மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் உணவுகள்
கீல்வாத பாதிப்பின் அனைத்து வகைகளிலும், வீக்க உணர்வு முதன்மையானதாக உள்ளது. இந்த வீக்க உணர்வானது, வலிப் பாதிப்பு மற்றும் மூட்டுச் சேதத்தை உண்டாக்குகிறது. வீக்கத்தைத் தடுப்பதே இதன் முக்கிய குறிக்கோள்களாக இருப்பினும், இது சாத்தியமில்லாத நிகழ்வாக உள்ளது. மூட்டு வலியைக் குறைக்கும் வகையிலான உணவுமுறையில், அழற்சிப் பாதிப்பை எதிர்க்கும் வகையிலான ஊட்டச்சத்துகள், எலும்பு கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திசுக்களை வலுப்படுத்தும் வகையிலான ஊட்டச்சத்துகள் அதிகளவில் இடம்பெற வேண்டும்.
மூட்டு வலிக்கான உணவுமுறையில் அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்துகள்
மூட்டுகளில் ஏற்படும் அழற்சி பாதிப்புகள், உடலில் அதிகளவிலான சேதத்தை ஏற்படுத்துகின்றன. வீக்க உணர்வானது, மூட்டுப்புறணியை அதிகளவில் பாதிக்கிறது. நாள்பட்ட அழற்சிப் பாதிப்பானது லூபஸ், முடக்குவாதம், சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவைகளுடன் இணைந்தவாறு உள்ளது. எலும்பு சேதம் உள்ளிட்டவைக் கீல்வாதத்தின் அறிகுறியாக உள்ளது.மூட்டு வலிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், அது நாள்பட்ட மருத்துவ நிலைமையாக மாறும். இதனால் அழற்சிப் பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான மூட்டுச் சேதத்தை ஏற்படுத்தும்.
மூட்டு ஆரோக்கியத்திற்கும், மூட்டு வலிப்பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், உணவுமுறையின் பங்களிப்பு அளப்பரியது ஆகும். அழற்சி எதிர்ப்பு உணவுகள் என்று வரையறுக்கப்படும் உணவுகள், சில பண்புகளைக் கொண்டு உள்ளன. இந்த உணவு வகைகளில் அதிகளவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மக்கள் தற்போதைய உட்கொள்ளும் உணவுமுறைகளினால், இது மூட்டு வலி உள்ளிட்ட கடுமையான கீல்வாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
மூட்டு ஆரோக்கியத்திற்கு என்ன உணவுமுறை நல்லது?
மீன் வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இறைச்சி உணவு வகைகளைக் காட்டிலும், தாவர அடிப்படையிலான உணவுவகைகளையே சிறந்தது ஆகும்.
- வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்
- அடர்த்தியை அதிகரிக்க உதவும்
- இணைப்புத் திசுக்களை வலுப்படுத்தவும்
- ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிக்க உதவும்
- ஒட்டுமொத்த உடல் ஆரோக்கிய மேம்பாடு உள்ளிட்டவைகளை மேம்படுத்தும் வகையிலான உணவுமுறையைத் தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகும்.
மேலும் வாசிக்க : கீல்வாத பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகளை அறிவோமா?
மூட்டு ஆரோக்கியம் மற்றும் மூட்டு வலிப் பாதிப்பிற்கு உதவும் உணவுமுறை
சால்மன், டுனா, மத்தி உள்ளிட்ட மீன் வகைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் (பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்) உள்ளன. அவை வீக்க உணர்வைத் தடுக்கின்றன.
முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் மற்றும் பழங்களில் ஆந்தோசயனின்கள், லைகோபீன்கள் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை அழற்சியைக் கட்டுப்படுத்தும். தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ராஸ்பெர்ரி, ஆரஞ்சு, திராட்சைப் பழம் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இவை வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
சில வகை உணவுகள் வீக்கத்தைத் தடுப்பது போல, சில உணவு வகைகள், இந்தப் பாதிப்பை ஊக்குவிக்கவும் செய்கின்றன. இந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது ஆகும். இந்த உணவு வகைகள் அழற்சி பாதிப்பை ஏற்படுத்தி, மூட்டு வலி உள்ளிட்ட பிற கீல்வாத பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்த வகை உணவுகள், மூட்டுப்பகுதிகளில் விறைப்பு மற்றும் வலி உணர்வை அதிகரிக்கச் செய்கின்றன.
- எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்
- பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள்
- உப்பு
- மது வகைகள்
- சோளம், குங்குமப்பூ எண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் அல்லது ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கொண்ட எண்ணெய் வகைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மூட்டு வலிக்கான ஊட்டச்சத்து முறைகள்
கீல்வாத பாதிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகள்,சர்க்கரை அதிகம் கொண்ட இனிப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட உணவு வகைகள் நிறைந்த உணவுமுறையைப் பின்பற்றி மூட்டு ஆரோக்கியம் மற்றும் வீக்கப் பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று வளமான நல்வாழ்க்கையை வாழ்வோமாக…