கீல்வாதம் – காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்
ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் கீல்வாத பாதிப்பானது, சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. மூட்டு வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வகைப்பாதிப்புகள், கீல்வாதம் என்று ஒரு பதத்தால் குறிக்கப்படுகின்றன. கீல்வாத பாதிப்பின் ஒவ்வொரு வகையின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அறிகுறிகளை, இங்கு புரிந்துகொள்வது அவசியம் ஆகும்.
உங்கள் மூட்டுகளில் அவ்வப்போது வலி உணர்வு ஏற்படுதல் அல்லது அசவுகரிய நிலைத் தோன்றினால், உடனடியாக அது என்ன வகைக் கீல்வாதம் என்று கண்டுபிடித்தால் மட்டுமே, அதற்குத் தகுந்த சிகிச்சை முறைகளை நாம் மேற்கொள்ள முடியும்.
ஆர்த்தரைட்டிஸ் அல்லது கீல்வாதம்
மூட்டுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களைப் பாதிக்கும் நிலையே, கீல்வாத பாதிப்பு ஆகும். வலி உணர்வு, லேசானது முதல் மிகக் கடுமையானதாக இருக்கலாம்.
கீல்வாத பாதிப்பானது அழற்சி மற்றும் அழற்சி இல்லாதது என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அழற்சி கீல்வாதம் – இது மூட்டுகளின் வீக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. வலி, வீக்கம், விறைப்பு நிலைக்கு வழிவகுக்கிறது.
அழற்சியற்ற கீல்வாதம் – இது வீக்கத்தை உள்ளடக்கியதில்லை. ஆனால், இன்னும் மூட்டு சேதம் மற்றும் வலியை உருவாக்குகின்றன.
கீல்வாத பாதிப்பின் வெவ்வேறு நிலைகள்
கீல்வாதம் (Osteoarthritis)
இது பொதுவான வகை ஆகும். சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்கள், இந்த வகைக் கீல்வாத பாதிப்பிற்கே உள்ளாகி உள்ளனர். இந்த வகைக் கீல்வாதம், மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பை மோசம் அடையச் செய்கிறது. இதன்விளைவாக வலி, விறைப்பு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
கீல்வாத பாதிப்பிற்கு எனத் தனியாக எவ்விதச் சிகிச்சைகளும் இல்லை. வலியைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே, சிகிச்சையின் குறிக்கோள் ஆகும். சரியான அளவில் உடல் எடையைப் பராமரித்தல், உடற்பயிற்சி, வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவைகளே, கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் வழிமுறையாகும்.
முடக்குவாதம் (Rheumatoid Arthritis)
முடக்குவாதம் என்பது, நாள்பட்ட தன்னுடல் தாக்க நோய்ப்பாதிப்பு ஆகும். இது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மூட்டு வலி, விறைப்பு, வீக்கம் உள்ளிட்டவை, இதன் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
சோர்வு, பசியின்மை, உடல் எடை இழப்பு உள்ளிட்ட விளைவுகளை, இப்பாதிப்பானது ஏற்படுத்துகிறது. இதற்கெனத் தனிப்பட்ட சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லை. மேற்கொள்ளப்படும் சிகிச்சைமுறையானது அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், மூட்டுகளுக்கும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
சொரியாடிக் கீல்வாதம் (Psoriatic Arthritis)
இது தடிப்புத் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கவல்ல அழற்சி
வகை மூட்டுவலி ஆகும். தடிப்புத் தோல் அழற்சி என்பது தடிமனான, சிகப்பு தோல் மற்றும் வெள்ளி செதில்களின் திட்டுகளை உருவாக்கும் நிலை ஆகும்.இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, மூட்டு வலி, விறைப்பு, வீக்கம் இருக்கும். சோர்வு, கண் பிரச்சினைகள், நகங்களில் மாற்றங்கள் உள்ளிட்ட விளைவுகள் தென்படும்.
Gout
இது பெருவிரலில் உள்ள மூட்டுகளைப் பாதிக்கும் வகையிலான கீல்வாத பாதிப்பு ஆகும். பியூரின்கள் அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவதன் மூலம், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. இதன்காரணமாக, இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
கடுமையான மூட்டு வலி, வீக்கம், சிவத்தல் உள்ளிட்டவை, இதன் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதிலும், அறிகுறிகளை நிவர்த்தி செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
கீல்வாதத்திற்கான காரணங்கள்
கீல்வாத பாதிப்பிற்கெனப் பல சாத்தியமான காரணங்கள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் மரபணு முன்கணிப்பு அல்லது தன்னுடல் தாக்கக் குறைபாடு காரணமாகவும் ஏற்படுகின்றன.
