பயாப்ஸி சோதனையைவிட PET ஸ்கேன் சிறந்ததா?
இன்றைய நவீனமயமான மருத்துவ உலகில், புற்றுநோய்ப் பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிப்பது என்பது, சவாலான நிகழ்வாக மாறி உள்ளது. புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய பல்வேறு விதமான சோதனைகளைப் புழக்கத்தில் உள்ள போதிலும், PET ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை என்று அறியப்படும் பயாப்ஸி சோதனைகளே, பெரும்பாலானோரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
PET ஸ்கேன்
கதிரியக்கத்தைப் பயன்படுத்தி, நமது உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் படம் எடுக்கும் முறையே, PET ஸ்கேன் சோதனை முறை ஆகும். இந்த ஸ்கேன் படங்கள், புற்றுநோய் பாதிப்பு இருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்ளலாம்.
திசுப்பரிசோதனை அல்லது பயாப்ஸி
புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய உதவும் முக்கிய சோதனையாக, பயாப்ஸி சோதனை விளங்குகிறது. இந்தச் சோதனையில், உடலில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு, நுண்ணோக்கியில் வைத்து பரிசோதிக்கப்படுகிறது. PET ஸ்கேன் சோதனையை ஒப்பிடும் போது, இதில் அதிக ஊடுருவல் திறன் உள்ளதால், புற்றுநோய் பாதிப்பை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.
இவ்விரு சோதனைகளும் தன்னகத்தே நிறைகள் மற்றும் குறைகளைக் கொண்டு உள்ளதால், என்ன வகையான புற்றுநோய் பாதிப்பு என்பதைப் பொறுத்து, மருத்துவர் எந்தச் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்.
சாதகங்கள் மற்றும் பாதகங்கள்
PET ஸ்கேன்
மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிவதில், PET ஸ்கேன் பேருதவி புரிகிறது. PET ஸ்கேன் சோதனையில், கதிரியக்கப் பொருள், ரேடியோடிரேசராக, உடலினுள் செலுத்தப்படுகிறது. இது ரத்த ஓட்டத்துடன் கலந்து, உடல் முழுவதும் பயணிக்கிறது. இந்தக் கதிரியக்கப் பொருள் புற்றுநோய் பாதிப்பு செல்களில் அதிகளவில் ஒட்டிக் கொள்கின்றன. ஸ்கேனரில், இத்தகைய பகுதிகள் தெளிவாகப் படம்பிடிக்கப்படுகின்றன. பின், இந்தப் படங்கள், கணினியின் உதவி கொண்டு முப்பரிமாண படங்களாக மாற்றப்படுகின்றன. இதன்மூலம், புற்றுநோய் பாதிப்பு துல்லியமாகக் கண்டறியப்படுகிறது.
PET ஸ்கேன் சோதனைகள் மேற்கொள்ள அதிகப் பணம் செலவாகும்.மேலும் இந்தச் சோதனைக்கான கட்டணத்தை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், இந்தச் சோதனை, மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவுவதோடு மட்டுமல்லாது, சிகிச்சைக்குப் பிந்தையப் பாதிப்பின் தன்மையையும் அறிய உதவுகிறது. PET ஸ்கேன் சோதனையில், எவ்வித அறுவைச் சிகிச்சைகளும், மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படுவது இல்லை.
புற்றுநோய் கண்டறிதலில், பயாப்ஸி சோதனையைவிட, PET ஸ்கேன் சிறந்த முறையாக உள்ளது. புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளான சிறிய கட்டிகளைக் கூட, PET ஸ்கேன் கண்டறியும் திறன் பெற்றது. வலி மற்றும் அசவுகரியம், இந்தச் சோதனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயாப்ஸி சோதனை
பயாப்ஸி எனப்படும் திசுப்பரிசோதனையில், சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, உடலின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து சிறிய அளவிலான திசுக்கள் எடுக்கப்படுகின்றன. இந்தச் சோதனையில், திசுக்களை எடுக்கும் பொருட்டு, ஊசிகள், கத்திகள் போன்ற கூர்மையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சர்ஜரிக்குப் பிறகு, அதன் தடயங்கள் உடலில் இருக்கும். சிறு காயங்கள், புண்கள் உள்ளிட்டவைகள் கூட உருவாக வாய்ப்பு உள்ளது.
குறைந்த அளவே செலவாகும், மேலும் இந்தக் கட்டணத்தின் பெரும்பகுதியையும், இன்சூரன்ஸ் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. PET ஸ்கேன் சோதனையை ஒப்பிடும் போது, மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் திறன் குறைவே ஆகும்.
மேலும் வாசிக்க : மார்பகப் புற்றுநோய் கண்டறிதலில் PET-CT ஸ்கேனின் பங்கு
எந்தச் சோதனைப் பரிந்துரை?
புற்றுநோய் பாதிப்பைப் பொறுத்து, நோயாளிகளுக்கு எத்தகைய சோதனையைச் செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்கின்றனர்.
நுரையீரல், மூளை, குடல் மற்றும் நிணநீர் முனைப்பகுதிகளில் உருவாகும் புற்றுநோய் பாதிப்பிற்கு, மருத்துவர்கள், PET ஸ்கேன் சோதனை முறையைப் பரிந்துரைக்கின்றனர்.
எளிதில் திசுக்களை எடுக்கும் வண்ணம், புராஸ்டேட், தோல் மற்றும் செர்விகல் பகுதிகளில் உருவாகும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு, பயாப்ஸி சோதனைப் பரிந்துரைக்கப்படுகிறது.
PET ஸ்கேன் மற்றும் பயாப்ஸி சோதனைகளைத் தவிர்த்து, சில தருணங்களில், அல்ட்ரா சவுண்ட் சோதனையும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் நிகழ்வு என்பது ஒன்றும் எளிதான விசயம் அல்ல. பாதிப்பைச் சரியான நேரத்தில் கண்டறிந்தால் மட்டுமே, அதற்கு உரிய சிகிச்சைகள் மேற்கொண்டு, அதன் பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற முடியும்.
PET ஸ்கேன் சோதனை முறை, புற்றுநோய்க் கட்டிகள் அமைந்து உள்ள இடம் மற்றும அதன் பரவல் குறித்து துல்லியமாக அடையாளம் காண உதவுவதால், புற்றூநோய் கண்டறிய பல்வேறு சோதனைகள் இருந்தாலும், அதில் மிகச்சிறந்தது PET ஸ்கேன் முறைத் தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.