• Home/
  • PET CT/
  • Pet – CT ஸ்கேன் செயல்படும் விதம்…
A male radiologist setting the CT scanner inside an imaging room.

Pet – CT ஸ்கேன் செயல்படும் விதம்…

உடலில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களில் அதன் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை, அளவிட உதவும் நியூக்ளியர் மருத்துவமே Pet – CT ஸ்கேன் முறை ஆகும். இந்த Pet – CT ஸ்கேன் முறை, நியூக்ளியர் மருத்துவம் மற்றும் உயிர் வேதியியல் பகுப்பாய்வின் கலவையாக விளங்குகிறது. புற்றுநோய், மூளை மற்றும் இதயப் பாதிப்பு கொண்ட நோயாளிகளின் சிகிச்சை முறைக்கு இந்த Pet – CT ஸ்கேன் பேருதவி புரிகிறது.

Pet – CT ஸ்கேனின் பயன்பாடுகள்

செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, பின் அது ஆற்றலாக மாற்றம் பெறும் நடைமுறைகள் எனச் செல்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்ட உயிர்வேதியியல் மாற்றங்களைக் காட்சிப்படுத்துவதில் Pet – CT ஸ்கேன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நியூக்ளியர் மருத்துவ முறையின் மற்ற வகைகள், உடல் திசுக்களின் செயல்பாடுகளைக் கண்டறியும் பொருட்டு, அதனுள் சேகரம் ஆகி உள்ள அணுக்கதிரியக்கத் தனிமத்தின் அளவை மட்டும் கணக்கிடுகிறது. ஆனால், இந்த Pet ஸ்கேன் முறையானது, உடற்திசுக்களின் வள்ர்சிதை மாற்ற அளவைக் கணக்கிடவும் பயன்படுகின்றது.

Pet ஸ்கேனின் பயன்பாட்டு துறைகள்

புற்றுநோய், மூளை, நரம்பு தொடர்பான குறைபாடுகள், இதய நோய்கள் உள்ளிட்டவைகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால், Pet ஸ்கேன் முறை, அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Pet ஸ்கேன் முறையானது, மேலும் பல்வேறு நோய்களை விரைவில் கண்டறிய, அது மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் முறையில் கண்டறியப்படும் முடிவுகளின் கூடுதல் விபரங்களை அறியும் பொருட்டும், Pet ஸ்கேன் முறைப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வை, PET/CT அல்லது PET-CT என்று குறிப்பிடுகிறோம். நுரையீரல் புற்றுநோய், வலிப்பு நோயைக் கண்டறிதல், அல்சைமர் மற்றும் கரோனரி தமனிகளில் ஏற்படும் குறைபாடுகளை துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மேற்கொள்வதில் PET-CT ஸ்கேன் முறை, முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் வாசிக்க : Pet-CT ஸ்கேனின் வகைகள் – அதன் பயன்கள்

PET ஸ்கேன் முறைச் செயல்படும் விதம்

PET ஸ்கேன் முறையில், முப்பரிமாண படங்கள், சோதனை முடிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த ஸ்கேன் முறையில், உடலில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களின் படம் எடுக்க, புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் (FDG) ரேடியோடிரேசர் ஆக பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய், மூளை, இதய நோய்கள் உள்ளவராகச் சந்தேகிக்கிப்படும் உடலின் கரோனரி ரத்தக்குழாய் வழியாக, இந்த ரேடியோடிரேசர் உட்செலுத்தப்படுகிறது.

ரேடியோடிரேசரின் பங்கு

நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க, குளுக்கோஸ் இன்றியமையாததாகிறது. இந்த ரேடியோடிரேசரில் உள்ள குளுக்கோஸ், திசுக்களில் உள்ள செல்களுக்குள் செல்கின்றது ரேடியோடிரேசர், உடலில் உள்ள செல்கள் முழுவதிலும் பரவி விடுகிறது. பின், இந்த நிலையில், PET ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

பாசிட்ரான் கதிர்களின் பங்கு

செல்கள் அனைத்திலும் வியாபித்து உள்ள புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ், பாசிட்ரான் கதிர்களை வெளியிடுகின்றது. சாதாரண செல்களை ஒப்பிடும் போது, புற்றுநோய் செல்கள் விரைவாகப் பல்கிப் பெருகும் தன்மைக் கொண்டது. இதன்காரணமாக, பாசிட்ரான் கதிர்கள், மிகவும் விரைவாகவும் மற்றும் எளிதாகவும், புற்றுநோய் செல்களைக் கண்டறிகின்றன.

காமா கதிர்களின் பங்கு

Pet ஸ்கேனரில் காமா கதிர்கள் அடிப்படியிலான கேமரா அமைப்பு உள்ளது. இந்தக் காமா கேமரா, திசுக்களில் உள்ள செல்களைப் படம் பிடிக்கின்றன. பின், இந்தப் படங்கள் முப்பரிமாண படங்களாக மாற்றப்பட்டு நமக்குக் கிடைக்கிறது. இந்தப் படங்களில், புற்றுநோய் பாதிப்பு உள்ள இடங்களில் நெருப்பு இருப்பது போன்று காட்டும். இதனை ஹாட்ஸ்பாட் என்று குறிப்பிடுகிறோம். புற்றுநோய் பாதிப்பிற்கு உரிய சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு, மீண்டும் Pet ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், அந்தச் செல்கள், சாதாரண செல்கள் போன்று தோற்றமளிக்கும். இது புற்றுநோய் பாதிப்பு நீங்கிவிட்டதை உணர்த்துகிறது.

புற்றுநோய் பாதிப்பு இருப்பின் அதனைக் கண்டறியவும், பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு, அது குணம் அடைந்ததா என்பதைக் கண்டறிய Pet ஸ்கேன் சோதனை, மருத்துவ வல்லுநர்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.