Blood pressure monitor, apple, and dumbbell on a green mat, representing health and balance.

இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஆயுர்வேத மருத்துவம்

இதய நோய்ப்பாதிப்புகள் ஏற்பட ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணியாக உள்ளது. சர்வதேச அளவில் 1.12 பில்லியன் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 4 ஆண்களில் ஒருவருக்கும், 5 பெண்களில் ஒருவருக்கும் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் பல உறுப்புகளைப் பாதிக்கிறது. இது இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றில் நோய்களை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகும்.

ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு, உடனடி மற்றும் தொடர்ச்சியான சிகிச்சைகள் தேவை என்பதால், இந்தப் பாதிப்பிற்கு உள்ளான பெரும்பாலானோர், ஆயுர்வேதச் சிகிச்சை முறைக்கு மாறி வருகின்றனர்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்த பாதிப்பு என்பது, உடலின் தமனிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை என்று வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் உடலில், ரத்தம், தமனியின் சுவர்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதன்காரணமாக, இதயம் உடலுக்குத் தேவையான ரத்தத்தைப் பம்ப் செய்ய, மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகிறது.

உடல் ஆரோக்கியம் மற்றும் சீரான வாழ்க்கைமுறைக்கு, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது அளவிடுவதும், அதைச் சரியான அளவிற்குப் பேணிக்காப்பதும் இன்றியமையாததாக உள்ளது. இரத்த அழுத்த அளவீடானது சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் எனும் இரண்டு அளவீடுகளால் குறிக்கப்படுகிறது. இதில் சிஸ்டாலிக் அழுத்தம் உயர் எண் மதிப்பிலும், டயஸ்டாலிக் அழுத்தம், குறைந்த எண் மதிப்பாலும் மதிப்பிடப்படுகின்றன.

இரத்த அழுத்த வகை  சிஸ்டாலிக் அழுத்தம்

(mm/hg)

டயஸ்டாலிக் அழுத்தம் (mm/hg)
இயல்புநிலை 120க்கும் குறைவு 80க்கும் குறைவு
ஏற்ற நிலை 120 – 129 80க்கும் குறைவு
அதிக ரத்த அழுத்தம்
நிலை 1 130 – 139 80 – 89
நிலை 2 140 மற்றும் அதற்குமேல் 90 மற்றும் அதற்குமேல்
அதிகப் பாதிப்பு நிலை 180க்கு மேல் 120க்கு மேல்

ஹைபர்டென்சன் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

முதுமை, வயதுமூப்பு உள்ளிட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்போது, அது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. சிலருக்கு, மரபணு மாறுபாடுகளின் காரணமாகவும், உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

  • உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்
  • போதிய உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலை
  • அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுதல்
  • உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்
  • புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம்
  • மன அழுத்த பாதிப்பு
  • பொட்டாசியம் குறைபாடு உள்ளிட்ட காரணங்கள் ஆகும்.

அறிகுறிகள்

உயர் ரத்த அழுத்த பாதிப்பு என்பது, அமைதியானது ஆகும். இது இருப்பதற்கான அறிகுறிகளை உடனடியாக வெளிப்படுத்துவதில்லை.

  • மிதமானது முதல் மிகத் தீவிரமான தலைவலி
  • மூக்கில் இருந்து ரத்தம் வடிதல்
  • அதிகப் படபடப்பு உணர்வு
  • அதீதக் கவலை
  • மூச்சுத்திணறல்
  • கழுத்துப் பகுதியில் துடிப்பு

இந்த அறிகுறிகள் பொதுவானவைத் தான் ஆகும். இவைகள் இருப்பதாலேயே ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. இவை மற்ற நோய்ப்பாதிப்புகளின் அறிகுறிகளாகவும் கூட இருக்கலாம். மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடப்பது சிறந்தது.

