உணவுத்திட்டமிடல் செயலிகளின் நன்மைகள்
நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், எலெக்ட்ரானிக்ஸ் துறையின் முன்னணி நிறுவனமான சாம்சங், ‘Food’ எனும் செயற்கை நுண்ணறிவு உணவுத்திட்டமிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உணவுத்திட்டமிடல் செயலியின் முக்கிய நோக்கம் யாதெனில், தனிப்பயனாக்கப்பட்ட சமையலறை உதவியாளராகப் பணியாற்றுவதே ஆகும். இது பயனர்கள், புதிய உணவு வகைகளைக் கண்டறியவும், வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டங்களை உருவாக்கவும், சமையலுக்குத் தேவையான பொருட்களை, ஆன்லைன் வழியாக எளிதாக ஆர்டர்ச் செய்யவும் உதவுகிறது.
Food செயலியின் முக்கிய அம்சங்கள்
Food செயலியானது, 8 மொழிகளில், 104 நாடுகளில் வசிக்கும் பயனர்களுக்குப் பயனளிக்கும் வகையில் 1,60,000 உணவு வகைகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன்களைப் பயன்படுத்தி, மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட ஆல் இன் ஒன் உணவு அனுபவங்களை வழங்குகிறது. இது பயனர்கள், நேரடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் Food செயலியானது, பரந்த அளவிலான சமையல் உபகரணங்களுடன், தடையின்றி ஒருங்கிணைக்கிறது. சமையல் வழிமுறைகளை, படிப்படியாக வழங்குகிறது, சமையல் செயல்முறையையும் மேம்படுத்துகிறது. பயனர்கள் அதற்கான கால அளவை மாற்றி அமைக்கவும், அடுப்புகளை முன்கூட்டியே சூடுபடுத்தவும், தேர்ந்தெடுத்த சமையல் குறிப்புகளின் அடிப்படையில் சமையல் அமைப்புகளைச் சரிசெய்யவும், இந்தச் செயலி பயன்படுகிறது.
தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப உணவு வகைகளை மாற்றி அமைக்கும் திறனானது, Food செயலியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று ஆகும். சாம்சங் நிறுவனம், 2019ஆம் ஆண்டில் பிரபலமான உணவு செயலியான விஸ்க்கைக் கையகப்படுத்தியது. இந்த உணவுச் செயலியானது, பயனர் விருப்பங்களைக் கற்றுக் கொள்ளவும், அதற்கேற்ப சமையல் குறிப்புகளை மாற்றி அமைக்கவும், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
நீங்கள் சைவ உணவுமுறையைத் திட்டமிட்டு இருந்தால், உங்களிடம் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு, உங்களுக்கு விருப்பமான உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்தச் செயலியானது உதவுகிறது.
Food செயலியின் திறன்கள் நம்பிக்கைக்கு உரியது தான் என்றபோதிலும், அதில் உள்ள சில பகுதிகள், புதியவர்களை, சமையல் நிபுணர்களாக மாற்றும் திறனில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. சமையல் கலை என்பது உள்ளுணர்வு மற்றும் அனுவபத்தைச் சார்ந்ததே அன்றி, தொழில்நுட்பத்தைச் சார்ந்தது அல்ல என்பதை மறந்துவிட இயலாது.
Food செயலியின் பிற வசதிகள்
இந்தச் செயலி பல வசதிகளை வழங்குகிறது. ஷாப்பிங் பட்டியல் உருவாக்குதல், உணவுத்திட்டங்கள் பரிந்துரைத்தல், இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தல் ஆகியவற்றை எளிதாக்குகிறது. மேலும், நவீன யுகச் சமையல் நிபுணர்களுக்குத் தேவையான விரிவான தீர்வுகளையும் வழங்குகிறது.
எதிர்கால திட்டங்கள்
சாம்சங் நிறுவனத்தின் Food செயலியானது, லட்சிய திட்டங்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. உடல் ஆரோக்கியம் சார்ந்த மதிப்பீடுகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக, சாம்சங் ஹெல்த் உடன் இது ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால், செயலியில் உள்ள கேமராவின் மூலம், உணவுப் பொருட்களை அடையாளம் கண்டு, அதில் உள்ள ஊட்டச்சத்துத் தகவல்களைத் தெரிவிக்கும் வசதியானது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. Food செயலியானது, தற்போதைய அளவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
HealthifyPro
HealthifyPro செயலியின் அம்சங்கள்
நிலையான குளுக்கோஸ் கண்காணிப்பு அல்லது CGM எனப்படுவது, குளுக்கோஸ் கண்காணிப்பு உபகரணமாகும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அளவிட உதவுகிறது. விரிவான உடற்பயிற்சி திட்டத்தைப் பின்பற்றுபவர்களின் ஒருமித்த தேர்வாக, HealthifyPro செயலி உள்ளது. இந்தச் செயலியில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கும் வசதி, ஸ்மார்ட் ஸ்கேல், புரோ திட்டம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இந்தச் செயலியானது, அதன் பயனர்களை, ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி, உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும் உதவுகிறது.
மேலும் வாசிக்க : தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையின் வெற்றிக் கதைகள்
HealthifyPro செயலியின் பயன்கள்
HealthifyPro செயலியானது, நீரிழிவு நோயாளிகளுக்கு, மறைமுகப் பயன்களை வழங்குகிறது. நீரிழிவு பாதிப்பு நோயாளிகளுக்கு, தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை, அவ்வப்போது அறிந்துகொள்வது அவசியமாகிறது. இதன்மூலம், அவர்கள், அவர்களின் உணவுப்பழக்கத்தைச் சரிசெய்யலாம். கலோரி நுகர்வைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க இயலும்.
HealthifyPro செயலி உடன், சென்சாருடன் இணைக்கப்பட்டவுடன், அது பயனர்களின் ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 முதல் 110 mg/dl அளவில் இருக்கும்போது, அதிக வளர்சிதைமாற்ற மதிப்பெண்கள் வழங்குகிறது.
உணவுத்திட்டமிடல் செயலிகளின் உதவிகொண்டு, ஊட்டச்சத்துமிக்க உணவுமுறையைப் பின்பற்றி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…