ஏன் முழு உடல் MRI பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?
முழு உடல் MRI பரிசோதனை என்றால் என்ன? ஏன் இப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்? மேலும் இது எப்படி உடல் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த உதவும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்தப் பதிவில் தெளிவாகக் காணலாம்.
முழு உடல் MRI பரிசோதனை என்றால் என்ன?
முழு உடல் MRI என்பது புற்றுநோய் மற்றும் பிற நோய்களைக் கண்டறியும் உயர்த் துல்லிய தொழில்நுட்பமாகும். இந்தப் பரிசோதனைச் செய்து கொள்வதன் மூலம், நோய் அறிகுறிகளை உணர்வதற்கு முன்பே, நோயறிதலைக் கண்டறிந்து சிறந்த சிகிச்சையைத் தேர்வு செய்து கொள்ள முடியும். இது நோய்த்தடுப்புக்கான சிறந்த முதல் படியாகும்.
MRI என்றால் என்ன?
MRI அல்லது காந்த அதிர்வுப் படம் என்பது உடல் கட்டமைப்புகள் மற்றும் உறுப்புகளின் விரிவான 3-D படங்களை உருவாக்கச் சக்திவாய்ந்த காந்தங்கள் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் சோதனை ஆகும். உடலின் மென்மையான திசுக்களில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறிய கதிரியக்க வல்லுநர்கள் இந்தப் படங்களை ஆய்வு செய்கின்றனர்.
முழு உடல் MRI பரிசோதனையில் என்ன உறுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன?
முழு உடல் MRI பரிசோதனை என்பது 13 உறுப்புகளின் படங்களை உள்ளடக்கிய முழு உடல் MRI திரையிடல் ஆகும். MRI பரிசோதனைச் செய்யக்கூடிய உடலின் பல்வேறு பாகங்கள்:
- மூளை
- முதுகெலும்பு
- தைராய்டு
- நுரையீரல்
- கல்லீரல்
- பித்தப்பை
- கணையம்
- மண்ணீரல்
- சிறுநீரகம்
- அட்ரீனல் சுரப்பிகள்
- சிறுநீர்ப்பை
- சூலகம்
- கருப்பை
- ஆண்மைச் சுரப்பி
முழு உடல் MRI பரிசோதனை என்ன கண்டறிய உதவுகிறது?
ஒரு முழு உடல் MRI பரிசோதனை மூலம் உடல் உறுப்புகளில் உள்ள நீர்க்கட்டிகள் மற்றும் திசுக்களில் உள்ள கட்டிகள் போன்ற புண்களைக் கண்டறிய முடியும். இது இரத்தப்போக்கு, வீக்கம், தொற்றுகள் மற்றும் அழற்சி நிலைகள் போன்ற மென்மையான திசுக்களில் உருவாகும் அசாதாரணங்களைச் சுட்டிக்காட்டும்.
மார்பகப் புற்றுநோய், ஆண்மைச் சுரப்பி புற்றுநோய் மற்றும் சில வகையான நுரையீரல் புற்றுநோய்களால் அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்குப் புற்றுநோய் பரிசோதனைக்காக மருத்துவர்கள் பெரும்பாலும் MRI பரிசோதனையைப் பரிந்துரைக்கின்றனர். MRI போன்ற மேம்பட்ட பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி, நோயினைக் கண்டறிய முடிவதால், ஆரம்ப கட்டங்களிலே புற்றுநோயைக் கண்டறியும் வாய்ப்பு அதிகம். இதனால் புற்றுநோய் இறப்பு விகிதம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கதிரியக்க வல்லுநர்களால் MRI பரிசோதனையைப் பயன்படுத்தி, ஒரு அசாதாரணமானது புற்றுநோயா அல்லது இல்லையா என்பதையும், மெட்டாஸ்டேஸஸின் (உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும் புற்றுநோய்) அறிகுறிகளையும் கண்டறிந்து கூற முடியும். கதிரியக்க ஆய்வுகள், பயாப்ஸி, அறுவைச் சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைப் போன்றவற்றின் பின்தொடர்ச் செயல்முறைகளைத் திட்டமிடும்போது MRI படங்கள் உதவும்.