ஹைபர்டென்சன் பாதிப்பு – நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள்

இரத்த அழுத்தத்தை BP மானிட்டரின் மூலம் கணக்கிட முடியும். முழங்கைப்பகுதியில் சுற்றுப்பட்டையை இறுக்கமாகக் கட்டி, ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது. இரத்த அழுத்தம் mm/hg என்ற அலகால் அளவிடப்படுகிறது.

சிகிச்சைகள்

உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிக்க, பல்வேறு மருந்து முறைகள் உள்ளபோதிலும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே, இதற்கு நிரந்தரமான தீர்வை வழங்குகிறது.

இதய நலனிற்கு ஏற்ற உப்பு இல்லாத உணவுகளைச் சாப்பிடுதல்

உடலின் வலிமையை அதிகரிக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்

ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகித்தல்

உறக்கச் சுழற்சியை மேம்படுத்தி, தினசரி 7 முதல் 9 மணி நேரம் உறங்குதல்

சரியான வாழ்க்கைமுறை உடன் மருந்துகளையும் உட்கொள்ளும்பட்சத்தில், விரைவில் நிவாரணம் பெற இயலும்.

மேலும் வாசிக்க : உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஒரு முழு அணுகுமுறை

உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு எவ்வித மருந்துமுறைகளும் மேற்கொள்ளாமல், வீட்டிலேயே தீர்வு காணும் வழிமுறைகள்

சில வீட்டு வைத்தியங்கள், மருந்து மாத்திரைகள் இல்லாமல், ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சில தருணங்களில், நோய்ப்பாதிப்பானது நாள்பட்டதாக மாறும்போது, மருந்து முறைகள் மற்றும் சரியான சிகிச்சைமுறை அவசியமாகிறது.

உப்பு உட்கொள்ளலைக் குறைத்தல்

உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஹைபர்டென்சன் பாதிப்பில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இன்றைய நவநாகரீக உலகில், மக்கள் உணவில் அதிகளவு உப்பைச் சேர்த்துக் கொள்கின்றனர். நாளொன்றுக்கு 1,500 முதல் 2,300 மில்லிகிராம் உப்பு பரிந்துரைக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் 3,500 மில்லிக் கிராம் அளவிற்கு மேல், சாப்பிடுகின்றனர்.

DASH உணவுமுறை

பழ வகைகள், காய்கறிகள், முழுத் தானியங்கள், குறைந்த உப்பு கொண்ட உணவு வகைகளை DASH உணவுமுறைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. இந்த உணவுமுறையானது, உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

வழக்கமான உடற்பயிற்சிகள்

உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி முக்கியப் பங்களிக்கிறது. உடற்பயிற்சியைத் தவறாமல் மேற்கொள்வதன் மூலம், இதயம் அதிகளவிலான ரத்தத்தைப் பம்ப் செய்கிறது. இதன்மூலம், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், உடலின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள், இதய நலனுக்கு உகந்த பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்த பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்கிறது. புதிய ரத்தநாள உருவாக்கத்திற்கும் உதவுகின்றன.

உணவுகள் மற்றும் பானங்கள்

பாசிப்பருப்பு, மீன் எண்ணெய், இளநீர், தேன், தர்பூசணி உள்ளிட்ட உணவு வகைகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C அதிகம் உள்ளன். இந்த உணவு வகைகள், உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உயர் ரத்த அழுத்த பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கிறது.

ஆயுர்வேத முறையில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் முதன்மையானதாக ஆயுர்வேத மருத்துவம் விளங்கி வருகிறது. இந்த மருத்துவ முறை, உடலை முழுமையாக அணுகி மருத்துவ சிகிச்சைகளை வழங்குகிறது. சர்வதேச அளவில் மிக அதிகமான மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ள வாழ்க்கைமுறை நோய்ப்பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகளைச் சிறப்பாக நிர்வகிக்க, பாரம்பரிய மருத்துவமுறையானது பேருதவி புரிகிறது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிப்பதற்கு, ஆயுர்வேத மருத்துவத்தில் மருத்துவ முறைகள் மற்றும் பரிசோதனைகள் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில், ஹைபர்டென்சன் பாதிப்பானது, நோய்ப்பாதிப்பாகப் பார்க்கப்படுவது இல்லை. திரிடோஷா என்ற வியூகத்தைப் பயன்படுத்தி, அது ஒரு உடலின் சமநிலையற்ற தன்மையாகப் பார்க்கப்படுகிறது. திரிடோஷா என்பது, பித்தம், வாதம் மற்றும் கபம் என மூன்று தோஷங்களைக் குறிக்கிறது.

