MRI vs X-Ray : கொரோனா பாதிப்பைக் கண்டறிய எது சிறந்தது?
பல்வேறு வகையான நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், அதற்குரிய சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், மருத்துவ நிபுணர்கள், காந்த அதிர்வு இமேஜிங் (MRI ) ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே சோதனை முறைகளையே பெரிதும் நம்பி உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் மட்டும், பாதிப்பின் துல்லியத் தன்மையை அறிய, மேலும் பல சோதனைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
MRI ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே சோதனை இவ்விரண்டும், உடலின் திசுக்கள் மற்றும் மற்ற அமைப்புகளைப் படம் பிடிக்க உதவுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இருந்தபோதிலும், இவ்விரு சோதனைகளுக்கிடையே பயன்பாடுகள், நன்மைகள் எனப் பல்வேறு விவகாரங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்…
MRI ஸ்கேன்
MRI ஸ்கேன் சோதனையில் வலிமையான காந்தம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உதவியுடன், உடலின் பல்வேறு பகுதிகளை நீள் வாக்கிலோ, குறுக்குவெட்டுத் தோற்றத்திலோ அல்லது பல்வேறு அளவுகளிலோ படம் எடுக்க முடியும்.
MRI ஸ்கேன் சோதனையின் போது, உருளை வடிவ மேடையில், ஸ்கேன் எடுக்க வேண்டிய நபர்ப் படுக்க வைக்கப்படுவார். கிட்டத்தட்ட 30 நிமிடம் கால அளவிலான இந்தச் சோதனையின் முடிவில், உடலின் உள் உறுப்புகள் மற்றும் திசுக்கள் குறித்த தெளிவான படங்கள் நமக்குக் கிடைக்கும். ஸ்கேன் மெஷினின் இயக்கத்தை, நிபுணர், மற்றொரு அறையிலிருந்து இயக்குவார்.
பயன்கள்
பக்கவாதம், கட்டிகள், மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை அறிய
மூளைப்பகுதியில் ஸ்கேன்
நரம்புகள்
தசைகள்
தசை நார்கள்’
தசை நாண்கள்
வட்டுகள், தண்டுவடம்
உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய முதுகெலும்பு பகுதியில் ஸ்கேன்
இதுபோன்ற பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய மருத்துவர் MRI ஸ்கேன் சோதனை முறையைப் பரிந்துரைச் செய்வார்.
எக்ஸ்ரே சோதனை
அயனியாக்கும் கதிரியக்கத்தின் உதவி கொண்டு தட்டையான படத்தை, எக்ஸ்ரே சோதனை வழங்குகிறது. வெவ்வேறு கோணங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் வேண்டுமென்றால், எக்ஸ்ரே மெஷினை, தேவைப்படும் கோணங்களுக்குத் திருப்பிக் கொள்ளலாம்.
எக்ஸ்ரே சோதனையின் போது, எந்தப் பகுதியில் படம் எடுக்க வேண்டுமோ, அந்தப் பகுதிக்கு நேராக, எக்ஸ்ரே மெஷினை வைத்து, அதிலிருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி படம் எடுக்கப்படுகிறது.
பயன்கள்
எலும்பு முறிவு அல்லது அசாதாரண மாற்றங்கள்
உடலில் ஏதேனும் அந்நியப் பொருட்கள் இருத்தல்
நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிகள் காணப்படுதல்
நிமோனியா போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களைக் கண்டறிதல்
பற்சிதைவு போன்ற பற்கள் சார்ந்த பிரச்சினைகள்
திசுக்களில் கால்சியம்படிவு நிகழ்வு
இதயம் செயலிழப்பு
சிறுநீரகக் கற்கள் பாதிப்பு
குடலில் ஏற்படும் பாதிப்புகள்
ஆர்த்ரைட்டிஸ்
இதுமட்டுமல்லாது, புற்றுநோய் சிகிச்சைமுறையின் ஒருபகுதியான, கதிரியக்கச் சிகிச்சையில், புற்றுநோய் செல்களில் உள்ள DNA சிதைந்து போயிருப்பின், அதனைக் கண்டறியவும் எக்ஸ்ரே சோதனைப் பயன்படுத்தப்படுகிறது.
படங்கள் ரீதியிலான வேறுபாடு
MRI ஸ்கேன் சோதனையை ஒப்பிடும் போது, எக்ஸ்ரே சோதனையின் படங்கள் விரைவில் கிடைக்கும் வகையில் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவுகின்றன.
மூளை உள்ளிட்ட உடலின் பாகங்கள் மற்றும் திசுக்களைத் தெளிவாகப் படம் எடுக்க, MRI ஸ்கேன் உதவுகிறது.
சாதகங்கள்
MRI ஸ்கேன்
MRI ஸ்கேன் சோதனை, உடலின் உள் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பல்வேறு கோணங்களில் படம் பிடிப்பதால், அதன் தெளிவான மற்றும் துல்லிய படம், பாதிப்பு குறித்து மருத்துவரை, தீர்க்கமான முடிவு எடுக்க உதவுகிறது.