யார் முழு உடல் MRI பரிசோதனைச் செய்ய வேண்டும்?
முழு உடல் MRI புற்றுநோய் பரிசோதனை அனைத்துப் பெரியவர்களுக்கும் தங்கள் உடல்நலத்தைக் கட்டுப்படுத்த உதவும். புற்றுநோய் சிகிச்சையானது கடுமையானது என்பதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே வழக்கமாகச் செய்யும் புற்றுநோய் பரிசோதனைச் செய்திருந்தால், ஆரம்பகாலங்களிலே நோயினைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது நலமளிக்கும் என்று புற்றுநோய் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக, நுரையீரல் புற்றுநோயினால் ஆபத்தில் இருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும் வழக்கமான MRI பரிசோதனைகளை அமெரிக்கத் தடுப்புச் சேவைப் பணிக்குழு பரிந்துரைக்கிறது. அவர்கள் மேலும் பெண்கள் மார்பகம், கருப்பை, சூலகம், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைச் செய்ய வேண்டும் என்றும், ஆண்கள் பெருங்குடல், மலக்குடல் மற்றும் ஆண்மைச் சுரப்பி புற்றுநோய்களுக்கான பரிசோதனைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
முழு உடல் MRI பரிசோதனைக்குத் தயாராவது எப்படி?
நேர்மறையான MRI அனுபவத்திற்குக் கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:
- பரிசோதனைச் செய்யப்போகும் நாளில், ஏற்கனவே எடுத்துக் கொண்டிருந்த அனைத்து மருந்துகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
- பரிசோதனைக்கு முன்பு அதிக அளவு தண்ணீர், தேநீர் அல்லது பிற திரவங்களைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.
- MRI ஸ்கேனர்கள் வலுவான காந்தப்புலத்தைப் பயன்படுத்துவதால், உலோகப் பொருள்களையும் மின்னணு சாதனங்களையும் பரிசோதனை அறைக்குள் கொண்டு வரக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் வாசிக்க : காண்ட்ராஸ்டுடன் MRI பரிசோதனைச் செய்யும் முன் ஏன் உணவு உண்ண கூடாது?
முழு உடல் MRI பரிசோதனையின்போது என்ன நிகழும்?
பரிசோதனை அறைக்குள் வந்ததும், குஷன் செய்யப்பட்ட படுக்கையில் சரியான முறையில் பரிசோதனைச் செய்பவரைப் படுக்க வைப்பார்கள். பரிசோதனைக்குத் தயாரானதும் படுக்கை ஸ்கேனரில் சரியும். கடந்த கால நீண்ட இருண்ட சுரங்கங்களை விட இது ஒரு மாபெரும் டோனட் போன்றது.
பரிசோதனையின் போது, ஏதேனும் பயம் இருந்தால் அதைப் பற்றித் தெளிவாகத் தொழில்நுட்ப நிபுணரிடம் தெரிவிக்க வேண்டும். பரிசோதனை அறைக்கு அருகில் உள்ள அறையில் கதிரியக்க நிபுணர்க் கண்காணித்துக் கொண்டிருப்பார், அவர்ப் பரிசோதனைச் செய்பவரிடம் ஒலிவாங்கியின் மூலம் ஆழ்ந்த மூச்சை எடுக்கச் சொல்லியும் அல்லது படுத்திருக்கும் நிலையை மாற்றும்படியும் கேட்பார். பரிசோதனையின் போது மிகுந்த சத்தம் கேட்கும். பரிசோதனைச் செய்பவர் வசதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதை உறுதிசெய்ய, மைய ஊழியர்கள் அவருக்கு இயர்ப் பிளக்குகளை வழங்குவார்கள்.