நடத்தைச் சிகிச்சை முறை – அறிந்ததும் அறியாததும்…
நடத்தைச் சிகிச்சை முறை என்பது நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சிகிச்சைமுறைச் சுற்றுப்புறத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது.நடத்தையில் மாற்றங்களைக் கொண்டுவர, அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது நல்லது. நடத்தைச் சிகிச்சை முறையில் உள்ள சிக்கல்களைக் கண்டறிய, சிகிச்சையாளர்கள், செயல்பாட்டுப் பகுப்பாய்வு முறையினைப் பயன்படுத்துகின்றனர்.
குழந்தைக்கு உணவூட்டுவது சவாலானது. உணவு மறுக்கும் குழந்தைக்குச் சாக்லேட் போன்ற வெகுமதிகள் வழங்கலாம்.இந்த நிகழ்வானது, நாம் விரும்பும் நடவடிக்கையான குழந்தை உணவு உண்ணுதலை ஊக்குவிக்கிறது. நாம் அளிக்கும் வெகுமதியானது, குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும். நமது விருப்பங்கள் நிறைவேறும்பட்சத்தில், வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். குழந்தை, அந்த வெகுமதிக்காகவே, உணவைச் சாப்பிட்டு முடிக்கும். பின் சிறிதுசிறிதாக, வெகுமதியை நிறுத்திக் கொண்டுவர வேண்டும்.
நடத்தைக் குறைபாடுகளுக்கான அறிகுறிகள்
அதீதக் கோபம், விரோதம் உள்ளிட்டவை, குழந்தைகளிடையே காணப்படும் சில எதிர்மறை நடத்தைகள் ஆகும். இத்தகைய காரணிகள், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்பட்சத்தில், சிறந்த நிபுணரின் உதவியை நாடுவது அவசியம் ஆகும்.
அறிகுறிகளைப் பொறுத்து, நடத்தைக் குறைபாடுகள் வேறுபடுகின்றன. நடத்தைக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளாவன…
- பிறர்மீது வெறுப்பு கொள்ளுதல்
- அடிக்கடி கோபப்படுதல்
- மற்றவர்களை அடித்து துன்புறுத்துதல்
- கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்
- தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்
- புறங்கூறுதல்
- திருட்டு உள்ளிட்ட விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
- நடத்தைச் சிகிச்சைமுறையால் யாருக்குப் பலன்?
- அதீதக் கவலை உணர்வு
- மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்
- கவனக்குறைவு சார்ந்த ஹைபர் ஆக்டிவிட்டி பாதிப்பு
- ஆட்டிஸம் பாதிப்பு கொண்டவர்கள்
- மன இறுக்கப் பாதிப்பு உடையவர்கள்
- பயம் சார்ந்த பாதிப்புகள்
இந்தப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடத்தைச் சிகிச்சை முறையானது, மேம்பட்ட மற்றும் செயல்சார்ந்த அணுகுமுறையை வழங்குகிறது. இது மனஅழுத்த மேலாண்மை, கோபத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களைக் களையவும் உதவுகிறது.
நடத்தைச் சிகிச்சை முறையின் வகைகள்
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை
CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைமுறையானது, நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் எவ்வாறு நடத்தைகளைப் பாதிக்கின்றன என்பதை, சிகிச்சையாளர்களுக்கு உணர்த்துகின்றது.
நடத்தைச் சிகிச்சையானது செயல்முறைகளையும், அறிவாற்றல் சிகிச்சைமுறையானது சிந்தனை முறைகளையும் வலியுறுத்துகின்றன. சிகிச்சையாளர், சாத்தியமற்ற எண்ணங்களைத் தொடர்ந்து கூறிவருவதன் மூலம், எதிர்மறைச் சிந்தனையைச் சமாளிக்க உதவுகிறார். இவ்வகையான நடத்தைச் சிகிச்சை முறையானது கோபம், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்குத் தீர்வை வழங்குகிறது.
CBPT எனப்படும் அறிவாற்றல் நடத்தை விளையாட்டுச் சிகிச்சை
இந்தச் சிகிச்சையானது, அறிவாற்றல் மற்றும் நடத்தைக் கோட்பாடுகளை இணைக்கும் வகையிலான சிகிச்சை முறையாகும்.
