The term cognitive behavioural therapy displayed on a blue background with a needle and stethoscope kept around.

மன அழுத்த நிர்வாகத்தில் CBT-யின் நன்மைகள்

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைமுறையானது, நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். இது எதிர்மறைச் சிந்தனை முறைகள் மற்றும் நடத்தைகளை அடையாளம் காணவும், சவாலான நிலைமைகளைச் சமாளிக்கவும் உதவுகிறது. உணர்ச்சிகளைப் பாதிக்கும் எண்ணங்களை அடையாளம் கண்டு, மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்ற உடல்நலச் சிக்கல்களைச் சமாளிக்க உதவுகிறது.அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைமுறை உணர்ச்சிகளைப் பாதிக்கும் எண்ணங்களை அங்கீகரித்து, சிகிச்சையளித்து, யதார்த்தமான சிந்தனையாக மாற்றுகிறது.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது, மன அழுத்த அனுபவங்களை நிர்வகிக்க உதவுகிறது..

மன அழுத்தம் என்பது நம் வாழ்வில் எப்போதும் தவிர்க்க முடியாத ஒரு உணர்வுநிலை ஆகும். மன அழுத்த பாதிப்பானது, சிறிய அளவினதாக இருக்கும்போது, அதனை இயன்ற வகையில் நிவர்த்தி செய்துவிட முடியும். அதுவே, அதன் அளவு அதிகரிக்கும் போது, நம் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது.

நாள்பட்ட மன அழுத்தத்திற்கான காரணங்கள்

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி

மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்கள், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துவதன் மூலம்,, உடலுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இதன்காரணமாக, நோய்த்தொற்றுக்கள் மற்றும் பலவிதமான நோய்ப்பாதிப்புகளுக்கு நாம் உள்ளாகும் சூழ்நிலை உருவாகிறது.

போதிய அளவிலான உறக்கம் இல்லாமை

மனதில் அலைபாயும் தேவையற்ற எண்ணங்களினால், இரவில் சரியாக உறங்க முடியாமல் தவிக்கும் நிகழ்வும், தீவிரமான மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடும்.

Infographic images of signs and symptoms displayed around the image of a depressed woman.

 

மனச்சோர்வு பாதிப்பு

தொடர்ந்து மன அழுத்த பாதிப்பில் இருப்பவர்களுக்கு, மனச்சோர்வு அல்லது பதட்டம் உள்ளிட்ட மனநலக் குறைபாடுகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சிந்தனைத்திறனில் பாதிப்பு

மன அழுத்த பாதிப்பு காரணமாக, உடலில் கார்டிசோல் ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் மூளையில் உள்ள நினைவகப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கடுமையான மன அழுத்த நிகழ்வானது முடிவெடுக்கும் திறன் மற்றும் செறிவு திறன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மோசமான சமாளிக்கும் திறன்கள்

மன அழுத்த பாதிப்பு அதிகரிக்கும் போதோ அல்லது தீவிர மன அழுத்தத்தில் இருக்கும்போதோ, அதிகப்படியான மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தைச் சிலர் நாடுகின்றனர். அது அவர்களின் உடல்நலத்தில் மேலும் பாதிப்பையையே ஏற்படுத்தும் என்பதை அவர்கள் எளிதாக மறந்து விடுகிறார்கள்.

மன அழுத்த நிர்வாகத்தில் CBT சிகிச்சையின் நன்மைகள்

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை மன அழுத்தம் உள்ளவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்மைப் பயக்கிறது.

மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிற நடத்தைக் குறைபாடுகளுக்கு மலிவான சிகிச்சை முறைகளைத் தேடுகிறீர்களா? அப்படியெனில், அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது சிறந்த தேர்வாக இருக்கும்.

மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில், இந்த CBT சிகிச்சைக்குக் குறுகிய கால அளவே தேவைப்படுகிறது. 5 முதல் 20 வாரக் கால அளவிலான இந்தச் சிகிச்சையின் ஒவ்வொரு அமர்வும் 30 முதல் 60 நிமிடங்கள் அளவினதாகவே இருக்கும்.

மற்ற சிகிச்சைகளைப் பெறுபவர்கள், தங்களது பழைய நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆனால், அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறைகள் நீண்டகால பலன் அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட மற்ற சிகிச்சைகளை ஒப்பிடும்போது, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது மிகுந்த பலன் அளிப்பதாக உள்ளது.

CBT சிகிச்சை அமர்வுகளின் போது கற்றுக்கொள்ளும் திறன்களை, நீங்கள் நம் வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். CBT சிகிச்சையை மேற்கொண்டவர்கள், எவ்விதமான சூழ்நிலைகளையும் கையாளும் திறன்களைப் பெற்றவர்களாக மாறுகின்றனர்.

மன அழுத்தம் உள்ளவர்களின் எதிர்மறையான சிந்தனைகளை மாற்றி, அவர்களை அமைதிப்படுத்த அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை உதவுகிறது.

எதிர்மறையான மனநிலையானது, அந்தக் குறிப்பிட்ட நபரின் தன்னம்பிக்கையையும், மதிப்பையும் சீர்குலைப்பதாக உள்ளன. இந்த எதிர்மறை மனநிலையானது, விரும்பத்தகாத நிகழ்வுகளில் இருந்து உருவாகிறது. அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறையானது, இந்த முறையை மாற்றி அமைப்பது மட்டுமல்லாது, சொந்தத் திறன்களில் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக உள்ளது.

மேலும் வாசிக்க : உணவுத்திட்டமிடல் செயலிகளின் நன்மைகள்

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது அதிக நெகிழ்வுத்தன்மைக் கொண்டதாக உள்ளது. இந்தச் சிகிச்சையை, சிகிச்சை வழங்குநரை நேரில் சந்தித்துப் பெறுவது மட்டுமல்லாது, ஆன்லைன் முறையிலும் பெற இயலும். அதேபோன்று, தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்தும் இந்தச் சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறையினைச் சிறப்பாகப் பின்பற்றி, மன அழுத்த பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ்வீராக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.