MRI பரிசோதனையைப் பற்றி எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
1. MRI என்றால் என்ன? அது எவ்வாறு வேலைச் செய்கிறது?
MRI என்பது Magnetic Resonance Imaging (காந்த அதிர்வுப் படம்) என்பதன் சுருக்கம். ஒரு MRI பரிசோதனைக் கதிரியக்க வல்லுனர் எந்திரக் கருவிகள் அல்லது அயனியாக்கும் கதிர்வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் உடலின் சில பகுதிகளில் உள்ள குறுக்கு வெட்டுத் தோற்றங்களின் விரிவான படங்களைப் பார்க்க முடியும். MRI பரிசோதனை வலுவான காந்தப்புலம், ரேடியோ அலைவரிசைகள் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மனித உடற்கூறியல் மற்றும் அசாதாரணமான பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றைப் பற்றிய தெளிவான படங்களை உருவாக்க உதவுகிறது. மற்ற பரிசோதனை முறைகளை விட MRI பரிசோதனை முறையில் கிடைக்கும் படங்களில் உடற்கூறியல் விவரங்களின் தெளிவாக இருக்கின்றன.
2. யார் வேண்டுமானாலும் MRI பரிசோதனைச் செய்ய இயலுமா?
பெரும்பாலான நோயாளிகளால் MRI பரிசோதனைச் செய்ய முடியும். இருப்பினும், MRI பரிசோதனை வலுவான காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பரிசோதனைச் செய்பவரிடம் ஏற்கனவே இதய முடுக்கி (cardiac
pacemaker) இருந்தால் அவர் MRI பரிசோதனைச் செய்யக் கூடாது. ஏனெனில் MRI பரிசோதனையின் போது வெளிப்படும் காந்தபுலத்தால் இதய முடுக்கியின் சில பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும், இதனால் கருவி செயலிழக்க நேரிடலாம்.
வேறு சில காரணங்கள்:
அனீரிஸ்ம் கிளிப்புகள்:
இவை இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ள பகுதியைச் சுற்றி அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ள உலோகக் கிளிப்கள் ஆகும். சில அனீரிஸ்ம் கிளிப்புகள் MRI பரிசோதனையின் போது பாதுகாப்பானவை, ஆனால் சில கிளிப்புகள் பாதுகாப்பானவை என்று உத்தரவாதம் தர முடியாது . அறுவைச் சிகிச்சைச் செய்து கிளிப்புகளைப் பொருத்திய நிபுணரிடம் இது MRI பரிசோதனைக்குப் பாதுகாப்பானது தான் என்பதை உறுதி செய்த பின்னர், பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
MRI பரிசோதனையைப் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு முன் ஆராயப்பட வேண்டிய பிற நிபந்தனைகள்:
- நரம்பு சீரமைப்புக் கருவி
- உலோக இதய வால்வுகள்
- உலோக உள்வைப்புகள்
- மருந்து செலுத்தும் கருவி
- காது உள்வைப்புகள்
- கீழ் மைய பெருநாடி வடிகட்டி (Inferior Vena Cava filter)
- கண்களில் உலோகப் பொருள்கள்
- அறுவைசிகிச்சை ஸ்டேபிள்ஸ் (Staples) அல்லது தையல் நூல்கள்
- எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை
- உலோகத் தகடுகள், தண்டுகள், ஊசிகள் அல்லது திருகுகள்
- ஆண்குறி உள்வைப்புகள்
- ஷ்ராப்னல்
- கர்ப்பம்
- வாஸ்குலர்ச் சுருள்கள் மற்றும் வடிகட்டிகள்
மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று பரிசோதனைச் செய்பவருக்குப் பொருத்தி இருந்தால், மருத்துவ மையத்தில் உள்ள ஊழியர்களிடம் முன்கூட்டியே தெளிவாகக் கூறிவிட வேண்டும். முன்பதிவைத் திட்டமிடும் முன்னர் மையத்தின் நிர்வாக ஊழியர்கள் சில கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். அப்பொழுது ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் அதனைத் தெரியப்படுத்தி விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். MRI பரிசோதனையைப் பரிந்துரைச் செய்த மருத்துவர், MRI பரிசோதனைப் பரிசோதனைச் செய்பவருக்குப் பாதுகாப்பானதா என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இருப்பவர் ஆதலால், அவரிடமும் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில், MRI பரிசோதனை ஊழியர்கள் முடிவு செய்த பின்னரே பரிசோதனைச் செய்து கொள்ள முடியும். MRI மையத்திற்கு வந்ததும், மைய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி மேலே உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய MRI பாதுகாப்புப் பாரம் ஒன்றைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்பார்கள். MRI பரிசோதனை அறைக்குள் பரிசோதனைச் செய்பவருடன் உறுதுணையாகச் செல்பவருக்கும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருவார்கள். அவர்களும் முதலில் இந்தப் பாதுகாப்புப் பாரத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டியது இருக்கும்.