CBPT என்பது அறிவாற்றல் மற்றும் நடத்தைக் கோட்பாடுகளை இணைக்கும் ஒரு விளையாட்டு சிகிச்சையாகும்.
ஒரு குழந்தை விளையாடுவதை, சிகிச்சையாளர் பார்க்கிறார். குழந்தை, சிலவிதமான செயல்களை மேற்கொள்ளும்போது, சிரமப்படுவதைக் கவனிக்கிறார். குழந்தையால், என்ன நிகழ்வை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்பதைச் சிகிச்சையாளர் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. கோபம், கொடுமை, கல்வி, குடும்பப் பிரச்சினைகள், இழப்பு, கவனக்குறைபாடு போன்ற பாதிப்புகளால் துன்பப்படும் குழந்தைகளுக்கு இச்சிகிச்சை உதவுகிறது.
பொறுப்புணர்வு சிகிச்சை முறை
பொறுப்புணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் சிகிச்சைப் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஏற்கவும், அதன் எதிர்வினைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், நடத்தை நிகழ்வில் பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பைப் பெறுவதால், நேர்மறையான வாழ்க்கை என்பது இங்கு சாத்தியமாகிறது.
DBT எனப்படும் இயங்கியல் நடத்தைச் சிகிச்சை
DBT சிகிச்சை முறையானது, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையை அடிப்படியாகக் கொண்டது ஆகும்.
அறிவாற்றல் சிகிச்சைமுறையில், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதன் மூலம் இலக்குகள் எட்டப்படுகின்றன. DBT சிகிச்சையில், மிகவும் கட்டமைக்கப்பட்ட வழிகள் பின்பற்றப்படுகின்றன. ஞாபகச் சக்தி, ஏற்றுக் கொள்ளுதல், செயல்திறன் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைகளில் போதிய கவனம் செலுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்டவர்ப் பூரணநலம் பெறுகிறார்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான நடத்தைகள் மற்றும் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக விளங்கும் நடத்தைகள் உள்ளிட்டவைகளை அடையாளம் காண, DBT சிகிச்சைமுறை உதவுகிறது. இந்தச் சிகிச்சைமுறையின் குறிக்கோள், பாதிக்கப்பட்டு உள்ளவருக்கு, அரத்தமுள்ள வாழ்க்கைமுறையை உருவாக்குவதே ஆகும்.
மேலும் வாசிக்க : நடத்தையியல் சிகிச்சையின் வகைகள் மற்றும் பயன்கள்
நடத்தைச் சிகிச்சைமுறையானது உரிய பலனை அளிக்கிறதா?
- கோப உணர்வு சார்ந்த பிரச்சினைகள்
- கவலை உணர்வு
- மன இறுக்கப் பாதிப்பு
- மன அழுத்த பாதிப்பு
- உள்ளிட்ட பாதிப்புகளுக்குத்தீர்வு வழங்குவதில் நடத்தைச் சிகிச்சை முறைகள் பேருதவி புரிகின்றன.
கருத்தில் கொள்ள வேண்டியவை
நடத்தைச் சிகிச்சை முறையில் பல்வேறு நன்மைகள் உள்ளபோதிலும், இந்தச் சிகிச்சையின் அணுகுமுறைகள், சிறந்த தீர்வாக அமைந்தது இல்லை. இந்தச் சிகிச்சையைத் துவங்குவதற்கு முன்பாக, சில விசயங்களை நாம் கருத்தில் கொள்வது அவசியம் ஆகும்.
சிக்கலான மனநலப் பிரச்சினைகளுக்கு இது உகந்ததல்ல
மனச்சிதைவு, மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, பிற மருத்துவச் சிகிச்சைகளுடனேயே, நடத்தைச் சிகிச்சையானது பயன்படுத்தப்படுகிறது. நடத்தைச் சிகிச்சை முறையானது, மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமாகக்காரணிகளைவிட, அதன் செயல்பாட்டுச் சிக்கல்களிடையே போதிய கவனத்தைச் செலுத்துகின்றன.
முழு விளக்கத்தையும் தருவதில்லை
நடத்தைச் சிகிச்சை முறையின் அணுகுமுறைகள், தனிநபரை மையப்படுத்தியது ஆகும். இந்த அணுகுமுறைகள் சூழ்நிலைகள் எவ்வாறு பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றது.
நடத்தைச் சிகிச்சை முறையைக் கவனமாகப் பின்பற்றி, மனநலப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…