உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் உணவு வகைகள்
நம் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளான புதிய செல்கள் உற்பத்தி, ஹார்மோன் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல் நிகழ்வுகளில் கொழுப்புகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நம் உடல், அதற்குத் தேவையான கொழுப்பைக் கல்லிரலில் இருந்து மட்டுமல்லாது பால் பொருட்கள், கோழிக்கறி, மாட்டுக்கறி உள்ளிட்ட உணவுவகைகளில் இருந்தும் பெறுகின்றன. அனைவரின் உடலிலும் தேவையான அளவு கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இது அதிகமாகும்போது, உடலுக்கு நன்மைப் பயக்கும் நிலையிலிருந்து தீங்கு விளைவிப்பனவாக மாறுகின்றன. உடலின் ரத்த ஓட்டத்தில் கொழுப்பும் [...]