• Home/
  • PET CT/
  • செர்விகல் கேன்சர் பாதிப்பா- எடுங்க PET ஸ்கேன்!
A female doctor holding a uterus model explaining about cervical cancer to woman sitting in front of her.

செர்விகல் கேன்சர் பாதிப்பா- எடுங்க PET ஸ்கேன்!

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும், அதிக அளவிலான பெண்களின் மரணங்களுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு 3 மாதங்கள் கழிந்தபிறகு, மேற்கொண்ட சிகிச்சைப் பலன் அளிக்கிறதா என்பதைக் கண்டறியவும், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வருமா என்பதை முன்கூட்டி கணிப்பதற்கும், FDG-PET ஸ்கேன் சோதனைப் பேருதவிப் புரிகிறது.

படங்களை அடிப்படையாகக் கொண்ட கதிர்வீச்சு சிகிசைப் பரவலாகத் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள செல்கள், கதிர்வீச்சால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதன் மூலமே, பாதிக்கப்பட்ட பகுதிகளைத் துல்லியமாக வரையறுக்க முடியும். இந்தச் சோதனையின் போது, கூடுதல் கதிர்வீச்சை எந்த இடத்தில் செலுத்த வேண்டும், எந்த இடத்தில் குறைவாகச் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை, FDG-PET ஸ்கேன் நமக்கு வழங்குகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3 மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக நிவாரணம் அடைந்து விட்டனரா அல்லது அவர்களுக்கு மேலும் ஏதாவது சிகிச்சைத் தேவைப்படுகிறதா என்பதை, முழு உடல் சார்ந்த PET ஸ்கேன் சோதனையின் மூலம் அறியலாம்.

PET ஸ்கேன் உள்ளிட்ட நோய் கண்டறிதல் சோதனைகள் இல்லாத பட்சத்தில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பாதிப்பில் இருந்து விடுபட்டு விட்டாரா என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் கடினமானந் நிகழ்வாக மாறிவிடும். சாதாரண பெல்விக் சோதனைகளால். சிறிய அளவிலான கட்டிகளை எளிதில் கண்டறிய முடியாது. அதேபோன்று, கால்களில் வீக்கம் உள்ளிட்ட மற்ற அறிகுறிகளும், புற்றுநோய் கட்டி பெரிய அளவினதாக ஆகும் போதே வெளிப்படும். CT மற்றும் MRI ஸ்கேன்களினாலும், சாதாரண மற்றும் புற்றுநோய் கட்டிகளை எளிதில் வேறுபடுத்திக் காட்ட இயலாது.

மேலும் வாசிக்க : பயாப்ஸி சோதனையைவிட PET ஸ்கேன் சிறந்ததா?

Pap சோதனைகளில், கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவதால், திசுக்களில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரத்த பரிசோதனைகளின் மூலம், கர்ப்பப்பைப் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய இயலாது.

சாதாரண செல்களைவிட, புற்றுநோய் பாதிப்பு செல்களில் அதிகளவு குளுக்கோஸ் படிந்து இருக்கும். இதன்மூலம், புற்றுநோய் பாதிப்பு செல்களை எளிதாகக் கண்டறியலாம். FDG-PET ஸ்கேன் சோதனையில், சாதாரண செல்களைவிட, புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்கள், மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை முடிந்தபிறகு, PET ஸ்கேன்சோதனையை மேற்கொண்டால், சிகிச்சை எந்த அளவிற்குப் பயன் அளித்திருக்கிறது என்பதையும், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பின், எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை, மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதற்கு மாற்று, புற்றுநோய் பாதிப்பு கட்டிகளை, அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றுவதே ஆகும். கீமோதெரபி உள்ளிட்ட சோதனைகள், தற்போது வரைச் சோதனை முயற்சியிலேயே உள்ளன.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, 3 மாத அளவிலான சிகிச்சை முடிந்தபிறகு, PET ஸ்கேன் சோதனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில், சிகிச்சையின் பலன் மதிப்பிடப்படுவதோடு மட்டுமல்லாது, பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருக்குமா என்பதை அறியவும், இருப்பின் அதற்கேற்ப புதிய சிகிச்சைகளை வகுக்கப் பெரும் உதவியாக உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.