காயம் மற்றும் தொற்றுநோய்களின் விளைவாகவும் இது ஏற்படுகிறது
கீல்வாத பாதிப்பு என்பது உங்களைப் பலவீனப்படுத்தும் நிலையாக விளங்குவதோடு மட்டுமல்லாது, வாழ்க்கைத்தரத்தையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும் வகையினதாக உள்ளது.
நோய்க்கண்டறிதல்
கீல்வாத பாதிப்பைக் கண்டறிய, மருத்துவ நிபுணர், பாதிக்கப்பட்டவரின் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளை ஆய்வு செய்வார். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏதாவது வீக்கம், சேதம் உள்ளிட்ட மாற்றங்களைக் கண்டறிய, அதற்கான சோதனைகளுக்கு, மருத்துவர் உத்தரவிடுவார்.
இரத்த பரிசோதனைகள்
இரத்த பரிசோதனைகளின் முடிவில், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற அழற்சியின் அறிகுறிகள் தென்படுகின்றன.
எக்ஸ்-ரே சோதனை
எக்ஸ்-ரே போன்ற இமேஜிங் சோதனைகள், மூட்டுகளில் ஏற்பட்டு உள்ள சேதம், கீல்வாத பாதிப்பால் எலும்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.
மூட்டு திரவ பகுப்பாய்வு சோதனை
மூட்டுத் திரவத்தில் தென்படும் படிகங்கள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் காண்பதன் மூலம், கீல்வாத பாதிப்பானது உறுதி செய்யப்படுகிறது.
MRI அல்லது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
இவ்வகைச் சோதனைகள், மூட்டு, திசு மற்றும் குருத்தெலும்பு பகுதியில் ஏற்பட்டு உள்ள சேதங்களைக் கண்டறிய உதவுகிறது.
மேலும் வாசிக்க : ஹைபர்டென்சன் பாதிப்பிற்கு உப்பு தான் காரணமா?
சிகிச்சை முறைகள்
கீல்வாத பாதிப்பானது பல வகைகளாக வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்துவமான சிகிச்சைத் தேவைப்படுகின்றன. இந்தச் சிகிச்சை விருப்பங்களில், மருந்து, உடல் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவைகளும் அடங்கும்.
கீல்வாதத்திற்கான சிகிச்சை முறையில் முதன்மை இடத்தைப் பிடிப்பது மருந்துகள் ஆகும். இது கீல்வாதத்துடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உடல் சிகிச்சை, அடுத்த நிலையில் உள்ளது. இது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட மூட்டுகளைச் சுற்றி உள்ள தசைகளை வலுப்படுத்தவும், இயக்க வரம்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
கீல்வாத பாதிப்பிற்குச் சிகிச்சை அளிப்பதற்கான கடைசி முயற்சியாக, அறுவைச் சிகிச்சை உள்ளது. மருந்து, உடல் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கத் தவறும்பட்சத்தில், சேதமடைந்த மூட்டுகளைச் சரிசெய்யவும், அதிகச் சேதமடைந்திருப்பின் அதனை மாற்றி அமைக்கவும் அறுவைச் சிகிச்சை, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதும், மூட்டுகளை ஆரோக்கியமான பராமரிப்பது மட்டுமே கீல்வாத பாதிப்பைத் தடுப்பதற்கான சிறந்த வழிமுறை ஆகும்.
கீல்வாத பாதிப்பைத் தடுக்கும் வகையிலான தடுப்பு முறைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
- உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் – தினமும் தவறாமல் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம், மூட்டுகள் வலிமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கின்றன.
- ஆரோக்கியமான உணவுமுறை – ஆரோக்கியமற்ற உணவுமுறையை மேற்கொள்பவர்களுக்கு, உடல் முழுவதும் வீக்கங்கள் அதிகரிக்கும், இது கீல்வாத பாதிப்பிற்கு வழிவகுப்பதாக உள்ளது.
- மூட்டுக்காயங்களைத் தவிர்க்கவும் – மூட்டுப்பகுதிகளில் அதிக அழுத்தத்தை உண்டாக்குதல், கீழே விழக்கூடிய வாய்ப்புகள் உள்ளிட்டவைகளின் மூலம், மூட்டுப்பகுதிகளில் காயங்கள் ஏற்படலாம். அத்தகைய நிகழ்வுகளைக் கூடுமானவரைத் தவிர்க்க வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனைகள் – சிறந்த மருத்துவரைக் கலந்தாலோசிப்பதன் மூலம், அவர்ப் பரிந்துரைக்கும் பரிசோதனைகளைச் சரியாக மேற்கொண்டு, கீல்வாத பாதிப்பை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழிமுறைகளை மேற்கொள்ளும்பட்சத்தில், பெரும்பாதிப்பினைத் தவிர்க்க இயலும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, கீல்வாத பாதிப்பில் இருந்து பூரணமாக நலம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…