3. MRI பரிசோதனைக்கு ஒருவர்த் தன்னைத் தயார்படுத்த என்ன செய்ய வேண்டும்?
MRI பரிசோதனைச் செய்து கொள்வது பரிசோதனைச் செய்பவருக்குப் பாதுகாப்பானது தான் என்பதை உறுதிப்படுத்துவது முதல் படியாகும். அவருக்கு அந்த விபரங்கள் தெரியாவிட்டால், தனது மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
MRI பரிசோதனைக்குத் தயாராவது எளிது தான், மருத்துவர்ச் சொல்லும்வரை, வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவு மற்றும் பானங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
MRI பரிசோதனைக்கான ஒரே ஒரு அசாதாரண முன்னேற்பாடு என்னவென்றால், உங்களிடமுள்ள உலோகப் பொருட்களைப் பரிசோதனை அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. உதாரணமாக நகைகள், சாவிகள், கடிகாரங்கள், நாணயங்கள், கண்கண்ணாடிகள், நீக்கக்கூடிய செவிப்புலன் கருவிகள், செயற்கைப் பற்கள் மற்றும் செயற்கைச் சாதனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கடன் அட்டைகளை (Credit cards) MRI காந்தத்திற்கு அருகில் கொண்டு வரக்கூடாது. அவைக் காந்த ரீதியாகக் குறியிடப்பட்டிருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்த MRI இன் காந்தம் அட்டைகளில் சேமிக்கப்பட்ட தகவல்களை எளிதில் சிதைத்துவிடும்.
4. MRI பரிசோதனைக் காயத்தை ஏற்படுத்துமா? பரிசோதனைச் செய்பவருக்கு வலி போன்ற வித்தியாசமான உணர்வுகள் ஏற்படுமா?
MRI பரிசோதனைச் செய்வதால் எந்த வலியும் ஏற்படாது. கடந்த கால MRI பரிசோதனை மையங்களைப் போலல்லாமல், தற்போதைய மையம் வசதியானது மற்றும் கிளாஸ்ட்ரோபோபிக் அல்லாதது. அவை ‘டன்னல்’ MRI பரிசோதனைகளை விட மிகவும் அமைதியானவை, இருப்பினும் பரிசோதனைச் செய்யும் போது அவைச் சில சத்தத்தை உருவாக்கும்.
5. சில MRI பரிசோதனை மையங்களில் கிளாஸ்ட்ரோபோபிக் எதிர்வினைகளைத் தூண்டுவதாகக் கேள்விப்பட்டது உண்டு. அது உண்மையா?
தற்போதுள்ள அனைத்துப் பரிசோதனைகளும் நோயாளிகளின் வசதிற்கேற்ப முழுமையாகத் திறந்திருக்கும் மற்றும் உள்ளே செல்லும் சுரங்கங்கள் அல்லது குழாய்கள் இல்லை. மேலும் கிளாஸ்ட்ரோபோபிக் அல்லாதவை. பரிசோதனைச் செய்யும் போது தொலைக்காட்சியைக் கூட பார்க்கலாம். கிளாஸ்ட்ரோபோபிக் பரிசோதனைச் செய்வதில் மைய ஊழியர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களாக இருக்கின்றனர், மேலும் அவர்கள் நிம்மதியாகப் பரிசோதனைச் செய்து கொள்ளத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
6.சுரங்கப்பாதைப் பரிசோதனை மையத்தைப் போலவே திறந்த பரிசோதனை மையமும் சிறந்ததா?
திறந்த பரிசோதனை மையம் அவற்றின் திறந்த வெளி காரணமாகக் குறைந்த டெஸ்லா சக்தியைக் கொண்டுள்ளன. இதன் பொருள், பரிசோதனை எப்பொழுதும் உறுதியானதாகவோ அல்லது பாரம்பரிய சுரங்கப்பாதைப் பரிசோதனைப் போன்று விரிவானதாகவோ இருக்காது, இவைத் துல்லியமாகப் பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்டறியக்கூடியவை.
7. திறந்த பரிசோதனை மையத்தில் பரிசோதனைச் செய்ய எவ்வளவு செலவாகும்?
ஒருவர் முன்பதிவு செய்யும் முன்பே பரிசோதனைக்குச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பதை மைய ஊழியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், சில சமயங்களில் அவர்களே இது பற்றித் தெளிவாகக் கூறுவார்கள்.
