• Home/
  • Healthdesign Team
A persons hand holding a writing pad with the term FITNESS GOALS mentioned on it and other hand holding a pen.

யதார்த்தமான உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்தல்

நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிப்பவைகளில் முதலிடம் யாருக்குத் தரலாம் என்று கேட்டால், உடற்பயிற்சிகள் என்று எவ்விதத் தயக்கமும் இன்றிச் சொல்ல முடியும். ஆனால், எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள், நம்மை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு போய் சேர்த்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை. இலக்கு நிர்ணயித்தல் என்பது எளிமையான நடவடிக்கைதான் என்றபோதிலும், இது விளையாட்டு உளவியல் பிரிவில் முக்கியமான கருவியாக அமைகின்றது. இலக்கு நிர்ணயிக்கும் நிகழ்வு என்பது உங்களது ஊக்கம் மற்றும் [...]

A healthy looking old man running or jogging at park.

No Gym – உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளச் சில வழிகள்

ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது ஜிம்மிற்குச் செல்லச் சோம்பேறித்தனம் படுகிறீர்களா? பணிச்சுமையால், ஜிம்மிற்குச் செல்ல முடியவில்லையா? ஜிம்மிற்குச் செல்ல முடியாததால், உடலின் கட்டுக்கோப்பு சீர்குலைந்து விடும் என்ற வருத்தம் உங்களை வாட்டுகிறதா? இத்தகைய சூழ்நிலைகளால் அவதிப்பட்டு வருபவர்களும், தங்களது உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும். இது சாத்தியமில்லை என்கிறீர்களா? சாத்தியப்படுத்துகிறோம். அதுவும் ஜிம்மிற்குச் செல்லாமலேயே, உங்களது உடலை, நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். [...]

A doctor touching the word VITAMIN D on a virtual screen in front of him.

இந்தியப் பெண்களும், வைட்டமின் D குறைபாடும்…

வைட்டமின் D குறைபாடு – அறிமுகம் வைட்டமின் D குறைபாடு, இந்தியாவில் மிகப்பெரிய பொதுச் சுகாதாரப் பேசுபொருளாக மாறி உள்ளது. இது, குறிப்பாக, பெண்களிடையே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 90 சதவீத அளவிலான இந்தியப் பெண்கள், வைட்டமின் D சத்தை, சூரிய ஒளியிடமிருந்தோ மற்றும் உணவுமுறைகளில் இருந்தோ பெறுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வைட்டமின் D சத்து எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் [...]

A vector image of a depressed man sitting on the floor supporting his head with a hand and an illustration of his stress shown as a shadow image.

இந்தியர்களிடையே காணப்படும் ஃலைப்ஸ்டைல் நோய்கள்

மக்கள்தொகையில், மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மக்கள்தொகை 1.2 பில்லியன் என்ற அளவில் உள்ளது. நாட்டு மக்களிடையே, மாறிவரும் வாழ்க்கைமுறையின் காரணமாக, வாழ்க்கைமுறைத் தொடர்பான நோய்கள், அதிக அளவில் உள்ளன. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, போதிய அளவிலான மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக, தொற்று நோய்களின் பாதிப்பு ஆபத்தான அளவில் உள்ளது.இவைகள் நாள்பட்ட நோய்களாக [...]

A woman avoiding food allergens - fish, seafood, dairy, peanuts, tree nuts, eggs, chocolate, wheat, soy and citrus fruits kept on a table.

உங்களைப் பலவீனமாக்கும் உணவு – இவைகள் தானா?

உங்களது உடல் அடிக்கடி பலவீனமாவது போல் உணர்ந்தால், உடல் சில உணவு வகைகளை ஏற்றுக் கொள்வது இல்லை என்று பொருள். சில் உணவு வகைகளை, நம் உடல் ஏற்றுக் கொள்ளாததனால், சகிப்புத்தன்மையற்ற நிலை உருவாகிறது. இத்தகைய உணவு வகைகளை அடையாளம் கண்டு, அவைகளைத் தவிர்க்க வேண்டும். சிறிது இடைவெளிக்குப் பிறகு, அந்த உணவு வகைகளை மீண்டும் சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்பட்டால், அவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.இந்த உணவு வகைகள், சகிப்புத்தன்மை [...]

