A woman sits alone on the couch, holding her head in her hands, overwhelmed by sadness and loneliness due to worry.

கவலை vs பீதி – வேறுபாடுகளை அறிவோமா?

இன்றைய பரபரப்பான மற்றும் வேகமான வாழ்க்கையில் குழப்பம், தீவிரப் பயம் உள்ளிட்டவைகளைச் சந்திப்பது வழக்கமான நடவடிக்கைகளாக உள்ளன. மன ஆரோக்கியத்தின் எல்லைக்குள் கவலை மற்றும் பீதி என்ற சொற்கள் தவறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன.

கவலைப் பாதிப்பு

கவலைப் பாதிப்பு என்பது நீண்டகால கவலை, பயம் மற்றும் சங்கடமான உணர்வுகளுடன் தொடர்புடையது.இது குறிப்பிட்ட அளவிலான அழுத்தங்கள் அல்லது சூழ்நிலைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. அமைதி இல்லாத நிலை, எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை, கவலைப் பாதிப்பின் அறிகுறிகளாக உள்ளன. கவலைப் பாதிப்புகள், குறைவான அளவிலான தீவிரம் கொண்டதாகவே உள்ளன.

உலக மக்கள்தொகையில் 4 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதாவது 375 மில்லியனுக்கும் மேற்பட்டோர், கவலைப் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கவலைப் பாதிப்பு இருக்கும்போது, பய உணர்வு, பதட்டம், மன அழுத்தமாக இருப்பதை உணரலாம், இதயத்துடிப்பு அதிகரித்துவிடும். உறங்குவதிலும், பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

கவலைப் பாதிப்பின் பிற அறிகுறிகளாவன

விரைவான சுவாசம் அல்லது ஹைபர்வெண்டிலேசன்

பீதி அல்லது பய உணர்வு

நடுக்க உணர்வு

வயிற்றுப்போக்கு, வாயு, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள்

அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி

தலைச்சுற்றல் உணர்வு உள்ளிட்டவைகள் ஆகும்.

தவிர்க்கும் வழிமுறைகள்

நீங்கள் அல்லது உங்களுக்குப் பிரியமானவர்க் கவலைப் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், அதைச் சமாளிக்க நீங்கள் மேற்கொள்ள வேண்டிய விசயங்கள்:

ஆழமான சுவாசப்பயிற்சியை மேற்கொள்ளவும். இந்த ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், மூளைக்குப் பிராணவாயுவின் பகிர்வை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாது, நரம்பு மண்டலத்தை அமைதியாக்குகின்றன.

சில எளிய நீட்டிப்பு பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் பாகங்களை, இலகுவாக்குகின்றன.

உங்கள் கவலைக்கான காரணத்தை எழுதி, அந்தப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுங்கள். இது உங்கள் கவலையைப் போக்க உதவும்.

வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவைகளின் பயன்பாடு, உங்களைக் கவலை உணர்வில் இருந்து கவனத்தைத் திசைத் திருப்ப வைக்கும்.

நாய் அல்லது பூனை வளர்த்துவந்தால், அதைச் சிறிது நேரம் தடவிக் கொடுங்கள். மனம் அமைதியாவதை நீங்களே உணரலாம்.

A woman leans against a brick wall, nervously biting her nails, overwhelmed by stress and fear about living a healthy life.

பீதி உணர்வு

பீதி உணர்வு என்பது திடீரென்று நிகழும், உங்களை மிகுந்த பயமுறுத்தும் நிகழ்வு ஆகும்.இந்த உணர்வானது, உங்களை வெகுவாகப் பலவீனப்படுத்துகின்றன. இந்தப் பீதி உணர்வானது, மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அறிகுறிகள்

அதிகரிக்கும் இதயத்துடிப்பின் வீதம்

அதிகமாக வியர்த்தல்

நடுக்க உணர்வு

மூச்சு விடுதலில் சிரமம்

மார்புப் பகுதியில் வலி அல்லது அசவுகரியம்

குமட்டல், வயிற்றுப்பகுதியில் அசவுகரியம்

உடல் சிலிர்த்துப் போதல்

தனிமை உணர்வு

நம்பிக்கை இழத்தல்

இறந்துவிடுவோம் என்ற பய உணர்வு உள்ளிட்டவை, பீதி உணர்வின் அறிகுறிகள் ஆகும்.

 

பீதி உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்

மரபியல் காரணிகள்

குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கவலை அல்லது பீதிப் பாதிப்பு இருந்தால், அந்தக் குடும்பத்தின் வழித்தோன்றல்களுக்கும் அதிகப் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மூளைக் கட்டமைப்பு

மூளையின் கட்டமைப்பில் ஏதாவது மாற்றங்கள் நிகழும்பட்சத்தில், பீதிப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மன அழுத்தம்

வாழ்க்கையில் நிகழும் அசாதாரண நிகழ்வுகள், வேலை இழப்பு, பிரியமானவர்களின் இழப்பு போன்றவற்றால் பீதிப் பாதிப்பு ஏற்படுகிறது.

மருத்துவ நிலைகள்

தைராய்டு பாதிப்புகள், இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, பீதிப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்

சிகிச்சை முறைகள்

மருந்துமுறைகள்

மன அழுத்தத்தைத் தடுக்கும் வகையிலான மருந்துகள், மனப்பதட்டத்தைத் தடுக்கும் மருந்துகள், பீட்டா தடுப்பான்கள் உள்ளிட்டவை, பீதிப் பாதிப்பின் மேலாண்மை நிகழ்வுகளுக்கு உதவுகின்றன.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT)

பீதி உணர்வைத் தூண்டும் வகையிலான சிந்தனைச் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளவும், தேவைகளுக்கு ஏற்ப, சிகிச்சைமுறைகளை மாற்றி அமைக்கவும் உதவுகிறது.

வெளிப்பாடு சிகிச்சை

இது பயந்த சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் படிப்படியாக வெளியேறுவதால், அதிகப்படியான கவலைகளைக் குறைக்க உதவுகிறது.

மேலும் வாசிக்க : ஸ்மார்ட்வாட்ச் vs ஃபிட்னெஸ் டிராக்கர் – எது சிறந்தது?

தளர்வு நுட்பங்கள்

ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தசைத் தளர்வு பயிற்சிகள், மனந்தெளிநிலை உள்ள்ளிட்டவை, பீதிப் பாதிப்பின் அறிகுறிகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்துகின்றன.

இதுமட்டுமல்லாது, சில இயற்கை நடைமுறைப் பயிற்சிகளும், பீதிப் பாதிப்பு நிவாரணத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

உடற்பயிற்சி பழக்கவழக்கம்

உடற்பயிற்சிப் பழக்கவழக்கமானது, மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, உடல் மற்றும் மன அமைதிக்கு உதவுகிறது.

ஆரோக்கியமான உணவுமுறை

ஆரோக்கியமான உணவுமுறையானது உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் சிறந்து விளங்க துணைபுரிகிறது.

போதிய அளவிலான உறக்கம்

போதிய அளவிலான உறக்கமானது, உங்களைப் பீதிப்பாதிப்புகளில் இருந்து காக்க உதவுகிறது.

தகுந்த வழிமுறைகளைக் கவனமாக, அதேசமயம் சிறந்தமுறையில் கையாண்டு பீதி மற்றும் கவலைப் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.