Vector image of two hands, one holding a test tube with DNA mentioned on it and the otherone holding a cotton swab.

ஊட்டச்சத்துகள் உறிஞ்சுதலில் மரபியல் காரணிகளின் பங்கு

மனிதர்களாகிய நாம் அனைவரும் தனித்துவம் நிறைந்த ஜீன் தொகுப்பைத் தன்னகத்தே கொண்டு உள்ளோம் என்பதை யாராலும் மறந்துவிடவோ, மறுக்கவோ இயலாது.வானிலை உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்து சில ஜீன்களின் பண்புகள் மட்டும் வெளிப்படுகின்றன. இது தனிநபரின் புறத்தோற்றம், உடற்தகுதி, உடல் எடை இழப்பு, நோய் வாய்ப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைகின்றது.

மரபியல் மற்றும் ஊட்டச்சத்து இடையேயான தொடர்பு

ஊட்டச்சத்துத் தொடர்பான நடவடிக்கைகளுக்கும், மரபியலுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளதை நீங்கள் அறிவீர்களா?

உதாரணமாக, லாக்டோஸ் ஏற்புத்திறன் அற்ற நபர்களால், பால் பொருட்களில் உள்ள லாக்டோஸை எளிய சர்க்கரையாக மாற்ற முடியாது.இது லாக்டோஸ் மரபணுவில் ஏற்பட்ட மாறுபாட்டின் விளைவாக, சிறுகுடலில், லாக்டேஸின் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி ஆகாததன் காரணமாகவே, இந்தக் குறைபாடு ஏற்பட்டு உள்ளது. லாக்டோஸ் ஏற்புத்திறன் அற்ற நபர்களால், இயற்கையிலேயே அதிகச் சத்துக்கள் கொண்ட, எளிமையான பால் பொருட்களைக் கூட சுவைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

நாம் நம் தாயின் கருப்பையில் இருக்கும்போது, அப்போது பெறப்படும் ஊட்டச்சத்தானது, மரபணுக்களை மட்டுமல்லாது அதன் பண்புகளையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இதனால் நோய்ப்பாதிப்புகள் எளிதில் ஏற்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட நபரின் மரபணு விபரங்களுக்கும், அவரின் ஊட்டச்சத்து நடவடிக்கைகளும் தொடர்பு உள்ளதை, ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவு வல்லுநர்களும் கண்டறிந்து உள்ளனர். DNA சோதனை நிகழ்வு, இந்த விவகாரத்தில், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது.

கீழ்க்கண்டக் காரணிகளால், நமது உடலில் உள்ள ஜீன்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன..

ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகள்

உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு நிகழ்வுகள்

உயிரியல் கடிகாரம்

உணவுக் கூறுகள்

இத்தகைய காரணிகளால் ஜீன்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிந்துள்ளோம். அதன் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, நாம் சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளோம்.நமக்கு லாக்டோஸ் ஏற்புத்திறன் இல்லாதபட்சத்தில், பால் மற்றும் பால் சார்ந்தப் பொருட்களைத் தவிர்த்து விடுகின்றோம். இது உண்மையிலேயே, லாக்டோஸ் ஏற்புத்திறன் இன்மையா அல்லது, புரதப் பொருட்களின் மீதான ஒவ்வாமையா என்பதைக் கவனிக்கத் தவறி விடுகின்றோம்.

Two hands holding puzzle blocks containing images of nutritious food showing nutrients solving a puzzle.

ஊட்டச்சத்து மரபியல் சோதனை

ஊட்டச்சத்து மரபியல் சோதனை, நமது உடலில் உள்ள ஜீன்களின் விபரங்கள் குறித்து முழுவதுமாகப் புரிந்து கொள்ள உதவுவதோடு, உடலின் ஆரோக்கியக் குறைபாட்டிற்குக் காரணமான உணவுமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு, நலமாக வாழ வழிவகைச் செய்கிறது.

இந்தச் சோதனை யாருக்கெல்லாம் பொருந்தும்?

இந்தச் சோதனையை, அனைவரும் மேற்கொள்ளலாம்.

உடலின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை மேம்படுத்த DNA அடிப்படையிலான உணவுமுறையைப் பயன்படுத்த விழைபவர்கள்

விளையாட்டுகளில் சிறந்து விளங்கவும், அதற்கேற்றவாறு உடலைப் பேணிக்காக்க ஊட்டச்சத்துச் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளும் வீரர்கள்

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள்

இவர்களுக்கு, இந்தச் சோதனை, இனிய வரப்பிரசாதமாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

இத்தகைய மரபணுச் சார்ந்தச் சோதனைகள் அனைத்தும் வெவ்வேறு தனித்தன்மைகள் கொண்டவைகள் ஆகும். ஒரு சோதனையின் மூலம் தீர்மானிக்கப்பட்ட உணவுமுறையானது, மற்றவருக்கும் பலன் தரும் என்று உறுதியாகக் கூற இயலாது.