நாட்பட்ட நோய்களுக்கு, தொடர்ந்து எக்ஸ்ரே சோதனை மேற்கொள்வதைக் காட்டிலும், MRI ஸ்கேன் சோதனைச் சிறந்தபலன் அளிக்கிறது. ஏனெனில், இந்தச் சோதனையில், கதிரியக்க அபாயம் இல்லை.
எக்ஸ்ரே சோதனை
எக்ஸ்ரே சோதனையை 5 முதல் 10 நிமிடங்கள் கால அளவில் முடித்து விடலாம் என்பதால், அதன் படங்கள் விரைவில் மருத்துவரின் கைகளுக்குச் செல்வதுடன், என்ன பாதிப்பு என்பதையும், குறுகிய கால அளவிலேயே தெரிந்து கொள்ளலாம்.
MRI ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கோ அல்லது அதற்கென உள்ள ஸ்கேன் மையத்திற்கோ செல்ல வேண்டும். ஆனால், பல் மருத்துவர்கள் மற்றும் அவசரகாலச் சிகிச்சை மையங்கள், எக்ஸ்ரே சோதனையின் மூலம் உடனடியாகப் பாதிப்பைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை உடனடியாகத் துவக்கி விடுகின்றனர்.
பாதகங்கள்
MRI ஸ்கேன்
- சோதனையின் போது அதீதச் சத்தம்
- சிறிய இடம் என்பதால், பய உணர்வு ஏற்படும் அபாயம்
- உடற்பருமன் கொண்டவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தவல்ல அமைப்பு
- மெட்டல் பிளேட், மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், பயன்படுத்த இயலாத நிலை
- அதிகக் கட்டணம்
- நீண்ட கால அளவு
- இந்தச் சோதனையில் உடலினுள் செலுத்தப்படும் சாயம், சில சமயங்களில் ஒவ்வாமைப் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.
எக்ஸ்ரே சோதனை
தொடர்ச்சியாக எக்ஸ்ரே சோதனைகளுக்கு, குறிப்பாகக் குழந்தைகள் உட்படுத்தப்பட்டால்,கதிரியக்கப் பாதிப்பு அபாயம்
MRI ஸ்கேன் சோதனைகளோடு ஒப்பிடும் போது, அதிக மற்றும் விரைவான தகவல்கள் இதில் இல்லை
கர்ப்ப காலத்தின் போது, பெண்களின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் எக்ஸ்ரே சோதனை மேற்கொள்வது, அந்தளவிற்குப் பாதுகாப்பானது அல்ல.
கட்டணம் அடிப்படையிலான வேறுபாடு
எந்தவொரு சோதனை என்றாலும், அதன் சோதனைக் கட்டணம், உங்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு, அதற்குக் காப்பீடு நிறுவனங்கள் அளிக்கும் சதவீதம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து மாறுபடும்.
MRI ஸ்கேன்
MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ளச் சராசரியாக, இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரைச் செலவாகும்
சோதனையின் கால அளவு, மேற்கொள்ளும் நபர், சோதனை நடைபெறும் இடம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து, கட்டணம் மாறுபடலாம்.
மேலும் வாசிக்க : MRI ஸ்கேன் – எந்தெந்த நோய்களைக் கண்டறிய முடியும்?
எக்ஸ்ரே சோதனை
வழக்கமான எக்ஸ்ரே சோதனைகளை மேற்கொள்ளச் சராசரியாக, இந்திய ரூபாய் மதிப்பில் 8 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையிலும், சிறப்புத்தன்மை வாய்ந்த எக்ஸ்ரே சோதனைகளுக்கு, ரூ. 10 லட்சம் வரைச் செலவு ஆகலாம்.
கொரோனா பாதிப்பைக் கண்டறிய இயலுமா?
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய கொரோனா பாதிப்பைக் கண்டறிய பாலிமரேஸ் செயின் ரியாக்சன் எனப்படும் PCR சோதனையே பயன்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பிற்குக் காரணமான சார்ஸ் CoV-2 வைரஸ் இருப்பதை உறுதி செய்ய, ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு இமேஜிங் சோதனைகளை ஆராய்ந்தனர்.
2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கையின்படி, எக்ஸ்ரே சோதனை, கொரோனா பாதிப்பைக் கண்டறிய உதவியபோதிலும், அதன் துல்லிய தன்மையைப் பிரதிபலிக்க இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எக்ஸ்ரே சோதனையை, கணினி தொழில்நுட்பத்துடன் இணைத்து உருவாக்கப்பட்டதே, CT ஸ்கேன் சோதனை ஆகும். இந்த CT ஸ்கேன் உதவியுடன், கொரோனா பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிய முடிந்தது குறிப்பிடத்தக்கது.