்கள், பருப்பு வகைகள், பழுப்பு அரிசி மற்றும் அதிக நார்ச்சத்துக் கொண்ட உணவு வகைகள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 புற்றுநோயின் பாதிப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது.
உடல் எடை நிர்வாகத்தில் முக்கியப் பங்கு
இந்திய உணவுமுறையில் பால் மற்றும் அதன் துணைப் பொருட்களான தயிர், நெய், பாலாடைக்கட்டி உள்ளிட்டவற்றிற்கு முக்கிய இடமுண்டு. இவை கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, பொட்டாசியம், வைட்டமின் டி மற்றும் புரதச்சத்து நிறைந்தவை. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும். ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளையும் தடுக்க முடியும்.
கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துகிறது
இந்திய உணவுமுறையில் முக்கிய இடம்பெறும் காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை கண்பார்வையை மேம்படுத்துவதோடு, உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகின்றன. பருப்பு வகைகளில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இ சத்துக்கள் அதிகமுள்ளன.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
இந்திய பாரம்பரிய உணவுமுறையில் இடம்பெறும் மசாலா பொருட்களுக்குத் தனி மணமும் மருத்துவக் குணங்களும் உண்டு. இவற்றைத் தினசரி பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இது நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.
நமது இந்திய உணவுமுறை பல்வேறு சுற்றுப்புறச் சூழ்நிலைகள், கலாச்சாரம் மற்றும் வேளாண்முறைகளால் மெருகேற்றப்பட்டுள்ளது. சில உணவு வகைகள் அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கின்றன.
இந்திய பாரம்பரிய உணவுமுறைகளைப் பின்பற்றி, உடல்நலத்தை சீரிய முறையில் பேணிக்காப்போம்..