Healthcare professional drawing a blood sample from a patient to assess their overall health and monitor medical conditions.

வீட்டு ரத்த மாதிரி சேகரிப்பின் நன்மைகள் அறிவோமா?

சர்வதேச அளவில் கொரோனா பெருந்தொற்றுத் தொடங்கியது முதல், ஏராளமான நோயாளிகள், சோதனை ஆய்வகங்களுக்குச் செல்வதையே முற்றிலுமாகத் தவிர்த்து விடுகின்றனர். இதற்குக் காரணம், இது பல பிரிவினருக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அடங்குவர். எனவே பல நோயறிதல் மையங்கள் மற்றும் மருத்துவப் பராமரிப்பு வழங்குநர்கள் வீட்டில் என்னென்ன மருத்துவச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை மதிப்பீடு செய்வது உள்ளிட்ட சுகாதார அமைப்பில் மாற்றங்களைத் துரிதப்படுத்தி உள்ளனர்.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பீடு மேற்கொள்வதற்கும், சில வகை நோய்ப்பாதிப்புகள் மற்றும் மருத்துவ நிலைமைகளைக் கண்காணிப்பதற்கும், மருத்துவ நிபுணரின் பரிந்துரையின்படி, சோதனை ஆய்வகங்கள், நோய்க் கண்டறிதல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில், ரத்த பரிசோதனைகள் தவறாமல் மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்லைன் முறையில் பதிவு மேற்கொண்டு, ரத்த மாதிரி சேகரிப்பை முன்பதிவு செய்து கொள்வது புதிய நடைமுறை இல்லை என்றபோதிலும், தொற்றுநோய்ப் பாதிப்பிற்கு, மருத்துவமனைக்கு வெளியே சோதனையை மேற்கொள்வது என்பது, நோயாளிக்குக் குறிப்பிடத்தக்க அளவிலான உந்துதலை வழங்குவதாக உள்ளது.

வீட்டிலேயே ஆய்வகச் சோதனை நடைமுறை எளிதானது மற்றும் சாதகமானது என்றபோதிலும், நிலையான ஆய்வகம் மற்றும் மருத்துவ நிபுணரின் வருகையின் துல்லியம் குறித்து மைய பிரச்சினை வெளிப்படுகிறது. இதுதவிர, வீட்டிலேயே என்ன எதிர்பார்க்கலாம் என்பது மற்றொரு முதன்மைக் கவலையாக உள்ளது. இந்தக் கட்டுரையில், அதுகுறித்து விரிவாகக் காண்போம்.

நீங்கள் வீட்டிலேயே ரத்த பரிசோதனையை மேற்கொள்ள, ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, தகுதிவாய்ந்த ஆய்வக உதவியாளர்களின் குழுவானது, திட்டமிட்ட நேரத்தில், உங்கள் வீட்டிற்கு வருகைதரும். ஆய்வகத்தில் உங்கள் ரத்த மாதிரி பகுப்பாய்வு செய்யப்படும் வரை, அது நீர்த்துப்போவதைத் தடுக்கும் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு, ரத்த மாதிரியைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான உபகரணங்களை, அவர்களே கொண்டு வருவார்கள். இரத்த மாதிரிகளின் முழுமையைப் பாதுகாக்க, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி, பகுப்பாய்வுச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வீட்டிலேயே ரத்த பரிசோதனை மேற்கொள்வதை, எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்?

இரத்த பரிசோதனைகள், நோய்ப்பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக,ஆண்டிற்கு ஒருமுறை மேற்கொள்வதை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது தனிநபர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், நோய்ப்பாதிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், உடலில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் உதவுகிறது.

பிரபலமான சோதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன..

முழுமையான ரத்த எண்ணிக்கைச் சோதனை (CBC)

இது நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மதிப்பீடு செய்வதற்கும், ரத்தசோகை, நோய்த்தொற்றுப் பாதிப்புகள் மற்றும் நோய்ப்பாதிப்புகள் மற்றும் அவைகளின் நிலைகளை அடையாளம் கண்டறிய, ரத்தத்தில் உள்ள செல்களை அளவீடு செய்கிறது.