Rear view of a female radiologist sitting in a control room watches at monitors with displayed brain scans results.

PET ஸ்கேன் சோதனை சிறந்தது ஏன்?

PET ஸ்கேன் என்பது மருத்துவர்களால் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலான படச் சோதனை முறை ஆகும். இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகள், மூளையில் ஏற்படும் நோய்கள், புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த குறைபாடுகளுக்காக, நீங்கள் மருத்துவமனைச் செல்ல நேரிட்டால், மருத்துவர் உங்களுக்கு PET ஸ்கேன் முறையையே பரிந்துரைச் செய்வார். பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகளின் பரவல், அதன் தற்போதைய நிலைகள் குறித்து மருத்துவர்கள் எளிதில் அறியும் வண்ணம், இந்தச் சோதனை [...]

Raw food - organic vegetables, fresh fruits kept in different bowls with a writing pad contatning the word meal planner and 2 pens kept next to it.

மீல் பிளானர் என்றால் என்ன – முக்கியத்துவம் அறிவோமா?

ஆரோக்கியமான உணவுமுறை அனைவருக்கும் கிடைக்கும் நோக்கிலும், சைவ உணவின் மகத்துவத்தை அனைவரும் அறியும் வகையிலும் உருவாக்கப்பட்டதே, மீல் பிளானர் நடைமுறை ஆகும். சைவ உணவு முறையால் ஆற்றல், செரிமானம், நேர்மறை எண்ணம், உணர்திறன் போன்ற நற்பண்புகள் மேம்படுகின்றன.இத்தகைய சிறப்புவாய்ந்த சைவ உணவு முறையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் பொருட்டு, இதை, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நவீனமயமாக்கி உள்ளனர். வாராந்திர உணவுத் திட்டம் ஊட்டச்சத்து இலக்குகளைக் கண்காணிக்கவும், சமையல் நேரத்தை மிச்சப்படுத்தவும் [...]

Image of blue helix human DNA structure on a black background.

மரபியல் அடிப்படையிலான தனிப்பட்ட உணவுத்திட்டங்கள்

நீங்கள் ஜிம்மில் வேர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சிகள் செய்துவந்த போதிலும், நீங்கள் விரும்பும் உடற்கட்டு வரவில்லையேன்னு வருத்தப்படுகிறீர்களா? அதற்கு உங்கள் உடலில் உள்ள DNA எனும் மரபணு தான் காரணம் என்பதை அறிவீர்களா? சிலர் சத்தான உணவு உண்டும் எடை கூடவில்லை என்கின்றனர். மற்றவர்கள் உடற்பயிற்சி செய்தும், உணவுக் கட்டுப்பாடு கடைபிடித்தும் எடை குறையவில்லை என புலம்புகின்றனர். நீங்கள் எந்த உடற்தோற்றத்தில் இருக்கின்றீர்கள், இருக்கப் போகின்றீர்கள் என்பதற்கு, நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையைவிட, [...]

Image of a technologis preparing an adult woman lying on a sliding table for a CT scan.

CT ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?

PET ஸ்கேன், உடலின் உயிரியல் செயல்பாடுகளைப் படம்பிடிக்கக் கூடிய செயல்முறை ஆகும். நமது உடலில் நிகழும் அசாதாரண குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும், சிறிய உயிரியல் மார்க்கரைக் கொண்டு கண்டறியலாம். புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், PET ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்.. PET ஸ்கேன் என்றால் என்ன? பாசிட்ரான் எமிஷன் [...]

மனநல மதிப்பீடுகளின் முக்கியத்துவம் அறிவோமா?

மனநோய், உளவியல் குறைபாடுகள், மற்றும் மனநலச் சிக்கல்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனநல உதவிகள் தேவைப்படுகின்றன.வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது சிந்தனைகளும் உணர்வுகளும் அமைவதற்கு மன ஆரோக்கியமே அடிப்படை. உடலும், மூளையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இரண்டும் ஒருசேர இயங்கினால் மட்டுமே, உடல் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். நாம் நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், மனநலம் குறித்த தரவுகளைக் கண்காணிக்கவும் மனநல மதிப்பீடுகள் உதவுகின்றன. தன்னம்பிக்கை, நல்வாழ்க்கை, சுயமரியாதை [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.