உடற்பருமன்

ஒவ்வொரு நபருக்கும் அவர்களிடையே உள்ள மரபணு மாறுபாடுகளின் காரணமாக, அவர்களின் உணவுமுறை வேறுபடுகிறது. ஊட்டச்சத்து மரபியலின் ஒரு பிரிவு படிப்பான நியூட்ரிஜீனோமிக்ஸ், அந்தக் குறிப்பிட்ட நபரின் உடற்பருமனுக்குக் காரணமான உணவுமுறையைக்கும், அவரின் மரபணுக்களுக்கு இடையிலான தொடர்பை ஆராய்கின்றது. இதன்மூலம், உடற்பருமனைத் தடுக்கும் வகையிலான உணவுமுறைகளை வடிவமைக்க இது உதவுகிறது.

வயது மூப்பைத் தடுக்கிறது

சரியான அளவிலான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுமுறையைப் பின்பற்றாத காரணங்களினாலும், புறஊதாக் கதிர்களின் அதீதத் தாக்குதல், மாசுபாடு உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளாலும் இளம் வயதிலேயே, முதிர்ச்சியான தோற்றம் சிலருக்கு அமைகின்றது.

இவர்களின் மரபணு விபரங்களை ஆராய்ந்து, அதற்கேற்ற வகையிலான சரியான கலவையிலான உணவுமுறையைப் பரிந்துரைத்து, வயதுமூப்புப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

இதயப் பிரச்சினைகள்

ஒரு குறிப்பிட்ட நபரின் உணவுமுறைகள் மற்றும் உட்கொள்ளல்களை மேம்படுத்துவதன் மூலம், அவர்களின் வளர்சிதை மாற்றங்கள் சீராக்கப்பட்டு, இதயப் பிரச்சினைகளில் இருந்து அந்நபரைக் காக்க இயலும். இந்த உணவுமுறைத் திட்டமிடலுக்கு, நியூட்ரிஜீனோமிக்ஸ் பேருதவி புரிகிறது.

உடற்திறன்

விளையாட்டு வீரர்கள் வெற்றிப் பெற அவர்களுக்கு , உடற்திறன், உடல் சகிப்புத்தன்மை உள்ளிட்டவை இன்றியமையாததாக உள்ளன. ஊட்டச்சத்து மரபியல்ச் சோதனையை, அவர்களிடையே மேற்கொண்டு, உடல் கட்டுக்போப்புடன், சகிப்புத்தன்மையையும் வளர்க்கவல்ல, உணவுமுறையை அடையாளம் கண்டு, அவர்களாகவே மேம்படுத்திக் கொள்ள உதவும்.

ஊட்டச்சத்து மரபியல் சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

மனிதச் செல்களின் உட்கருவைக் கொண்டு, இந்த மரபியல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது நமது உடலின் கன்னம் பகுதியிலிருந்து மாதிரியைச் சேகரிக்கின்றது. இந்த நடைமுறை, வலியற்ற நிகழ்வு ஆகும்.

இந்த மாதிரியில் இருந்து DNA பிரித்து எடுக்கப்பட்டு, அது பல்கிப் பெருகப்பட்டு, பின் அவை வரிசைப்படுத்தப்பட்டு, நோயாளிக்குப் புரியும் வகையில் தொகுக்கப்படுகின்றன.

பின்னர் ஆராய்ச்சியாளர்கள், இதில் உள்ள ஜீன்கள் அல்லது ஜீனோம் தொகுப்பைப் பகுப்பாய்வு செய்கின்றனர். இதன் மூலம் நோயாளிக்கு எத்தகைய உணவுமுறை தேவைப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கின்றனர்.

இந்தச் சோதனை, உடல் எடைக் குறைப்பு, உடற்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து முயற்சி செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

மேலும் வாசிக்க : மேமோகிராம் சோதனை – அறிந்ததும்… அறியாததும்!!!

DNA சோதனையின் நோக்கங்கள்

DNA சோதனை, ஒருவரின் உடலில் உள்ள மரபணுக்களின் உருவாக்கம் மற்றும் இதில் எந்த மரபணுக்களின் பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிய உதவுகிறது.

குறிப்பிட்ட நபருக்கு, எந்த வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுமுறைத் தேவை என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

உடற்பருமன், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.