  • வாத தோஷம்: இது உடலில் இயக்கத்தை நிர்வகிக்கிறது, மேலும் அது மோசமடையும் போது, இரத்த ஓட்டத்தில் ஒழுங்கற்ற செயல்பாட்டை ஏற்படுத்துகிறது. , இது ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கிறது.
  • பித்த தோஷம்: உடலில் நிகழும் மாற்றங்கள் மற்றும் செரிமான செயல்முறைகள் உட்பட வளர்சிதை மாற்றம் மற்றும் வெப்பத்தைப் பித்த தோஷமானது கட்டுப்படுத்துகிறது. இது மோசமடையும் போது, அது வெப்பம் மற்றும் தீவிரத்தின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது, இதன்காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
  • கப தோஷம்: உடலில் நிலைத்தன்மை மற்றும் உயவுநிலைக்குக் கபம் பொறுப்பு ஏற்பதாக உள்ளது. கபத்தின் ஏற்றத்தாழ்வு நிலையானது, மந்தநிலைக்கு வழிவகுக்கிறது. இது உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்டவகளுக்கு வழிவகுக்கிறது. இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்குக் கூடுதல் சுமையை வழங்குவதன் மூலம், உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Ashwagandha roots and powder in a bowl on a wooden surface, symbolizing Ayurvedic herbs.

ஆயுர்வேத மூலிகைகள்

  1. அஷ்வகந்தா: இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன்மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கிறது
  2. திரிபலா: உடலில் ஏற்படும் அழற்சிகளைக் குறைக்க உதவுகின்றது, இதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க ஆவனச் செய்கிறது.
  3. துளசி (பசில்): துளசியில் ஆன்டி-ஆக்சிடண்ட் அதிகளவில் உள்ளது. இது உயர் ரத்த அழுத்த பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  4. சீரகம்: சீரகத்தில் உள்ள தைமோல் மற்றும் குமினால்டிஹைட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள், உயர் ரத்த அழுத்த பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன.
  5. அர்ஜுனா: இது இரத்த குழாய்களை மெல்லியதாக மாற்றி, உயர் ரத்த அழுத்த பாதிப்பினைச் சிறந்த முறையில் நிர்வகிக்கிறது.

ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள்

  1. பஞ்சகர்ம சிகிச்சை: உடலை முழுமையாகத் தூய்மைப்படுத்த, இந்தச் சிகிச்சைமுறை உதவுகிறது. இதில் உள்ள வாமன, விரேசனம், பஸ்தி, நஸ்யா மற்றும் ரக்தமோக்ஷணம் சிகிச்சை முறைகள், உடலில் உள்ள அழற்சிகளைக் கட்டுப்படுத்தி,மன அழுத்தத்தைக் குறைகிறது.
  2. விரேசனம்: இது பித்த தோஷத்தைக் குறைக்கும் சிகிச்சை முறையாகும். உடலின் அழற்சிப்பாதிப்பைக் குறைத்து, மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்கிறது.
  3. சிரோதாரா: இந்தச் சிகிச்சை முறையில், தலைப் பகுதியில் மருத்துவ எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், மன அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  4. அபயங்கா: இந்த முறையில், எண்ணெய் மசாஜ் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தப்படுவதுடன், மன அழுத்தம் குறைந்து, உயர் ரத்த அழுத்த பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட ஆயுர்வேத மருத்துவ முறைகளை, கவனமாகப் பின்பற்றி, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.