Blood test tube labeled 'Lipid Profile - Test' on a medical form, used to assess coronary disease risk and cholesterol levels.

லிப்பிட் சுயவிவரச் சோதனை

கரோனரி நோய்ப்பாதிப்பின் ஆபத்தை மதிப்பிடுவதற்கும், கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகளின் அளவை மதிப்பிடுவதற்கும், இந்தச் சோதனை உதவுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் சோதனை

நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கண்டறிவதில், இந்தச் சோதனை முக்கியப்பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு நோய்ப்பாதிப்பின் முதன்மை அறிகுறியான ரத்தத்தில் அசாதாரண சர்க்கரையின் அளவைக் கணக்கிட உதவுகிறது. நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கு முந்தைய நிலையை மதிப்பீடு செய்வதற்கும், நீரிழிவு நோய்ப்பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு, அதைத் திறம்பட நிர்வகிக்கவும், வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகள், சிறந்த தேர்வாக அமைகின்றன.

மேலும் வாசிக்க : ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய எந்தச் சோதனைச் சிறந்தது?

வீட்டிலேயே இரத்த பரிசோதனைகளின் முடிவுகளின் துல்லியத் தன்மை

வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகளின் போது, ரத்த மாதிரியானது மாசுபட அதிக வாய்ப்பு உள்ளதாகப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், தற்போதைய நிலையில், இந்தச் சந்தேகம் தேவையற்றது ஆகும். ஏனெனில், தொழில்நுட்பங்கள் மேம்பட்டு உள்ள நிலையில், ரத்த மாதிரி சேகரிப்பு நுட்பங்களும் அபரிமிதமான வளர்ச்சி பெற்று உள்ளன. வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகளின் போது, உலர்ந்த ரத்த புள்ளி சோதனை எனப்படும் சேகரிப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வகத் தொழில்நுட்ப நிபுணர்க் குழுவினர், தங்களுடன் கிருமி நீக்கம் செய்யப்பட்ட குடுவைகள் மற்றும் சேமிப்புக் குழாய்களைக் கொண்டு வருகின்றனர். இதில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரியானது, நீண்ட நாட்களுக்கு மாசுபடுவதில் இருந்து காக்கிறது. பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களின் குழுவினர், ரத்த மாதிரிகளைப் பாதுகாப்பதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், நோயாளிகள், சோதனை முடிவுகளின் நம்பகத்தன்மைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

சோதனை முடிவுகளின் தரங்களில் எவ்விதச் சமரசமும் செய்து கொள்ளாமல், எவ்விதப் பிழைகளும் இல்லாத சோதனையை உறுதி செய்யப் பாதுகாப்பான நுட்பங்கள் மற்றும் சிறிய அளவிலான மருத்துவ உபகரணங்கள் தற்போதைய நிலையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நபர்களின் உண்மையான உடல் ஆரோக்கியத்தைப் பகுப்பாய்வு செய்வதே, ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் பின்னணியில் உள்ள குறிக்கோள் ஆகும். வீட்டிலேயே, ரத்த பரிசோதனை மேற்கொள்ளும் நிகழ்வானது, அக்குறிப்பிட்ட நபருக்கு நோயை உருவாக்கும் பாதிப்பை நோக்கி கூடுதல் கவனம் செலுத்துகிறது. சரியான உணவுமுறையைப் பின்பற்றுதல், உடலின் செயல்பாடுகளை அதிகரித்தல், நோய்ப் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க இயலும். உங்கள் நல்வாழ்வை மேம்படுத்த, வீட்டிலேயே ரத்த பரிசோதனை மேற்கொள்வது என்பது உகந்த வழிமுறையாக உள்ளது.

வீட்டிலேயே ரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை மூலம், பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.