பரிசோதனை மையத்தின் இருப்பிடம் மற்றும் பரிசோதனைச் செய்யப்பட வேண்டிய உடல் உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். முன்பதிவு செய்ததும், நோயினைக் கண்டறிந்து, அதற்கான பொருத்தமான சிகிச்சையை விரைவாகப் பெறலாம். நோயினைக் கண்டறிதலும் கட்டணத்தில் சேர்க்கப்படும். பரிசோதனை முடிந்ததும் பரிசோதனை மையத்தின் சிறந்த கதிரியக்க ஆலோசகரால் அறிக்கைத் தயாரிக்கப்பட்டு, பரிசோதனைச் செய்யப் பரிந்துரைச் செய்த மருத்துவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
8. MRI பரிசோதனையின் செலவை ஒருவரது காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெற முடியுமா?
MRI பரிசோதனைக்கு முன்பதிவு செய்வதற்கு முன்பே, காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்கள் பரிசோதனைக்கான செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்களா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பரிசோதனைக்கான செலவை ஈடுகட்ட ஒப்புக்கொண்டால், MRI மையத்திற்கு வரும் போது, காப்பீட்டு நிறுவனம் தந்த அங்கீகார விவரங்களை MRI பரிசோதனை மைய ஊழியர்களிடம் வழங்க வேண்டும். சுயப் பரிந்துரையின் செலவைக் காப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
9. ஒருவர்த் தன்னுடைய முன்பதிவை ரத்து செய்தால் என்ன ஆகும்?
ஒருவர்த் தன்னுடைய முன்பதிவை ரத்து செய்தால், பரிசோதனை மையம், அவரின் பரிசோதனைக்கென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அவரிடம் வசூலிக்கலாம்.
10. MRI பரிசோதனைக்கு மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் தேவையா?
ஒருவர் மருத்துவரின் பரிந்துரை மூலம் தான் பரிந்துரைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. MRI மையத்தின் இணையத்தில் தரபட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் MRI பரிசோதனைச் செய்யத் தங்களைத் தாங்களே எளிதாகப் பரிந்துரைக்கலாம். அவர்ப் பரிசோதனைச் செய்ய வேண்டிய காரணம், பரிசோதனைச் செய்ய விரும்பும் உடலின் பாகம் மற்றும் சில பாதுகாப்புக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். பரிசோதனைச் செய்பவரின் விபரம் கிடைத்த உடன், மைய ஊழியர்கள் அதனை மதிப்பாய்வு செய்து, முன்பதிவு செய்யப் பரிசோதனைச் செய்பவரைத் தொடர்பு கொள்வார்கள்.
மேலும் வாசிக்க : CT ஸ்கேன் VS MRI ஸ்கேன் – வேறுபாடுகள் என்ன?
11. MRI பரிசோதனையின் போது என்ன நிகழும்?
மருத்துவர்ப் பரிந்துரைச் செய்த பரிசோதனை வகையைப் பொறுத்து, கதிர்ப்படப்பதிவாளர்ப் பரிசோதனைச் செய்யப்பட வேண்டிய உடலின் பகுதியைச் சுற்றி ஒரு “பேட்” அல்லது “சுருள்” வைப்பார். இது படங்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, தலையைப் பரிசோதனைச் செய்து கொண்டிருந்தால், சிறந்த படங்கள் பெறப்படுவதை உறுதி செய்வதற்காகத் தலை ஒரு சிறப்பு ஹெட் சப்போர்ட் அல்லது சுருளில் ஓய்வெடுக்கும்.
பரிசோதனைச் செய்பவருக்கு எந்த வித சிரமமும் இல்லையெனில், கதிர்ப்படப்பதிவாளர்ப் பரிசோதனைச் செய்யத் தொடங்குவார்.
பரிசோதனைத் தொடங்கியதும், படம் தெளிவாகப் பதிவாக, செயல்முறை முடிவடையும் வரை, ஒரு சாதாரண புகைப்படத்தில் இருப்பது போல் முற்றிலும் அமைதியாக இருக்க வேண்டும். அசையாமல் உட்கார வேண்டியதன் காரணம், பரிசோதனைச் செய்பவரின் சிறு அசைவும் கூட MRI படங்களை மங்கலாக்கும். மருத்துவர்ப் பரிசோதனைச் செய்யப் பரிந்துரைச் செய்த உடலின் பகுதியைப் பொறுத்து, செயல்முறை முடிய 30 முதல் 120 நிமிடங்கள் வரை ஆகும். இந்தச் செயல்முறைப் பல்வேறு காட்சிகளால் ஆனது, ஒவ்வொரு காட்சியும் எடுக்கச் சில நிமிடங்கள் ஆகும். கதிர்ப்படப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியும் எடுக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் கூறுவார். மேலும் பரிசோதனைக்கு உள்ளானவர் ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் நகர்த்தப்படுவார். ஆனால் அதை அவர் உணர மாட்டார். பரிசோதனையின் போது இடையிடையே சிறு சிறு ஒலி கேட்பது இயல்பானது தான். தேவைப்பட்டால் காது அடைப்பானைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பரிசோதனைச் செய்யும் போது தேவைப்பட்டால் ஊழியர்களுடன் ஒலிவாங்கி (microphone)யின் மூலம் பேச முடியும். பரிசோதனைச் செய்யும் அறையில் துணைக்கு ஒருவரைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளலாம்.
