உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஒரு முழு அணுகுமுறை
சர்வதேச அளவில் பல மில்லியன் மக்கள் ஹைபர்டென்சனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்த பாதிப்பு நிலையானது, இதய நோய்ப்பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகள் ஏற்பட வழிவகுப்பதாக உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி, உடல் எடையைச் சரியான அளவிற்கு நிர்வகித்தல், புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், காஃபின் பயன்பாட்டைக் குறைத்தல், மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுதல், தினசரி இரவு போதிய உறக்கம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள், உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் திறம்பட நிர்வகிப்பதில் பேருதவி புரிகின்றன.
இந்த மாற்றங்களை, தங்கள் வாழ்க்கைமுறையில் அமல்படுத்த பெரும்பாலான மக்களுக்குக் கடும் சவாலான நிகழ்வாகவே உள்ளது. இன்றைய நவீனப் போட்டி உலகில் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமே சாத்தியம்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பு
உயர் ரத்த அழுத்தம் என்றழைக்கப்படும் ஹைபர்டென்சன் என்பது தமனிகளின் சுவர்களில், ரத்தம் இயல்பைவிட அதிக அழுத்தம் செலுத்தும் வகையிலான சுகாதார நிலை என்று குறிப்பிடப்படுகிறது. உலகச் சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டிற்குள் சர்வதேச அளவில் உயர் ரத்த அழுத்தம் கொண்ட மக்கள் 1.57 பில்லியனைத் தொடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதிப்பிற்கு என்று தனிப்பட்டதொரு அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. இதன்காரணமாக, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை, இந்தப் பாதிப்பைத் திறம்பட நிர்வகிப்பதற்கான முதல்படியாக உள்ளது.
சர்வதேச அளவில் 30 முதல் 79 வயது வரையிலான 1.28 பில்லியன் அளவிலான மக்கள், உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர்டென்சன் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள், இந்தப் பாதிப்பிற்கு உட்பட்டு உள்ளதால், இது சர்வதேச அளவிலான பாதிப்பாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதிப்பிற்கு உரிய சிகிச்சை முறை உள்ளது என்றபோதிலும், வாழ்க்கைமுறைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் மூலமாகவே, இந்தப் பாதிப்பின் தீவிரத்தைத் தடுக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் வாசிக்க : வீட்டு ரத்த மாதிரி சேகரிப்பின் நன்மைகள் அறிவோமா?
உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிக்க உதவும் உத்திகள்
அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்
நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளின் பட்டியலை உருவாக்கி, அதன்படி செயல்படக்கூடிய நடைமுறைகள், காலக்கெடு உள்ளிட்டவற்றை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். சரியான திட்டமிடுதல் நிகழ்வானது, தெளிவையும், ஈடுபாடு உணர்வையும் அதிகரிக்கிறது. இது நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் நிகழும் முன்னேற்றங்களைக் கண்காணிக்கவும், வெற்றியைக் கொண்டாடவும் உதவுகிறது.
படிப்படியாகச் செயல்படுத்துதல்
எதுவும் ஒரே நாளில் சாத்தியமில்லை என்பதை எந்தத் தருணத்திலும் மறந்துவிட வேண்டாம். அதேபோன்று ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்வதற்கும் கால அவகாசம் முக்கியத் தேவையாக உள்ளது. ஒரே இரவில் உங்கள் வாழ்க்கைமுறையை மாற்ற முயற்சி செய்வதற்குப் பதிலாக, சிறிய அளவிலான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவைகளை விரைவாக எட்ட முடியும். இதேபோன்று, சிறிய வகையிலான இலக்குகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, படிப்படியாக, வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.
செயல்முறையைத் துரிதப்படுத்தவும்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சலிப்பு உணர்வை ஏற்படுத்தாவண்ணம், சிறிய உற்சாகத்துடன் அமைத்துக் கொள்வது நல்லது. புதிய ஆரோக்கியமான புதிய சமையல் குறிப்புகளை முயற்சி செய்யும்போது, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தை அவ்வப்போது மாற்றி அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், இலக்கை நோக்கிய செயல்முறையை விரைவுபடுத்த இயலும்.
நிதானம் அவசியம்
உணவு வகைகளை நிதானமாக ரசித்து, ருசித்துச் சாப்பிடுவதன் மூலம், வெவ்வேறு உணவு வகைகள், எவ்வாறு நம் மனநிலை மாற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன என்பதைப் புரிந்து உணரும் வாய்ப்பு ஏற்படுகின்றன. எனவே, உணவு வகைகளை அமைதியான முறையிலும்,கவனமாகச் சாப்பிட பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
அதேபோன்று, உடற்பயிற்சி மேற்கொள்ளும்போதும், மனதை அலைபாய விடாமல், உடல் உணர்வுகள், இயக்கங்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதில் போதிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.
நிகழ்வுகளைக் கொண்டாட வேண்டும்
நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பின்னடைவுகள், சறுக்கல்கள் என எது வந்தாலும், அது முயற்சியின் ஒருபகுதி தான் என்பதை உணர்ந்து, எதிர்மறை உணர்வை விட்டு, முன்னேற்றத்தில் மட்டுமே போதிய கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பயணத்தில், நீங்கள் கடந்த தொலைவைக் கொண்டாடி மகிழ வேண்டும்.
தனிமையைத் தவிர்க்க வேண்டும்
ஒத்த எண்ணம் கொண்டவர்களை, அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். இலக்குகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக, உடற்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். அனுபவங்கள் மற்றும் உதவிக்குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், தோழமை உணர்வு மேம்படுவதுடன், நீங்கள் மேற்கொள்ளும் நிகழ்வை, விரைந்து முடிக்கவும் உதவுகிறது.
அறிவைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம்
உயர் ரத்த அழுத்த பாதிப்பு நிர்வாகம் தொடர்பான சமீபத்திய அறிவு கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும். இதுதொடர்பான கருத்துப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுங்கள். சரியான தேர்வுகளை உரிய நேரத்தில் தேர்வு செய்யும் பொருட்டு, சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…