மீல் பிளானர் என்றால் என்ன – முக்கியத்துவம் அறிவோமா?
ஆரோக்கியமான உணவுமுறை அனைவருக்கும் கிடைக்கும் நோக்கிலும், சைவ உணவின் மகத்துவத்தை அனைவரும் அறியும் வகையிலும் உருவாக்கப்பட்டதே, மீல் பிளானர் நடைமுறை ஆகும். சைவ உணவு முறையால் ஆற்றல், செரிமானம், நேர்மறை எண்ணம், உணர்திறன் போன்ற நற்பண்புகள் மேம்படுகின்றன.இத்தகைய சிறப்புவாய்ந்த சைவ உணவு முறையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் பொருட்டு, இதை, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நவீனமயமாக்கி உள்ளனர்.
வாராந்திர உணவுத் திட்டம் ஊட்டச்சத்து இலக்குகளைக் கண்காணிக்கவும், சமையல் நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது.
உணவு தயாரிக்கும் நிகழ்வை பிளானர் செயலி எளிமைப்படுத்துகிறது. இச்செயலி மூலம் சில உணவுகளை முன்கூட்டியே தயாரிப்பதால், உங்கள் நேரம் மிச்சமாகிறது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்த உணவுத் திட்டமிடல் முக்கியப் பங்காற்றுகிறது.
மீல் பிளானர்கள் செயல்படும் விதம்
மீல் பிளானர்கள், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கக்கூடியதாக உள்ளன.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த மீல் பிளானர்கள், தங்களது இணையப் பயனர்களுக்காக, வாராந்திர உணவுப் பட்டியலைத் தயாரிக்க, பல்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுடனான தரவுகள், தனிப்பட்ட ஆரோக்கியம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டு உள்ளன.
தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையிலான ஒவ்வொரு ஊட்டச்சத்து அளவிலும், பல்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்யவல்ல உணவு மெனுக்களை உருவாக்குவதில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த மீல் பிளானர்கள், திறம்பட செயலாற்றி வருகின்றனர். இது ஊட்டச்சத்துக் கூறுகளின் சராசரி நிகழ்வுகளின் மதிப்பீட்டைக் கையாள உதவுகிறது.
செயலியின் பயன்பாட்டு அம்சங்கள்
இந்த மீல் பிளானர்ச் செயலியின் பயன்களைப் பெற, இத்தகைய நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.
செயலியைப் பயன்படுத்த விழைபவர், அதற்குரிய சுயவிவரத்தை உருவாக்கிக் கொள்ளவும்.
பயனர் விரும்பும் வகையிலான சமையல் குறிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்
உங்களின் விருப்பங்களின் அடிப்படையில், உங்களுக்கான உணவு வகைகள், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இது உங்களது வாராந்திர உணவைத் திட்டமிடுவதன் மூலம், பொன்னான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஒவ்வொரு உணவிலும் உள்ள கலோரி அளவைக் கண்காணிக்கவும், விரிவான ஊட்டச்சத்து அறிக்கைத் திட்டமிடவும் உதவுகிறது.
மிகப்பிரபலமான இந்திய மீல் பிளானர்ச் செயலிகள்
Spoonshot
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்தச் செயலி, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களின் அடிப்படையிலான சமையல் குறிப்புகளைப் பரிந்துரைச் செய்கின்றது. மக்களின் ரசனைகளைப் புரிந்து கொள்வதோடு, அதைக் கணிப்பதற்கு, மெஷின் லேர்னிங் முறையைப் பயன்படுத்துகிறது. இந்தச் செயலி, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முக்கியப் பங்காற்றுகிறது.
RecepiBook
இந்தச் செயலி, தனது வாடிக்கையாளர்களுக்கான சிறந்த மற்றும் சரியான உணவு வகைகளை, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பரிந்துரைச் செய்கின்றது. வாடிக்கையாளரின் நடவடிக்கைகளைக் கண்காணித்துதேவைகளை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப தன்னிச்சையாகவே செயல்பட்டு, சரியான நேரத்தில், அதற்கேற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது.
Ria செயலி
Ria செயலியை, HealthifyMe செயலி என்றும் அழைக்கலாம். இந்தச் செயலியின் மூலம் ஊட்டச்சத்து மற்றும் உடற்தகுதி குறித்த கேள்விகளை எழுத்து மற்றும் ஒலி வாயிலாகவே, கேட்டுத் தெளிவு பெறலாம். இந்தச் செயலி, வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப 10 மொழிகளில், உணவுமுறைக் குறித்த விவரங்களை வழங்குகிறது.
Gulpie
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்தச் செயலி, வாடிக்கையாளரின் உணவு, சுவை, விருப்பம் உள்ளிட்டவைகளின் அடிப்படையிலான உணவகத்தைத் தேர்ந்து எடுக்கவும் மற்றும் அதை மதிப்பிடவும் உதவுகிறது.
Nymble
தினந்தோறும் புதிய உணவு வகைகளைச் சமைப்பதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமாக வாழ, இந்தச் செயலிப் பேருதவி புரிகிறது.
மேலும் வாசிக்க : மரபியல் அடிப்படையிலான தனிப்பட்ட உணவுத்திட்டங்கள்
சாம்சங் நிறுவனத்தின் Food செயலி
இந்தச் செயலி, 1,60,000 உணவு வகைகளுடன் 8 மொழிகளில் 104 நாடுகளில், இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் செயல்படுவது, இந்தச் செயலியின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இந்தத் துறையில் சிறந்து விளங்கிய, Whisk செயலியை, 2019ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் தன்வசமாக்கிக் கொண்டது. இந்தச் செயலி, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து கொள்ளவும், அதற்கேற்ற வகையிலான உணவு வகைகளைப் பரிந்துரைக்கவும், செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடுகின்றது.
செயற்கை நுண்ணறிவின் உதவிகொண்டு, கேமராவின் மூலம் உணவுப் பொருட்களை அடையாளம் கண்டு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்த தகவல்களை வழங்க உள்ளது. இந்தச் செயலி, தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் வெர்சன்களிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மீல் பிளானர்ச் செயலிகள், உணவு விசயத்தில், உங்களை ஆரோக்கியமாக இருக்கச் செய்வதுடன், உங்களது பொன்னான நேரத்தையும், அதிகளவில் மிச்சப்படுத்தவும் உதவுகிறது.