12. MRI பரிசோதனைச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
இது உடலின் எந்தப் பகுதியைப் பரிசோதனைச் செய்ய வேண்டும் மற்றும் மருத்துவர் ஏதேனும் சிறப்பு அல்லது கூடுதல் பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டாரா இல்லையா என்பதைப் பொறுத்தும் நேரம் மாறுபடும். பொதுவாக, உடலின் ஒரு பகுதியைப் பரிசோதனைச் செய்து முடிக்க 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும்.
13. ஒருவர்த் தனது குழந்தைகளைப் பரிசோனையின் போது உடன் அழைத்து வர முடியுமா?
குழந்தைகளை அழைத்து வர வேண்டிய சூழ்நிலையில் குழந்தைகளைக் கண்காணிக்கக்கூடிய பெரியவர் ஒருவரும் உடன் வர வேண்டும். ஏனெனில் மைய ஊழியர்களால் குழந்தைகளைக் கண்காணிக்க இயலாது.
14. பரிசோதனை முடிந்ததும் ஒருவரால் வாகனம் ஓட்ட முடியுமா?
வாகனம் ஓட்ட முடியும், MRI பரிசோதனையால் உடலியல் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது, சோர்வும் ஏற்படாது. ஆனால், சில நேரங்களில் மயக்க மருந்து எடுத்திருந்தால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
15. MRI பரிசோதனைச் செய்தவர் ஊசிப் போட்டுக் கொள்ளலாமா?
சில சூழ்நிலைகளில், பரிசோதனைச் செய்யப்படுபவரின் உடலின் நோயினைச் சரியாகக் கண்டறிய, ஒரு கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்டைச் செலுத்த வேண்டியிருக்கலாம். பரிசோதனை மையத்தின் கதிரியக்க ஆலோசகர் அந்த முடிவை எடுப்பார். மேலும் பரிசோதனைக்கு முன் அது பற்றிய விபரங்கள் தெரியப்படுத்தப்படும். தோராயமாக 5 முதல் 10 சதவிகித நோயாளிகளுக்குக் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முந்தைய அறுவைசிகிச்சைச் செயல்முறையின் வடு திசுக்களைக் கொண்ட பகுதிகளின் MRI பரிசோதனைப் பெரும்பாலும் ஒரு கான்ட்ராஸ்ட் ஏஜெண்டின் உதவியுடன் சிறப்பாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் கைக்குள் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது, மேலும் இந்தச் செயல்முறை ஒரு தகுதி வாய்ந்த சுகாதார நிபுணரால் செய்யப்படுகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் தேவைப்பட்டால், அதன் பக்க விளைவுகள் பற்றி அவருக்கு முழுமையாகத் தெரியப்படுத்தப்படும்.
16. கர்ப்பிணிகள் MRI செய்வது சரியா?
கர்ப்பிணிகள் MRI பரிசோதனைச் செய்ய முடியாது. ஒருவேளைக் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், பரிசோதனை மையத்திற்குச் செல்வதற்கு முன் கர்ப்பப் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும்.
17. MRI பரிசோதனைச் செய்பவருடன் துணைக்கு ஒருவர் உடன் இருக்கலாமா?
MRI பரிசோதனைச் செய்யும் கருவி திறந்திருப்பதால், பரிசோதனைச் செய்யும் அறைக்குள் ஒருவர் இருக்கலாம். துணைக்கு இருப்பவர்க் காந்தபுலம் தாக்காதவாறு தக்கப் பாதுகாப்புடன் இருக்க அனுமதிப்பர்.
18. பரிசோதனை முடிவுகளை எப்பொழுது அறிந்து கொள்ள முடியும்?
பரிசோதனையின் போது உடலியல்புகளை அறிந்து கொள்ள முடியாது. MRI பரிசோதனை முடிவுகள் பொதுவாக 48 மணி நேரத்திற்குள் நேரடியாக மருத்துவருக்கு அனுப்பப்படும். மருத்துவர் அவற்றை விளக்கிக் கூறுவார். கதிர்ப்படப்பதிவாளர் MRI பரிசோதனை முடிவுகளை விளக்குவதற்குத் தகுதியற்றவர்கள், எனவே அவர்களிடம் கருத்துகளைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.